Home
News

Paytm-க்கு கும்பிடு.. கெடு எதுக்கு.. சேர்மன் ராஜினாமா.. நிர்மலா சீதாராமன் மீட்டிங்கில் திட்ட வட்ட முடிவு!

பேடிஎம் பேமெண்ட் பேங்க் (Paytm Payments Bank) சேவைகளுக்கு ஆர்பிஐ (RBI) விதித்திருந்த கெடுவுக்கு முன்னதாகவே பேடிஎம் சிஇஓ விஜய் சேகர் சர்மா (Paytm CEO Vijay Shekhar Sharma) கஸ்டமர்களே எதிர்பார்க்காத முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவால் என்னென்ன நடக்கும்?

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் (Reserve Bank of India) விதிகளை மீறியதற்காக பேடிஎம் (Paytm) நிறுவனம் மட்டுமல்லாமல் பேடிஎம் கஸ்டமர்களும் நாள்தோறும் படாதபாடுபட்டு வருகின்றனர். பேடிஎம் கியூஆர் கோட் (Paytm QR Code), சவுண்ட் பாக்ஸ் (Soundbox) மற்றும் வாலெட் (Wallet) முதல் டெபாசிட் வரையில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது.

Paytmக்கு கும்பிடு.. கெடு எதுக்கு.. விஜய் சேகர் சர்மா திடீர் ராஜினாமா!

பேடிஎம் ஆப்பை மறந்துவிட வேண்டியதுதான் என்ற மனநிலைக்கே கஸ்டமர்கள் சென்றுவிட்ட நேரத்தில் அதன் சிஇஓ விஜய் சேகர் சர்மா, ஆர்பிஐயின் விதிகள் பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் சேவைகளுக்கு மட்டும்தான், மற்ற சேவைகளுக்கு எந்த வித கட்டுப்பாடுகளும் இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்து வந்தார்.

அதோடு பேடிஎம் பேமெண்ட் பேங்க் சேவைக்களுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவானது, பிப்ரவரி 29ஆம் தேதியில் இருந்து மார்ச் 15ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது. இதனால் காலக்கெடுவுக்குள் பேடிஎம் சேவைகள் பழைய நிலைக்கே திரும்பிவிடும் என்று அதன் யூசர்கள் நினைத்து கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் பேடிஎம் சிஇஓ விஜய் சேகர் சர்மா எடுத்த முடிவு கஸ்டமர்களை நம்பிக்கை இழக்க செய்துள்ளது.

பேடிஎம் பேமெண்ட் பேங்க் லிமிடெட் (Paytm Payments Bank Limited) நிறுவனத்தின் பகுதி நேர நிர்வாகமற்ற தலைவராக (Part-time Non-executive Chairman) இருந்த விஜய் சேகர் சர்மா தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், பேடிஎம்மின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் (One 97 Communications Ltd) புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

அதில் பேடிஎம் பேமெண்ட் பேங்க் நிறுவனத்தின் நிர்வாக குழுவை மறுசீரமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆகவே, பேடிஎம் பேமெண்ட் பேங்க் நிறுவனம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்பது தெரிகிறது. ஏற்கனவே, இந்த நிறுவனத்துக்கு ஆக்சிஸ் பேங்க் நோடல் அக்கவுண்ட்டாக (Axis Bank Nodal Account) இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் பேடிஎம் பேமெண்ட் பேங்க் சேவைகள் நீடிக்கப்பட்டாலும், ஆக்சிஸ் பேங்க் நோடல் அக்கவுண்ட் விதிமுறைகள் அமலுக்கு வர வாய்ப்புள்ளது. ஆகவே, அதன் கஸ்டமர்கள் கேஓய்சி அப்டேட் (KYC Update) செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட சூழலில் பேடிஎம் போன்ற நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கட்டுபாடுகள் குறித்த உயர்மட்ட கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

பிப்ரவரி 26ஆம் தேதி நடந்த இந்த கூட்டத்தில் பாலிசிபஜார் (Policybazar) மேக்மைட்ரிப் (MakeMyTrip), ரேஸர்பே (Razorpay), போன்பே (PhonePe), கூகுள் பே (Google Pay) போன்ற முக்கிய நிறுவனங்களின் நிர்வாகிகள், ஆர்பிஐ (RBI), என்பிசிஐ (NPCI) மூத்த நிர்வாகிகள் மற்றும் எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேடிஎம் மீதான கட்டுப்பாடுகளுக்கு மற்ற ஆன்லைன் பேமெண்ட் நிறுவனங்கள் அதிருப்தி தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி ஏதும் அந்த கூட்டத்தில் நடக்கவில்லை. சொல்லப்போனால், ஆர்பிஐயின் கட்டுப்பாடுகளுக்க எந்தவித எதிர்ப்பும் ஏற்படவில்லை என்றே அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்துக்கு பிறகு வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) மற்றும் நிதி அமைச்சகம் ஆகியவை நாட்டில் பட்டியலிடப்பட்ட ஃபின்டெக் நிறுவனங்களின் உரிமைகளை மாற்றுவது மற்றும் கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் ஒழுங்குமுறை இணக்கத்துடன் செயல்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Paytm CEO Vijay Shekhar Sharma Resigns As Chairman Of Paytm Payment Bank Ahead RBI March 15 Deadline
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X