அடேய் Google Pay.. எனக்கு END-ஏ கிடையாது.. 24 போட்டியாளர்களுடன் திரும்பி வந்த Paytm.. கைகொடுத்த 4 வங்கிகள்!
பேடிஎம் (Paytm) நிறுவனத்தின் பேமண்ட்ஸ் பேங்க் மீதான தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் நாளை (மார்ச் 16) முதல் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், இன்று (மார்ச் 15) பேடிஎம் நிறுவனமானது மூன்றாம் தரப்பு யுபிஐ ஆப் (Third Party UPI App) ஆக அவதாரம் எடுத்துள்ளது.
என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (National Payments Corporation of India) அனுமதியின் கீழ் இந்தியாவின் 4 முக்கிய வாங்கிடுகளுடன் இணைந்து பேடிஎம் நிறுவனமானது தேர்ட் பார்ட்டி யுபிஐ ஆப் ஆக மாறியுள்ளது. இதன் மூலம் பேடிஎம் நிறுவனத்தால் தன் பயனர்களுக்கு தொடர்ந்து யுபிஐ பணப்பரிவர்த்தனை சேவைகளை வழங்க முடியும்.

இதற்காக பேடிஎம் நிறுவனமானது எஸ்பிஐ (SBI), எச்டிஎப்சி பேங்க் (HDFC Bank), ஆக்சிஸ் பேங்க் (Axis Bank) மற்றும் யெஸ் பேங்க் (Yes Bank) உடன் இணைந்துள்ளது. முன்னதாக பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் (Paytm Payments Bank - PPBL) மூலம் மேற்கொள்ளப்பட்ட பேடிஎம்-ன் யுபிஐ பரிவர்த்தனைகள் இனிமேல் மேற்கண்ட 4 வங்கிகளின் வழியாக நடக்கும்.
இந்த மாற்றத்தின் விளைவாக, பேடிஎம் நிறுவனமானது கூகுள் பே (Google Pay), மொபிக்விக் (Mobikwik), போன்பே (PhonePe) உட்பட மொத்தம் 24 மற்ற யுபிஐ பேமண்ட் ஆப்களுடன் போட்டியிட வேண்டும். அதாவது என்பிசிஐ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 25 தேர்ட் பார்ட்டி யுபிஐ ஆப்களில் பேடிஎம் ஆப்பும் ஒன்றாக செயல்படும்!

அறியாதோர்களுக்கு மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பேங்க் அக்கவுண்ட்களில் டெபாசிட், கிரெடிட் டிரான்சாக்க்ஷன்ஸ் அல்லது டாப்-அப்கள் (Deposits, credit transactions or top-ups) ஏற்கப்பட கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி தடைவித்துள்ளது. இதன் விளைவாக பேடிஎம் நிறுவனத்தின் பல சேவைகள் நாளை (மார்ச் 16) முதல் முடங்கவுள்ளன.
இதற்கிடையில் தான் பேடிஎம் நிறுவனமானது மூன்றாம் தரப்பு யுபிஐ ஆப் ஆக மீண்டு வந்துள்ளது. ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் ஆனது பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க்கில் 49 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. அதே நேரத்தில் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆன விஜய் சேகர் ஷர்மாவிடம் 51 சதவீத பங்குகள் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

என்பிசிஐ இணையதளத்தில் உள்ள தரவுகளின்படி, யுபிஐ பணபரிவர்த்தனையில், நாட்டிலேயே மூன்றாவது பெரிய செயலி பேடிஎம் தான். இது கடந்த பிப்ரவரியில் 1.65 டிரில்லியன் ரூபாய் மதிப்பிலான, 1.41 பில்லியன் மாதாந்திர பரிவர்த்தனைகளை செயல்படுத்தியுள்ளது. ஜனவரி உடன் ஒப்பிடும் போது இது குறைவாகும்.
கடந்த ஜனவரியில், பேடிஎம் நிறுவனமானது 1.93 டிரில்லியன் மதிப்புள்ள 1.57 பில்லியன் பரிவர்த்தனைகளை செய்திருந்தது. இதையெல்லாம் மனதில் கொண்டு தான், மூன்றாம் தரப்பு யுபிஐ ஆப்பிற்கான பேடிஎம்-ன் கோரிக்கையை என்பிசிஐ ஏற்றுக்கொண்டுள்ளது போல் தெரிகிறது. இந்த கோரிக்கையை பரிந்துரை செய்யுமாறு ஆர்பிஐ வங்கி கூறி இருந்தும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மார்ச் 15 ஆம் தேத்திக்கு பின்னர் அமலுக்கு வரும் புதிய ஆர்பிஐ கட்டுப்பாடுகளுக்கு பிறகும் கூட, பேடிஎம் நிறுவனத்தின் க்யூஆர் கோட் (QR Code) மற்றும் சவுண்ட்பாக்ஸ் (Soundbox) வசதியானது தொடர்ந்து செயல்படும் என்று பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா கூறி இருந்ததையும் இங்கே நினைவூட்ட விரும்புகிறோம்.
கடந்த மாதம் அவர் வெளியிட்ட ட்வீட்டில், "பேடிஎம் க்யூஆர், சவுண்ட்பாக்ஸ் மற்றும் இடிசி கார்டு மெஷின் (EDC Card Machine) வசதிகளானது மார்ச் 15 க்கு பிறகும் கூட, எப்போதும் போல தொடர்ந்து செயல்படும். புள்ளி #21-இல் ஆர்பிஐ வழங்கிய சமீபத்திய FAQ-வில் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு வதந்திகளையும் நம்ப வேண்டாம்!" என்று விஜய் சேகர் சர்மா பதிவிட்டு இருந்தார்!


Click it and Unblock the Notifications








