கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் நீக்கப்பட்டது? காரணம் என்ன?

|

பேடிஎம் செயலியை இந்தியாவில் அதிகளவு மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக இந்த செயலி பல்வேறு புதிய அம்சங்கள் வந்துகொண்டேதான் இருக்கிறது.கொரோனா பரவல் காலத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை பயன்பாடு அதிகமாக தேவைப்பட்டு வரும் நிலையில் பேடிஎம் பயனர்கள் ஆன்லைன் பரிவர்த்தனையை

எளிதாக பயன்படுத்தும் வகையில் பல்வேறு புதிய வசதிகளை கொண்டுவந்தது இந்நிறுவனம்.

அதிகம் பயன்படுத்தும் பேடிஎம்

அதன்படி மக்கள் அதிகம் பயன்படுத்தும் பேடிஎம் ஆப் வசதி கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து மர்மமான முறையில் மறைந்துவிட்டது. ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தப் பயன்பாடு கூகிள் பிளே ஸ்டோரில் காண முடியவில்லை. அதேசமயம் Paytm For Business, Paytm Money, Paytm Mall மற்றும் நிறுவனத்திற்குச் சொந்தமான பிற பயன்பாடுகள் அனைத்தும் Play Store இல் இன்னும் கிடைக்கின்றன.

டிஎம் கிடைக்கிறது

இருந்தபோதிலும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய பேடிஎம் கிடைக்கிறது. வெளிவந்த தகவலின்படி ஆன்லைன்

சூதாட்டத்தைச் சுற்றி நிறுவனத்தின் புதிய விதிகளை மீறுவதாகக் கூறப்படுவதால் கூகிள் Paytm பயன்பாட்டை அகற்றிவிட்டது.

இன்று முதல் எஸ்பிஐ ஏடிஎம்-ல் ஒடிபி முறையில் பணம் எடுக்கும் முறையில் நேரம் நீட்டிப்பு.! முழுவிவரம்.!

ஆண்ட்ராய்டு பாதுகாப்பு மற்றும்

தயாரிப்பு, ஆண்ட்ராய்டு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை ஆகியவற்றின் துணைத் தலைவராக இருக்கும் கூகிளின் சுசேன் ஃப்ரே ஒரு வலைப்பதிவு இடுகையில் வழிகாட்டுதல்களை விவரித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு கூகிள் பிளே

ஸ்டோரிலிருந்து பேடிஎம் மறைந்துவிட்டது.

அல்லது பணப் பரிசுகளை

வலைப்பதிவில், கூகுள் கூறியது, , "நாங்கள் ஆன்லைன் சூதாட்ட விடுதிகளை அனுமதிக்க மாட்டோம் அல்லது விளையாட்டு பந்தயங்களை எளிதாக்கும் எந்தவொரு கட்டுப்பாடற்ற சூதாட்ட பயன்பாடுகளையும் ஆதரிக்க மாட்டோம். ஒரு பயன்பாடு நுகர்வோரை வெளிப்புற

வலைத்தளத்திற்கு இட்டுச் சென்றால், உண்மையான பணம் அல்லது பணப் பரிசுகளை வெல்ல பணம் செலுத்தும் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கிறது, இது எங்கள் கொள்கைகளை மீறுவதாகும்.

புதிய கண்டுபிடிப்பு: பயோனிக் கண்.! பார்வை இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக உதவும்.!

ளைவிக்காமல் பாதுகாக்க

பயனர்களை தீங்கு விளைவிக்காமல் பாதுகாக்க இந்த கொள்கைகள் எங்களிடம் உள்ளன. ஒரு பயன்பாடு இந்தக் கொள்கைகளை மீறும் போது, ​​மீறலை டெவலப்பருக்கு அறிவித்து, டெவலப்பர் பயன்பாட்டை இணக்கமாகக் கொண்டுவரும் வரை Google Play-லிருந்து பயன்பாட்டை அகற்றுவோம் எனக் கூறப்பட்டுள்ளது.

ள் என்னவென்றால், கூகுள் ஆன்லைன்

இதன் பொருள் என்னவென்றால், கூகுள் ஆன்லைன் சூதாட்டம் அல்லது போட்டிகளில் அதன் புதிய வழிகாட்டுதல்களை மீறுவதாக நம்பியதால், பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் Paytm-ஐ நீக்கியுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Paytm Banned in Google Play Store: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X