Paytm இருக்கா? அறிமுகமானது புதிய வசதி.. இனிமேல் அந்த சிக்கல் இருக்காது.. இதோ முழு விவரம்..
இந்தியா முழுவதும் யுபிஐ (upi) சேவையை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதாவது பேஎடிம், போன்பே, கூகுள் பே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் சில நொடிகளில் பணம் அனுப்பவும், பெறவும் முடிகிறது. எனவே தான் அதிக மக்கள் இந்த யுபிஐ செயலிகளை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் மிகவும் பிரபலமான பேடிஎம் (Paytm) நிறுவனம் புதிய வசதி ஒன்றை தற்போது கொண்டுவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய வசதி அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அவ்வப்போது அதிரடி மாற்றங்களை செய்து வரும் பேடிஎம் நிறுவனம் தற்போது என்ஆர்ஐ என்று அழைக்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தங்களுடைய இன்டர்நேஷனல் மொபைல் நம்பரை பேடிஎம் செயலியோடு இணைத்து இந்தியாவில் யுபிஐ பேமென்ட்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனிமேல் தங்களுடைய இண்டர்நேஷனல் மொபைல் நம்பர்களை (எண்களை) பயன்படுத்தி இந்தியாவில் யுபிஐ பேமென்ட்களை மேற்கொள்ள முடியும். ஆனால் தற்போது இது பீட்டா சோதனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் அனைத்து பேடிஎம் பயனர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது சர்வதேச மொபைல் எண்களை NRE அல்லது NRO கணக்குகளோடு இணைத்து கொள்ளலாம். மேலும் இதனை தொடர்ந்து வழக்கம் போல யுபிஐ பேமெண்ட்களை மேற்கொள்ளலாம். இதன் மூலம் இந்தியாவில் இவர்கள் யுபிஐ பயன்படுத்துவதற்கு இந்திய சிம் கார்டு தான் தேவை என்ற அவசியம் இனி இருக்காது.
அதேசமயம் 12 நாடுகளை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தான் இந்த புதிய சேவை முதல் கட்டமாக கிடைக்கும் என்று பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், பிரான்ஸ் மலேசியா போன்ற 12 நாடுகளில் வசிக்கக்கூடிய வெளிநாடு வாழ் இந்தியர்கள் தற்போதைக்கு முதல் கட்டமாக இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இண்டர்நேஷனல் மொபைல் நம்பர் உடன் இணைக்கப்பட்ட யுபிஐ கணக்கினை பயன்படுத்தி இந்திய வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பலாம். மேலும் இந்தியாவை அடிப்படையாக கொண்டு இயங்கக்கூடிய செயலிகள் அல்லது ஆன்லைன் தளங்களில் ஷாப்பிங் செய்து பணம் செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களுக்கு பாதுகாப்பாகவும், விரைவாகவும் நிதி பரிவர்த்தனை வசதியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தான் இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் பேடிஎம் செயலியில் உங்களது இன்டர்நேஷனல் மொபைல் நம்பரை கொண்டு லாகின் செய்து கொள்ள வேண்டும். அடுத்து உங்களது போன் நம்பருக்கு வரக்கூடிய எஸ்எம்எஸ் உடன் உங்களது இணைப்பை கன்ஃபார்ம் செய்து கொள்ளலாம். அதன்பின்பு உங்களின் NRE அல்லது NRO வங்கி கணக்கை இணைத்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பேடிஎம் நிறுவனம் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு வசதிகளும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








