இண்டர்நெட், ஸ்மார்ட்போன் இன்றி பேடிம் அணுகல் : டோல்-ப்ரீ எண் அறிமுகம்..!

|

பேடிஎம் நிறுவனம் அதன் புதியதொரு அம்சத்தை இன்று (புதன்கிழமை) அறிமுகம் செய்துள்ளது.இந்த புதிய அம்சம் மூலம் பேடிம் வேலட் மூலம் பண பரிவர்த்தனை செய்பவர்கள் ஒரு ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாத நிலை ஏற்படும்.

(ஆனால், நிச்சயமாக பேடிம் அக்கவுண்ட் திறக்க ஸ்மார்ட்போனோ அல்லது கம்ப்யூட்டர் இணைப்போ அவசியம் மற்றும் அதை உங்கள் தொலைபேசி எண்ணுடன் இணைக்க, மற்றும் உங்கள் வேலத்தில் பணம் சேர்க்க என்பது குறிப்பிடத்தக்கது)

எனினும், நாள் அடிப்படையிலான ஒரு நாளில் பணம் தேவைப்படும் போது உங்களிடம் ஒரு ஸ்மார்ட்போன் அல்லது இணைய இணைப்பு இல்லாத நேரத்தில் இந்த பேடிம்-ன் புதிய அம்சம் கைகொடுக்கும். அதாவது உங்களிடம் வேலை செய்யும் ஏதாவது ஒரு போன் இருந்தால் போதும் (பீச்சர் போன்களாக கூட இருக்கலாம்).!

கட்டணமில்லா தொலைபேசி எண்

கட்டணமில்லா தொலைபேசி எண்

இதை செய்ய, உங்கள் 'பின்' செட் செய்யும் நோக்கத்தில் நீங்கள் பேடிம்-ல் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணில் இருந்து பேடிம் வழங்கும் - 1800 1800 1234 - என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். நீங்கள் பின் அமைக்க மீண்டும் ஒரு அழைப்பு வரும் என்ற ஒரு குரல் செய்தியை நீங்கள் கேட்ப்பீர்கள்.

பின் டைப் செய்து

பின் டைப் செய்து

பின்னர், நீங்கள் இந்த எண்ணை அழைத்து பேமண்ட்கள் நிகழ்த்தலாம், பணம் பெறுநரின் தொலைபேசி எண், பின்னர் அவ்வளவு அனுப்ப வேண்டும் என்ற தொகை மற்றும் இறுதியாக உறுதிப்படுத்தலுக்காக உங்கள் பின் டைப் செய்து பணம் அனுப்ப முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பணப்பரிவர்த்தனை

பணப்பரிவர்த்தனை

நீங்கள் இந்த வசதியை பயன்படுத்தி ஒரு ஸ்மார்ட்போன் அல்லது பேடிம் ஆப் வைத்திருக்க வேண்டும் அல்லது இணைய இணைப்பில் இருக்க வேண்டிய தேவையில்லை. பேடிம் வழங்கும் இந்த ஒரு அம்சம் ஒரு எளிமையான பணப்பரிவர்த்தனை செய்யும் முறை இல்லை என்றாலும் கூட அனைத்து சூழ்நிலைகளிலும் பணம் அனுப்ப இது மிகவும் உதவும் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.

காத்திருப்பு பிரச்சினை

காத்திருப்பு பிரச்சினை

ஒருவேளை வழங்கப்பட்டுள்ள கட்டணமில்லா எண் 'வாடிக்கையாகவே' பிஸியாக இருந்தால் உங்களுக்கு பின் கிடைக்க நீங்கள் பல முயற்சிகள் செய்ய வேண்டியது இருக்கும், பின் கிடைத்ததும் மீண்டும் பணப்பரிவர்த்தனை நிகழ்த்த அணுகும் போதும் எண் பிஸியாக இருந்தால் மீண்டும் ஒரு காத்திருப்பு பிரச்சினையாக இருக்கும்.

அணுகல்

அணுகல்

ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்ய அணுகல் இல்லாமல் யாராவது இருந்து முறையை மட்டுமே பயன்படுத்தி பணம் அனுப்ப முயற்சித்துக் கொண்டிருந்தால் மேலும் இந்த கட்டணமில்லா எண் சேவை அமைப்பு பிஸியாகவே இருந்து இது தோல்வியுற்றால் இது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் படிக்க

மேலும் படிக்க

டெபாசிட் செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் இலவச டால்க் டைம், மற்றும் பல.!

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Paytm Announces Toll Free Number for Transactions Without Internet. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X