Paytm, PhonePe ஆப்களில் புதிய வசதி.. இனி PIN நம்பர் தேவை இல்லை.. ஆனால் ஒரு டிவிஸ்ட்?
நீங்களொரு பேடிஎம் ஆப் (Paytm App) பயனராக இருந்தாலும் சரி அல்லது போன்பே ஆப் (PhonePe App) பயனராக இருந்தாலும் அல்லது தேவைக்கேற்ப இந்த 2 யுபிஐ (UPI) ஆப்களையும் மாறி மாறி பயன்படுத்துபவராக இருந்தாலும் சரி.. உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.. கூடவே ஒரு பேட் நியூஸும் இருக்கிறது!
குட் நியூஸ் என்னவென்றால்?
டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனங்களான பேடிஎம் மற்றும் போன்பே ஆகிய இரண்டுமே ஒரு புதிய வசதியில் பணியாற்றி வருவதாகவும், அது கூடிய விரைவில் அனைத்து பாயனர்களுக்குமே அறிமுகம் செய்யப்படும் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது!

அதென்ன வசதி?
பேடிஎம் மற்றும் போன்பே ஆகிய இரண்டுமே யுபிஐ-லைட் (UPI-Lite) அடிப்படையிலான ஒரு புதிய வசதியில் செயல்பட்டு வருவதாகவும், அந்த வசதி யுபிஐ பின் (UPI PIN) நம்பரை பயன்படுத்தாமலேயே பேடிஎம் மற்றும் போன்பே ஆப் வழியாக பணப்பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கும் என்றும் கூறப்படுகிறது!
இதில் உள்ள பேட் நியூஸ் என்னவென்றால்?
யுபிஐ பின் நம்பரை போடாமலே பணம் செலுத்த அனுமதிக்கும் இந்த புதிய வசதியானது, ரூ.200 க்குள் என்கிற தொகைக்கு கீழே மட்டும் தான் வேலை செய்யுமாம்.
அதாவது பேடிஎம் அல்லது போன்பே வழியாக ரூ.200 க்குள் என்கிற வரம்பிலான தொகையை செலுத்தும் போது மட்டுமே, யுபிஐ பின் நம்பரை உள்ளிட வேண்டிய அவசியம் இருக்காது. ஒருவேளை ரூ.200 க்கும் மேலாக பணம் செலுத்தும் போது, (வழக்கம் போல) பின் நம்பரை உள்ளிட வேண்டும்!
இந்த வசதி எப்போது அறிமுகமாகும்?
யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்டு (Unified Payments Interfaced) அடிப்படையிலான சேவைகளை வழங்கும் இந்த 2 தேர்ட்-பார்ட்டி ஆப்களும், மேற்குறிப்பிட்ட புதிய வசதியை அறிமுகம் செய்யும் கடைசி கட்டத்தில் உள்ளது போல் தெரிகிறது.
முதலில் Paytm.. பின்னர் PhonePe!
எப்படி பார்த்தாலும், அடுத்த ஒரு மாதத்திற்குள் பேடிஎம் நிறுவனம் அதன் யுபிஐ லைட் சேவையை அறிமுகம் செய்யலாம். அதனை தொடர்ந்து போன்பே நிறுவனமும் இந்த சேவையை அறிமுகம் செய்யலாம். ஆக, யுபிஐ லைட் சேவைகளை வழங்கும் முதல் தேர்ட்-பார்ட்டி பேமண்ட் ஆப் என்கிற பெருமையை பேடிஎம் பெறும்!
ஏற்கனவே ஆட்டத்தில் குதித்துள்ள RBI வங்கி!
நினைவூட்டும் வண்ணம், யுபிஐ லைட் சேவையானது இந்திய ரிசர்வ் வங்கியால் கடந்த 2022 ஆம் ஆண்டே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.
இது இன்டர்நெட் வசதியின் தேவை இல்லாமலேயே, குறைந்த மதிப்புள்ள தொகையை பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கிறது. இந்த வசதியின் கீழ், அதிகபட்சம் ரூ.200 வரை பணம் செலுத்தலாம் மற்றும் அதை செய்ய பின் நம்பரை உள்ளிட வேண்டிய அவசியம் இருக்காது.
UPI Lite சேவையால் வாடிக்கையாளர்களுக்கு என்ன பலன்?
யுபிஐ பின் நம்பரை உள்ளிட வேண்டிய வேலை இல்லையெனில், ஒவ்வொரு பணப்பரிவர்த்தனையும் மிகவும் வேகமாகவும், வசதியாகவும் நடக்கும்.
அதுமட்டுமின்றி, மொத்த யுபிஐ பரிவர்த்தனைகளில் சுமார் 50% பரிவர்த்தனைகளானது ரூ.200 அல்லது அதற்கும் குறைவான தொகைகளாகவே உள்ளன. ஆகையால் இந்த புதிய வசதி, நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!
BHIM ஆப்பில் உள்ளது.. ஆனால் புண்ணியம் இல்லை!
யுபிஐ லைட் சேவையானது என்பிசிஐ-யின் (NPCI -National Payments Corporation of India) சொந்த பேமண்ட் ஆப் ஆன பீம் ஆப்பில் (BHIM App) ஏற்கனவே உள்ளது தான்.
ஆனால் கூட அது பேடிஎம் மற்றும் போன்பே போல மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் ஒரு பேமண்ட் ஆப் ஆக இல்லை!


Click it and Unblock the Notifications








