ATM சேவைக்கு வருது எண்டு.. ஓடிபி போதும்.. பக்கத்து கடைகளில் பணம்.. விர்ச்சுவல் ஏடிஎம் வந்தாச்சு!
என்னதான், கூகுள் பே, போன் பே, பேடிஎம்னு வந்தாலும் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வழக்கம் நம்மிடையே குறைந்து போகவில்லை. ஆனால், அதில் நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்கள் வருகின்றன. அப்படி, ஏடிஎம்முக்கே செல்லாமல், பக்கத்து கடைகளிலேயே பணம் வங்கிகொள்ளும்படியான மாற்றம் வந்துவிட்டது.
இப்போதெல்லாமல், பணத்தை பார்ப்பதென்பது அரிதாகி வருகிறது. போன் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறோம். பொட்டிக்கடைக்கு சென்று 10 ரூபாய்க்கு பொருள் வாங்கினால் கூட கூகுள் பே இருக்கா? போன் பே இருக்கா? என்று கேட்டும் நிலைக்கே வந்துவிட்டோம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அதேவேளையில், ஆத்திர அவசரத்துக்கு கையில் கொஞ்சம் பணம் இருப்பதுதான் நல்லது, வெளியில் செல்லும்போது கூகுள் பே, போன் பே போன்ற ஆப்களை பயன்படுத்த முடியாமல் போனால் என்ன செய்வது என்பதை பற்றி யோசிக்கவும் நாம் தயங்குவதில்லை. அதனாலேயே, வங்கிகள் ஏடிஎம் சேவையை தடையில்லாமல் வழங்கிவருகின்றன.
இருப்பினும், பணம் தேவைப்படும் நேரத்தில், பக்கத்தில் ஏடிஎம் சேவை இல்லாமல் போனாலும், ஏடிஎம் இருந்தும் அதில் பணம் இல்லை என்றாலும் நமக்கு சற்று அதிருப்தியே ஏற்படும். அதுமட்டுமல்லாமல், தொழில்நுட்ப கோளாறுகள், ஏடிஎம் சேவை தற்காலிமாக முடக்கம் போன்றவற்றாலும், பணத்தை எடுக்க முடியாமல் தவிக்கும் சூழலும் இருந்துதான் வருகிறது.
இதுபோன்ற சிரமங்களுக்கு மத்தியில், ஏடிஎம்முக்கே செல்லாமல், அருகில் இருக்கும் கடைகளில் ஓடிபியை சொன்னால் பணத்தை பெற்று கொள்ளும் சலுகை கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட மாற்றம் இப்போது வந்துவிட்டது. சண்டிகரை சேர்ந்த இந்த பின்டெக் (Fintech) என்னும் நிறுவனத்தின் கீழ் செயல்படும் பேமார்ட் இந்தியா (Paymart India) இந்த சேவையை வழங்கி வருகிறது.
இதற்கு விர்ச்சுவல் ஏடிஎம் (Virtual ATM) என பெயரிட்டுள்ளது. இந்த சேவையானது, பேங்க் ஆப்கள் மூலம் வழங்கப்படுகிறது. அதாவது, இந்த பேமார்ட் இந்தியா நிறுவனமானது, வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்து, அந்த ஆப்பில் விர்ச்சுவல் ஏடிஎம் ஆப்ஷனை கொடுக்கும். இந்த ஆப்ஷன் மூலம் ஏடிஎம் கார்டு இல்லாமல், மொபைல் நம்பர் மூலம் வரும் ஓடிபியை மட்டுமே சொல்லி பணத்தை பெற்று கொள்ளலாம்.
இந்த பணத்தை கொடுக்கும் கடைகளும் பேமார்ட் இந்தியா நிறுவனத்துடம் இணைக்கப்பட்டிருக்கும். இதுகுறித்து பேமார்ட் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ அமித் நாரங் கூறுகையில், இந்த சேவையானது, உங்களது மொபைல் பேங்கிங் ஆப்ஸ் மூலம் செயல்படுகிறது. அதில், எங்களது விர்ச்சுவல் ஏடிஎம்மில் பதிவுசெய்யப்பட்ட கடைக்காரர்களின் பெயர்கள், இருப்பிடம் மற்றும் போன் நம்பர்கள் இடம்பெற்றிருக்கும்.
இங்கு சென்று, டெபிட் கார்டு, ஏடிஎம் மெஷின், யுபிஐ போன்ற எதுவும் இல்லாமலேயே ஓடிபியை மட்டுமே சொல்லி பணத்தை பெற்று கொள்ளலாம். இந்த சேவையை வழங்க, ஐடிபிஐ வங்கி (IDBI Bank), இந்தியன் வங்கி (Indian Bank), ஜம்மூ & காஷ்மீர் வங்கி (Jammu & Kashmir Bank) மற்றும் கரூர் வைஸ்யா வங்கி (Karur Vysya Bank) ஆகியவற்றுடன் இணைந்துள்ளோம்.
சண்டிகர், டெல்லி, ஹைதராபாத், சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் விர்ச்சுவல் ஏடிஎம் சேவை கிடைக்கிறது எனத் தெரிவித்தார். மேலும், இந்த சேவையானது மற்ற வங்கிகள் மூலமும் வழங்க திட்டங்களை வகுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விர்ச்சுவல் ஏடிஎம் மூலம் குறைந்தபட்சம் ரூ.100 அதிகபட்சம் ரூ.2000 வரையில் பெற்று கொள்ளாம். ஒரு மாதத்துக்கு ரூ.10,000 வரையில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








