சாம்சங்'கிற்கு வந்த சோதனை : விமானங்களில் பயன்படுத்த கூடாதென எச்சரிக்கை..!

|

சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களின் பேட்டரிகள் தீப்பற்றி எரியும் குற்றச்சாட்டு எழ சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களை திரும்ப பெற்றுக்கொண்டது.

சாம்சங்'கிற்கு வந்த சோதனை : விமானங்களில் பயன்படுத்த கூடாதென எச்சரிக்கை

அதனை தொடர்ந்து இப்போது விமான பயணங்களின் போது சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனை விமானிகள் பயன்படுத்த கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக எழும் கேலக்ஸி நோட் 7 சாதனங்கள் பற்றிய நிகழ்வுகள் மற்றும் பிரச்சனைகளை தொடர்ந்து விமான பயணத்தின் போதே அதை பயன்படுத்தவோ அல்லது சார்ஜ் செய்யவோ அல்லது பாதுகாப்பான முறையில் பெட்டிகளுக்குள் வைக்கவோ கூடாது என்று அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாம்சங்'கிற்கு வந்த சோதனை : விமானங்களில் பயன்படுத்த கூடாதென எச்சரிக்கை

ஏற்கனவே சில சர்வதேச விமான நிலையங்கள் தங்கள் விமானங்களில் சாம்சங் சாதனங்களை மக்கள் பயன்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளன (சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா ஏர்லைன்ஸ் நிறுவனம்) என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாம்சங்'கிற்கு வந்த சோதனை : விமானங்களில் பயன்படுத்த கூடாதென எச்சரிக்கை

கடந்த வாரம் சாம்சங் நிறுவனம் நோட் 7 விற்பனையை நிறுத்திக் கொள்வதாகவும் மற்றும் தென் கொரியா, அமேரிக்கா உட்பட 10 நாடுகளில் இருந்து 2.5 மில்லியன் நோட் 7 சாதனங்களை திரும்ப பெற்று புதிய சாதனங்களை வழங்குவதாகவும் அறிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

கையில் வெடித்த கேலக்ஸி ரூ.92,534 காலி.!!
ஜியோவை சமாளிக்க புது ஐடியா : ஐடியா அதிரடி.!!
சோனி எக்ஸ்பீரியா : கனவில் கூட நினைக்காத விலை குறைப்பு

Best Mobiles in India

English summary
Passengers warned not to use Samsung Galaxy Note 7 on planes. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X