ஷாக் தகவல்., பயணிகள் ரயில் கட்டண வருவாய் குறைந்தது: எத்தனை கோடி, விளைவு என்ன தெரியுமா?

|

பொதுவாக பிற இடங்களுக்கு பயணிக்கும் போது பெரிதளவு பயன்படுத்தப்படுவது ரயில் தான். ஆனால் தற்போது மொபைல் போனில் பல்வேறு செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. அதன்மூலம் கிடைக்கும் ஆஃபர்களில் பயணர்கள் பெரிதளவு தனியார் பேருந்துகளை தேர்ந்தெடுத்து வருகின்றன. இதனால் ரயில் பயணம் குறைந்து கொண்டே வருகிறது.

ஐஆர்சிடிசி ஆப்

ஐஆர்சிடிசி ஆப்

ஐஆர்சிடிசி ஆப்., மூலம் டிக்கெட் புக் செய்யும் முறை எளிதாக்கப்பட்டாலும் அதில் காட்டும் வெயிட்டிங் லிஸ்ட் சேவை பலரையும் சோர்வடைய வைக்கிறது. அதோடு மட்டுமின்றி சிஎன்எஃப் என்ற வார்த்தையும் காண்பிக்கப்படுகிறது. அதன்மூலம் சிஎன்எஃப்-ன் மூலம் தங்களது டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டில் புக் செய்யப்பட்டால் எத்தனை சதவீதம் உறுதியாக வாய்ப்புள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

13 ஆயிரத்து 398 கோடியே 92 லட்சம் ரூபாய் வருவாய்

13 ஆயிரத்து 398 கோடியே 92 லட்சம் ரூபாய் வருவாய்

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரயில்வே துறை சார்ந்த சில தகவலை கேட்டு பெற்றுள்ளார். அதில், நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரயில் பயணிகள் கட்டணம் மூலம் 13 ஆயிரத்து 398 கோடியே 92 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்திருக்கிறது.

மூன்றாவது காலாண்டில் மேலும் சரிவு

மூன்றாவது காலாண்டில் மேலும் சரிவு

அதுவே ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் 13 ஆயிரத்து 243 கோடியே 81 லட்சம் ரூபாயாக குறைந்திருக்கிறது. பயணிகள் கட்டண வருவாயானது மூன்றாவது காலாண்டில் மேலும் சரிவு கண்டிருக்கிறது.

12 ஆயிரத்து 844 கோடியே 37 லட்சம் ரூபாயானது

12 ஆயிரத்து 844 கோடியே 37 லட்சம் ரூபாயானது

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் பயணிகள் கட்டண வருவாயானது 399 கோடியே 44 லட்சம் குறைந்து 12 ஆயிரத்து 844 கோடியே 37 லட்சம் ரூபாயானது தெரிய வந்திருக்கிறது.

அதிர்ச்சி தகவல்., இந்தியாவில் 5 மாதத்தில் 25,000 குழந்தை ஆபாச வீடியோ இணையத்தில் பதிவேற்றம்!அதிர்ச்சி தகவல்., இந்தியாவில் 5 மாதத்தில் 25,000 குழந்தை ஆபாச வீடியோ இணையத்தில் பதிவேற்றம்!

சுமார் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அதிகரிப்பு

சுமார் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அதிகரிப்பு

பொதுவாக பண்டிகை காலங்களில் சரக்கு கட்டணங்களுக்கு கூடுதல் வரி ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற் கொண்டதால் ரயில் சரக்கு கட்டண வருவாய் மூன்றாவது காலாண்டில் சுமார் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 32 கோடி ருபாயாக உள்ளது.

சுமார் 400 கோடி ரூபாய் குறைந்துள்ளது

சுமார் 400 கோடி ரூபாய் குறைந்துள்ளது

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரயில்வே துறையில் பயணிகள் கட்டண வருவாயானது சுமார் 400 கோடி ரூபாய் குறைந்துள்ளது. இதையடுத்து ரயில்வே துறை இதை சரி செய்ய அடுத்த என்ன நடவடிக்கை என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Passanger train fares decreased by about 400 Crores

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X