அவர் நல்லவரா?., கெட்டவரா?- அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் குறித்து எலான் மஸ்க் அளித்த சுவாரஸ்ய பதில்!

|

கோடீஸ்வரரான எலான் மஸ்க் தற்போது அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்கு அறிவுரை விடுத்துள்ளார். அதில், பார்ட்டி குறைக்கும்படியும் சுற்றுப்பாதைக்கு செல்ல அதிகமாக வேலை செய்யும்படியும் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து டுவிட்டர் பயனர் ஒருவர் எலான் மஸ்க்கிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், பெசோஸ் நல்லரா என கேள்வி எழுப்பினார். அதற்கு டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். "லெஸ் பார்ட்டி வொர்க் மோர்" என அமேசான் நிறுவனம் ஜெஃப் பெசோஸுக்கு எலான் மஸ்க் அறிவுரை விடுத்துள்ளார். மேலும் எலான் மஸ்க் அளித்த டுவிட்டில், அவர் நன்றாக இருக்கிறார் என நான் நினைக்கிறேன். அவர் இந்த நாட்களில் சூடான தொட்டியில் நிறைய நேரம் செலவிடுவது போல் தெரிகிறது. அவர் சுற்றுப்பாதையில் செல்ல விரும்பினால், குறைவான பார்ட்டி மற்றும் அதிக வேலை செய்வது நல்லது என பதிலளித்துள்ளார்.

ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆர்ஜின்

ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆர்ஜின்

சமீபத்தில் ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆர்ஜின் விமானம் அதன் ஐந்தாவது சுற்றுலா விமானத்தை தாமதப்படுத்தியது, முன்னதாக மே 20 பறக்க இருந்தது. ஆனால் அதன் NS-21 குறிப்பிட்ட சிக்கலை எதிர்கொண்டதால் இந்த ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய ஏவுதல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அதேபோல் டெஸ்லா பங்குகள் மதிப்பும் சமீபத்தில் குறைந்தது. இதன்மூலம் எலான் மஸ்க் $200 பில்லியன் கிளப்பில் இருந்து கீழே இறங்கினார். இதன்மூலம் அவர் நிகர மதிப்பு 192.7 பில்லியன் டாலராக இருக்கிறது. 8 பில்லியன் டாலர் வரை சொத்து மதிப்பு குறைந்த போதிலும் அவர் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற இடத்தை தக்க வைத்துள்ளார்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம்

உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம்

2021 ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு பிடித்தார் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு பின்தங்கியிருக்கிறார். உலகின் மிகப் பெரிய பணக்காரராக என்பதில் முதல் இடத்தை பிடித்த பிறகு, ஜெஃப் பெசோஸ்-க்கு எலான் மஸ்க் வெள்ளிப் பதக்கம் அனுப்பி இருந்தார்.

ஜெஃப் பெசோஸ் மற்றொரு இடைத்தரகர்

ஜெஃப் பெசோஸ் மற்றொரு இடைத்தரகர்

அதேபோல் அமெரிக்க பத்திரிகை பரோன் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்பு "அமேசான்.பாம்ப்" என்ற தலைப்பில் ஒரு கவர் ஸ்டோரியை வெளியிட்டது. அதில் அமேசான் பங்கு வீழ்ச்சியடையும் எனவும் நிறுவனம் தங்கள் சொத்து பொருட்களை நேரடியாக விற்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை மற்றொரு இடைத்தரகர் எனவும் நிராகரித்துள்ளது. அதோடு அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் புதிய வணிக முன்னதாரணத்திற்கு முன்னோடியாக இருப்பார் என்று கருத்து முட்டாள்தனம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

அமேசான் சந்தை மதிப்பு 1.6 டிரில்லியன்

அமேசான் சந்தை மதிப்பு 1.6 டிரில்லியன்

கட்டுரை வெளியாகி சரியாக இரண்டு தசாப்தங்களில் அமேசான் சந்தை மதிப்பு 1.6 டிரில்லியன் ஆக உயர்ந்ததோடு ஜெஃப் பெசோஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்தார். பழைய கட்டுரையை பெசோஸ் தற்போது ஊக்கமளிக்கும் வார்த்தைகளுடன் பகிர்ந்தார். ஜெஃப் பெசோஸ், அதில் "கேளுங்கள் மற்றும் வெளிப்படையாக இருங்கள். நீங்கள் யார் என்பதை யாரும் சொல்ல வேண்டாம். அமேசானின் தோல்வியை முன்னறிவித்த பல கதைகளில் இதுவும் ஒன்று. இன்று அமேசான் உலகின் மிக வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.

சில்வர் பதக்க இமோஜியுடன் நம்பர் 2

சில்வர் பதக்க இமோஜியுடன் நம்பர் 2

ஜெஃப் பெசோஸ் டுவிட்டரில் பதிவிட்ட பதிவு 13000-த்துக்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றது. அமேசான் மற்றும் ப்ளூ ஆர்ஜின் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் கருத்துக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வந்தாலும் அவரது இணை போட்டியாளரான எலான் மஸ்க் அவரது டுவிட்டுக்கு பதிவிட்ட பதில் பலரின் கவனத்தை ஈர்த்தது. அதில் சில்வர் பதக்க இமோஜியுடன் நம்பர் 2 என டுவிட் செய்தார்.

Best Mobiles in India

English summary
Party Less, Work More: Elon Musk Advice to Amazon Founder Jeff Bezos

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X