அமேசான்: இனி பகுதி நேரமாக பார்சல்களை டெலிவரி செய்து நீங்கள் சம்பாதிக்கலாம்.!

|

அமேசான் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது, மேலும் உலகளவில் அதிக பொருட்களை விற்பனை செய்து முதல் இடத்தில் இருக்கிறது அமேசான் நிறுவனம் . குறிப்பாக பிளிப்கார்ட் வலைதளத்தை விட அதிகளவு சலுகையை வழங்கிவருகிறது அமேசான்.

 பகுதி நேர டெலிவரி

பகுதி நேர டெலிவரி

தற்சமயம் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது அது என்னவென்றால், இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியா, பகுதி நேர டெலிவரி மூலம் கூடுதல் ஈட்டுவதற்கான அமேசான் பிளக்ஸ் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

 கல்லூரி மாணவர்கள்

கல்லூரி மாணவர்கள்

இந்த அமேசான் பிளக்ஸ் திட்டம் இல்லத்தலைவிகள், செக்யூரிட்டி பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பகுதி நேர பணியை எதிர்நோக்குபவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

திகில் கிளப்பும் நிலவின் 3 மர்மங்கள்: அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே!திகில் கிளப்பும் நிலவின் 3 மர்மங்கள்: அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

 எளிமையாக சம்பாதிக்கலாம்

எளிமையாக சம்பாதிக்கலாம்

குறிப்பாக இந்த திட்டத்தின் மூலம் மணிக்கு ரூ.120 முதல் ரூ.140 வரை எளிமையாக சம்பாதிக்கலாம். கடந்த 2 வாரமாக முன்னோட்டம் பார்க்கப்பட்ட இந்த திட்டம் பெங்களூரு, மும்பை மற்றும் தில்லி ஆகிய நகரங்களில் முதல் கட்டமாக அறிமுகம் ஆகிறது.

ஆறு நாடுகளில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது

ஆறு நாடுகளில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது

இந்தியாவில் பொதுமக்கள் பகுதி நேர டெலிவரி மேற்கொண்டு வருமானம் ஈட்டும் அமேசான் பிளக்ஸ் திட்டம், அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட ஆறு நாடுகளில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது.

இந்தியா: ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி.!இந்தியா: ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி.!

துணைத் தலைவர்

துணைத் தலைவர்

இந்தியாவில் அமேசான் நிறுவனம் ஆறு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தாலும் தற்போது தான் இந்தத் திட்டத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது, இந்திய சந்தையின் பிரத்தேயேகத் தேவையை கருத்தில் கொண்டு, இந்த வசதி தாமதமாக அறிமுகம் ஆவதாக, அமேசான் நிறுவன ஆசிய செயல்பாடுகள் துணைத் தலைவர் அகில் சக்சேனா கூறுகிறார். பின்பு விரைவில் அமேசான் பிளக்ஸ் திட்டம் அனைத்து இடங்களுக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Part time job alert Now you can deliver goods for Amazon India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X