டுவிட்டருக்கு கடும் எச்சரிக்கை விடுத்த நாடாளுமன்ற நிலைக் குழு: எழுத்துப்பூர்வ பதில் வேணும்!
இந்தியாவின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக் குழு டுவிட்டர் நிறுவனத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் டுவிட்டர் இந்தியாவின் சட்ட ஆலோசகர் ஷாகுப்தா மற்றும் ஆயுஷி கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் டுவிட்டர் நிறுவனம் தனக்கென வரையறுக்கப்பட்ட கொள்கைகளை பின்பற்றுவதாகவும் தனிநபர் கருத்து சுதந்திரம் உரிமைகளை மதித்து செயல்படுவதாகவும் விளக்கம் அளித்தனர்.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்க மறுக்கும் வகையில் டுவிட்டர் செயல்பட்டு வருவதாக குழு உறுப்பினர்கள் விமர்சனம் முன்வைத்தனர். தகவல் தொழில்நுட்பத்திற்கான நாட்டின் விதிகளை மீறுவதற்கு டுவிட்டர் நிறுவனத்துக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

விலக்கை இழக்க நேரிடும்
சமீபத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்., டுவிட்டருக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் உடனடியாக புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்கும்படி கேட்டுக் கொண்டதோடு, விதிமுறைகளை கடைபிடிக்க தவறும்பட்சத்தில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழங்கப்படும் விலக்கை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

முழுமையாக அமல்படுத்துவதற்கான காலக்கெடு
இருப்பினும் டுவிட்டர் பிரதிநிதிகள் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளை முழுமையாக அமல்படுத்துவதற்கான காலக்கெடு குறித்து உறுதியற்றவர்களாக இருந்தனர். விதிகளை எப்போது முழுமையாக நிறைவேற்றப்படும் என்பது குறித்து டுவிட்டர் பிரதிநிதிகள் நிலையான நிலைப்பாடு அற்றவர்களாக இருந்தனர். இதையடுத்து எப்போது விதிகளுக்கு முழுமையாக இணங்க முடியும் எனவும் சில கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வ பதிலை வழங்கும்படியும் உறுப்பினர்கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மத்திய அரசின் புதிய டிஜிட்டல் கொள்கை
தாங்கள் சட்டங்களை மதிப்பதாகவும், மத்திய அரசின் புதிய டிஜிட்டல் கொள்கையின்படி குறைதீர்ப்பு அதிகாரிகளை நியமித்து உள்ளதாகவும் டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மை, கருத்துச் சுதந்திரம் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளுக்கு ஏற்ப ஆன்லைனில் மக்கள் உரிமைகளை பாதுகாக்க முக்கிய பணிகளை குழுவுடன் இணைந்து பணியாற்ற டுவிட்டர் தயாராக உள்ளது எனவும் தொடர்ந்து சேவை ஆற்றுவதற்கு இந்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவோம் என டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள்
இந்திய அரசு இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள் 2021 கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி இந்திய அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது. இதை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் மே 25 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டது. மத்திய அரசு குறிப்பிட்ட பெரும்பாலான விஷயங்களை சமூகவலைதளங்கள் பின்பற்றவில்லை. இதையடுத்து இந்தியாவில் இந்த தளங்கள் இயங்க அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்தது.

சமூகவலைதள பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி
சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர் ஆகியவர்களை நியமிக்க வேண்டும். சமூகவலைதளங்களில் பல குற்றச் செயல்கள் நடக்கிறது, எனவே பயனர்கள் குற்றங்களை கேட்கும் நேரடி அதிகாரிகள் நியமிக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டது.

24 மணிநேரத்துக்குள் நீக்க வேண்டும்
புதிய சமூக ஊடக விதிகள் மூலம், இந்தியாவின் இறையாண்மை பாதிப்பு, அரசின் பாதுகாப்பு விவகாரம், பாலியன் புகார் போன்ற சர்ச்சை பதிவுகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பட்சத்தில் 36 மணி நேரத்திற்குள் அந்த உள்ளடக்கத்தை அகற்ற சமூகவலைதள புதிய திருத்தம் வழிவகுக்கும். மேலும் இந்த விவகாரத்தை தீர்க்க நாட்டில் ஒரு அதிகாரி நியமித்து புகார்களை கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆபாச படங்கள் ஆகியவற்றை 24 மணிநேரத்துக்குள் நீக்க வேண்டும் எனவும் மத்திய அரசு புதிய தொழில்நுட்ப சட்டத்தில் குறிப்பிட்டது.


Click it and Unblock the Notifications