Home
News

Paris Olympics 2024 ஆரம்பம்! Online வழியாக இலவசமாக LIVE Streaming செய்வது எப்படி? எந்த TV சேனலில் பார்க்கலாம்?

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 (Paris Olympics 2024) போட்டிகள் ஆனது இன்று (ஜூலை 26 ஆம் தேதி) திட்டமிடப்ப்பட்டுள்ள பிரம்மாண்ட தொடக்க விழாவிற்கு பிறகு தொடங்கவுள்ளன. ஒருவேளை நீங்கள் பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024-க்கான தொடக்க விழாவை மற்றும் அதன் தொடர்ந்து நடக்கவுள்ள சில போட்டிகளை நேரலையில் பார்க்க விரும்பினால்.. அதை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி? எந்த டிவி சேனல் வழியாக பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024-ஐ பார்க்கலாம்? 2024 ஒலிம்பிக்ஸ் போட்டிகளை ஆன்லைன் வழியாக பார்ப்பது எப்படி? இதோ விவரங்கள்:

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 தொடக்க விழாவின் முக்கிய சிறப்பம்சங்கள்: 2024 ஒலிம்பிக்ஸ் போட்டியானது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நதி அணிவகுப்புடன் தொடங்குகிறது. இந்த அணிவகுப்பு ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் தொடங்கி, பிரான்ஸ் நாட்டின் சின்னமான ஈபிள் டவறுக்க முன்னால் உள்ள ட்ரோகாடெரோவில் முடிவடையும். இந்த அணிவகுப்பில் விளையாட்டு வீரர்களுடன் கலைஞர்களும் கலந்துகொள்வார்கள்!

Paris Olympics 2024: Online வழியாக LIVE Streaming செய்வது எப்படி?

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024-க்காக இந்திய குழுவை வழிநடத்துவது யார்? பேட்மிண்டனில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து (P V Sindhu) மற்றும் தனது ஐந்தாவது ஒலிம்பிக்கில் போட்டியிடும் டேபிள் டென்னிஸ் வீரரான ஷரத் கமல் (Sharath Kamal) ஆகியோர் இந்தியக்குழுவை வழிநடத்துவார்கள்.

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 போட்டிகளுக்காக, இந்திய குழுவில் 16 விளையாட்டுகளில் 69 பதக்க நிகழ்வுகளில் 112 விளையாட்டு வீரர்கள், ஐந்து இருப்பு விளையாட்டு வீரர்களுடன் போட்டியிடுவார்கள். இந்திய தடகள வீரர்கள், தருண் தஹிலியானி வடிவமைத்த குர்தா பூந்தி செட் மற்றும் புடவைகளை அணிவார்கள், இதில் பாரம்பரிய இகாட் பிரிண்ட்கள் மற்றும் இந்தியாவின் மூவர்ணக்கொடியிலான பனாரசி ப்ரோகேட் ஆகியவைகளும் இடம்பெறும்.

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 தொடக்க விழா இந்திய நேரப்படி எப்போது தொடங்கும்? பாரீஸ் 2024 ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கான தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று (ஜூலை 26 ஆம் தேதி) இரவு 11:00 மணிக்கு தொடங்குகிறது. இந்நிகழ்வை டிவி சேனல் வழியாகவும், ஆன்லைன் வழியாகவும் இந்தியர்கள் கண்டுகளிக்கலாம்.

இந்தியாவில், பாரீஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகளை எந்த டிவி சேனல் வழியாக நேரடியாக பார்க்கலாம்? பிரான்ஸ் நாட்டில் நடக்கும் பாரீஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகளை நேரலை செய்யும் உரிமத்தை பெற்றுள்ளது ஸ்போர்ட்ஸ் 18 நெட்வொர்க் (Sports 18 Network) ஆகும். இந்த டிவி சேனல் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து விளையாட்டு ரசிகர்களும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை கண்டுகளிக்கலாம்.

ஆன்லைன் வழியாக பாரீஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகளை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி? ஒருவேளை நீங்கள் டிவி சேனல் வழியாக பாரீஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகளை காண்பதற்கு பதிலாக ஆன்லைன் வழியாக லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய விரும்பினால்.. நீங்கள் ஜியோ சினிமா ஆப் (JioCinema App) மற்றும் ஜியோசினிமா இணையதளத்தை (JioCinema Website) அணுகலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Paris Olympics 2024 Live How to Watch Online For Free TV Channel Timings All Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X