வெற்றியாளர்களின் பெற்றோர்களுக்கு இருக்கும் ஒற்றுமையான குணங்கள் அது எப்படி?

By Prakash
|

ஒரு இலக்கை நிர்ணயித்து அதை அடைய வேண்டும் என்ற நிச்சயமான முடிவுடன் பயணிப்பவர்களே வெற்றியை ஈட்ட முடியும் . மேலும் வெற்றியாளர்கள் கொண்டுள்ள கடினஉழைப்பு மற்றும் அதிகப்படியான திறமைகள் போன்ற அனைத்தும் அவர்களிகன் பெற்றோர்கள் பொருத்தே அமைகிறது.

வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்பது எல்லோருடைய மனதின் தாகம் எனலாம். படிப்பதுமுதல் மதிப்பெண்கள் பலர் வாழ்க்கையில் சாதனையாளர்களாக முடிவதில்லை, இருந்தபோதிலும் சில பெற்றோர்கள் கொடுக்கும் அன்பு, ஊக்கம், அறிவு போன்றவற்றால் பல வெற்றியாளர்களை உருவாக்க முடியும்.

நம்முடைய சொற்கள், செயல்கள் மற்றும் தோற்றம் எல்லாம் உள் மனத்தின் பிரதிபலிப்பு எனலாம். நம் வாழ்க்கையில் நடக்கின்ற ஒவ்வொரு சம்பவமும், அதனால் உண்டான பிரதிகிரியைகளும், பதிவேடுகளாக உள்மனதில் அமைகின்றன. அவைகளுக்கேற்ப நம் எண்ணங்கள் உருவாகின்றன. ஒவ்வொரு பெற்றோர் வளர்ப்புகளை பொருத்தே நம் வாழ்க்கையில் நன்மைகள் ஏறப்படுகிறது.

மார்க் சக்கர்பெர்க், பில் கேட்ஸ், அம்பானி, சுந்தர்பிச்சை போன்றவர்கள் நம் அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டு, இவர்கள் அனைவரும் பல சாதனைகள் படைத்தவர்கள். மேலும் இவர்களின் பெற்றோர்கள் வளர்ப்பில் ஒற்றுமையான குணங்கள் இருக்கும், பெற்றோர்கள் காட்டும் அன்பு தான் அனைவரையும் வெற்றியாளர் ஆக்குகிறது.

கடினமாக உழைக்கும் பலர் பெரியதாக எதையும் சாதிக்காமல் அப்படியே வாழ்கிறார்கள். காரணம் அவர்களுக்கு பல சிக்கல் இருக்கும். மேலும் அவர்கள் தெளிவாக சிந்திக்கும் ஆற்றலை கற்றுக்கொள்ளமாட்டார்கள்.

குழந்தைகள்:

குழந்தைகள்:

குழந்தைகள் சிறு வயதிலேயே வீட்டு வேலைகளில் சிலவற்றை செய்ய கற்றுக் கொண்டால், கடின உழைப்பின் மதிப்பை அவர்கள் அறிந்துகொள்வார்கள், முயற்சிகள் செய்வதிலிருந்து வெட்கப்பட மாட்டார்கள்.

பெற்றோர்கள் அன்பு:

பெற்றோர்கள் அன்பு:

பெற்றோர்களிடம் எதுவாக இருந்தாலும் மனம்விட்டு பேசவேண்டும். குழந்தைகள் அவர்கள் பெற்றோர்களுடன் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முடிவதால் அவை உணர்ச்சி ரீதியாக வலுவாகின்றன. இது அவர்களின் கல்வித் திறனிலும் பிரதிபலிக்கும்.

முயற்சி:

முயற்சி:

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வெற்றிபெற முயற்சி செய்வது மிக முக்கியம் என்பதை புரிந்துகொள்கிறார்கள், அதன்பின் குழந்தைகள் அச்சமற்றவர்களாகவும், பல திறமைகளையும் பெறுகிறார்கள்.

அளுமைத்திறன்:

அளுமைத்திறன்:

தாய்மார்கள் வீட்டுவேலை மற்றும் அலுவலக வேலைகள் போன்றவற்றை நிர்வகிக்கிறார்கள், இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் வண்ணம் உள்ளது. குழந்தைகள் ஒரு நேரத்தில் வெவ்வேறு விஷயங்களை கற்றுகொள்ள உதவியாக உள்ளது.

 ஆரோக்கியம்:

ஆரோக்கியம்:

பெற்றோர்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகொடுப்பார்கள், இதனால் குழந்தைகள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தவும், சிறப்பாக வேலை செய்யவும் முடியும்.

படித்தவர்கள்:

படித்தவர்கள்:

பெற்றோர்கள் நன்கு படித்தவர்கள் ஆக இருந்தால், அவர்களின் குழந்தைகள் வாழ்க்கையில் நல்ல முன்மாதிரியாக இருப்பார்கள். மேலும் அவர்கள் காட்டிய வழியில்தான் வாழ்க்கையில் பயனம் செய்வார்கள்.

சக தோழர்கள்:

சக தோழர்கள்:

பெற்றோர்கள் சக தோழர்கள் போல் பெரிதும் குழந்தைகளை விரும்புகிறார்கள். மேலும் இவை எதிர்பார்ப்பு மற்றும் சில உதவி போன்றவற்றை வாழ்க்கையில் தொடர கற்றுக்கொடுக்கும்.

புத்தக வாசிப்பு:

புத்தக வாசிப்பு:

பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு அறிவு மற்றும் திறனுக்கான கருத்துக்களை மேம்படுத்தமுடியும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Parents Of Successful Children Have These 8 Traits In Common : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X