பகிரங்கமாக சொல்கிறேன்- சிஇஓ பராக் அகர்வால்., ஆதாரம் எங்கே- எலான் மஸ்க்: டுவிட்டரில் என்ன நடக்கிறது?

|

டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிமாக ஒத்தி வைப்பதாக சமீபத்தில் மஸ்க் அறிவித்திருந்தார். ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் தொடர்பான முறையான ஆவணங்கள் சமர்பிப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்த ஒப்பந்தம் ஒத்தி வைக்கப்பட்டது. மறுபுறம் டுவிட்டர் சிஇஓ பராக் அகர்வால், டுவிட்டரில் முக்கிய பணிகளில் உள்ள நிர்வாகிகளை பணி நீக்கம் செய்து வருகிறார். இதையடுத்து டுவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் சிஇஓ பராக் அகர்வால் இதற்கு விளக்கமளித்து இருக்கிறார்.

வளர்ச்சியிலேயே எங்களது கவனம்

வளர்ச்சியிலேயே எங்களது கவனம்

கடந்த சில வாரங்களாகவே நிறைய நடந்து வருகிறது. நிறுவனத்தின் வளர்ச்சியிலேயே நான் கவனம் செலுத்தி வருகிறேன். இதற்கு முன்பு வரை இல்லாத அளவிற்கு பகிரங்கமாக இப்போது நான் சொல்கிறேன். வதந்திகள் பரப்புவது என்பது எப்போதும் சரியல்ல, தலைமை குழு செயல்பாடுகள் மாற்றங்களை அறிவித்து வருகிறோம். மக்களை பாதிக்கும் மாற்றம் என்பது கடினமானவையே, நிறுவனம் கையகப்படுத்தப்படும் பட்சத்தில் ஏற்படும் மாற்றம் குறித்து நன்கு அறிவோம்.

சிறந்த தளமாக மேம்படுத்தி வருகிறோம்

அனைத்து சூழ்நிலைகளுக்கும் தயாராகவே இருக்க வேண்டும். டுவிட்டரை சிறந்த தயாரிப்பாக வணிகத்திற்கான சிறந்த தளமாக மேம்படுத்தி வருகிறோம். நிறுவனத்தின் எதிர்கால தலைமை என்பதை பொருட்படுத்தாமல் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டுவிட்டருக்கு சரியானவற்றை செய்வதிலேயே எனது எண்ணம் இருக்கிறது. டுவிட்டரை இயக்குவதற்கு தற்போதும் நான்தான் பொறுப்பாளி. ஒவ்வொரு தினமும் வலுவான டுவிட்டர் உருவாக்குவது என்பதே தங்களின் நோக்கம். தலைமை மாறினாலும் டுவிட்டரில் முடிவுகள் எடுப்பதில் தனக்கு தடங்கள் இருக்காது, நிறுவனத்தின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு எந்த முடிவுகளை எடுக்கவும் தான் தயங்க மாட்டேன். என பராக் அகர்வால் தெரிவித்துள்ளார்.

பராக் அகர்வால் தெரிவித்த பதில்

இந்த நிலையில் எலான் மஸ்க் ஸ்பேம் கணக்கு குறித்து தெரிவித்த கருத்துக்கு பராக் அகர்வால் தெரிவித்த பதில் குறித்து பார்க்கையில், ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் 5% என குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த கணக்கு குறித்து பார்க்கையில், இது 2013 ஆம் ஆண்டில் இருந்தபடியே தற்போது இருக்கிறது. ஸ்பேம் கணக்குகளை பொது மற்றும் தனிப்பட்ட விவரங்களை பயன்படுத்தி வெளிப்படியாக உருவாக்க முடியாது. எந்த கணக்குகள் எம்டிஏயூஎஸ் ஆக கணக்கெடுக்கப்படும் என்பது அறிவது சாத்தியமற்ற செயலாகும் என குறிப்பிட்டிருக்கிறார்.

பூப் இமோஜியை பதிவிட்ட மஸ்க்

பராக் அகர்வால் டுவிட்டுக்கு மஸ்க் ஒரே ஒரு பூப் இமோஜியை பதிவிட்டு டுவிட் செய்திருக்கிறார். ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் 5% என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கான ஆதாரம் அளிக்கப்படாத பட்சத்தில் விளம்பரதாரர்கள் கொடுக்கும் பணத்திற்கு என்ன கிடைக்கும் என்பதை எப்படி அவர்கள் அறிந்துக் கொள்வார்கள், நிதி நிலைமை ஆரோக்கியம் என்பது அவசியம் என மஸ்க் பதிலளித்திருக்கிறார்.

20 முதல் 25 சதவீதம் வரை இருக்கலாம்

20 முதல் 25 சதவீதம் வரை இருக்கலாம்

ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் குறித்து மஸ்க் தெரிவிக்கையில், டுவிட்டரில் பாட்கள் மற்றும் ஆட்டோமேட்டட் கணக்குகள் 20 முதல் 25 சதவீதம் வரை இருக்கலாம் என தெரிவித்திருக்கிறார். டுவிட்டர் தளத்தில் இதுகுறித்து அறிய மென்பொருள் பரிசோதனை செய்ய வேண்டும். ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் 5% கீழ் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் ஆதாரம் எதுவும் தற்போது வரை பார்க்கவில்லை என மஸ்க் குறிப்பிட்டு இருக்கிறார். மஸ்க் கடந்த ஏப்ரல் மாதத்தில் டுவிட்டரின் 9.2% பங்குகளை கைப்பற்றினார். இதையடுத்து டுவிட்டரின் பங்கு மதிப்பு குறையத் தொடங்கியது. தொடர்ந்து மஸ்க் டுவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்க ஒப்புக் கொண்டார் என்பதும் இந்த ஒப்பந்தம் நிலுவையில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால்

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால்

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், டுவிட்டரில் பணிபுரிந்து வந்த இரண்டு முக்கிய நிர்வாகிகளை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. எலான் மஸ்க் உலகளாவிய செய்தியடல் தளமான டுவிட்டரின் புதிய உரிமையாளராக ஆவதற்கு தயாராக இருப்பதால், பெரும்பாலான பணியமர்த்தல் இடை நிறுத்தப்பட்டிருக்கிறது. டுவிட்டரின் ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் பொறியியலுக்கு தலைமை தாங்கும் பொது மேலாளரான கேவோன் பெய்க்பூர், தயாரிப்புகளின் தலைவர் ப்ரூஸ் பால்க் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து டுவிட்டர் செய்தித் தொடர்பாளர் ஏஎஃப்பி இடம் தெரிவித்தார்.

ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் தொடர்பான விவரங்கள்

ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் தொடர்பான விவரங்கள்

ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் தொடர்பான விவரங்கள் முறையாக வழங்கப்படாமல் இருக்கும் காரணத்தால் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மஸ்க் தெரிவித்திருக்கிறார். ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் 5 சதவீதத்துக்கும் குறைவான பயனர்களையே பிரதிநிதித்துவப் படுத்துகிறது. ஆனால் இந்த தகவலை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் முறையாக தெரிவிக்கவில்லை என்பதே தற்போதைய ஒப்பந்தம் நிலுவைக்கு காரணம்.

வெளியேறுவேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை

வெளியேறுவேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை

இதுகுறித்து கேவோன் பெய்க்பூர் பதிவிட்ட தகவல் குறித்து பார்க்கையில், கடந்த 7 ஆண்டுகளாக டுவிட்டரில் பணியாற்றி இருக்கிறேன். டுவிட்டரை விட்டு வெளியேறுவேன் என்பதை தான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இந்த முடிவை நான் எடுக்கவில்லை, டுவிட்டரை வேறு பாதைக்கு கொண்டு செல்ல விரும்புவதாக தெரிவித்த பராக் என்னை டுவிட்டரில் இருந்து வெளியேறும்படி கேட்டுக் கொண்டார். தற்போதுவரையிலான பயணத்தில் தன்னுடைய பங்களிப்பை நினைத்து மிகவும் பெருமை அடைந்து, இதுபோன்ற விஷயங்களில் ஆறுதல் அடைகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார். இதை தொடர்ந்து ப்ரூஸ் ஃபலாக், தனது பணியில் இருந்து அகற்றப்பட்டதாக டுவிட் செய்திருந்தார். ஆனால் இதை தொடர்ந்து அந்த டுவிட்டை நீக்கினார். இவர் டுவிட்டை நீக்கியதற்கான காரணம் தெரியவில்லை, இருப்பினும் அவர் தனது டுவிட்டர் கணக்கில் வேலையற்றவர் அதாவது unemployed என பதிவிட்டுள்ளார்.

Best Mobiles in India

English summary
Parag Agarwal Tweet about Spam Accounts: Elon Musk Replys with Poop Emoji

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X