Home
News

சென்னை விமான நிலையத்தில் புதிய மின்னணு நுழைவுவாயில்.! இனி நேரம் மிச்சம்.!

மேலும் நுழைவுப்பகுதியில் டிக்கெட்டின் கியூஆர் கோடு மற்றும் பயணியின் முகம் ஆகியவை இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஸ்கேன் செய்யப்படும்.

விரைவில் பல்வேறு பொது இடங்களுக்கு சிறந்த தொழிலநுட்ப வசதி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன்படி விரைவில் விமான நிலையங்களுக்குள் பயணிகள் எளிதில் செல்லும் வகையில் மின்னணு நுழைவுவாயில்கள் அமைக்க முடியு செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் புதிய மின்னணு நுழைவுவாயில்.!

குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் மின்னணு நுழைவுவாயில்கள் பொறுத்தப்பட உள்ளன, மேலும் இந்த தொழிலநுட்பம் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது

நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது

பொதுவாக விமானப் பயணம் மேற்கொள்பவர்கள், விமான நிலையங்களுக்குள் பல்வேறு பரிசோதனைகளைத் தாண்டிச் செல்ல
வேண்டிய நிலைமை உள்ளது. அதிலும் கூட்ட நெரிசல் காரணமாக பணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என்று
தான் கூறவேண்டும்.

மின்னணு முறையில் பரிசோதனை:

மின்னணு முறையில் பரிசோதனை:

எனவே பணிகளின் வசதிக்கு தகுந்தபடி மின்னணு முறையில் பரிசோதனை செய்யும் நுழைவு வாயில்களை பொருத்த தற்சமயம்
முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி விமான முனையங்களின் நுழைவுப் பகுதி, பாதுகாப்பு சோதனை பகுதி, விமானங்களுக்கு செல்வதற்கான பகுதி ஆகிய இடங்களில் மின்னணு நுழைவுவாயில்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூஆர் கோடு

கியூஆர் கோடு

மேலும் நுழைவுப்பகுதியில் டிக்கெட்டின் கியூஆர் கோடு மற்றும் பயணியின் முகம் ஆகியவை இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஸ்கேன் செய்யப்படும். பின்பு ஏற்கனவே உள்ள தகவல்கள் தரவுகளுடள் சரிபார்க்கப்படும்.

டிஜியாத்ரா

டிஜியாத்ரா

குறிப்பாக இதன் மூலம் ஆவணங்கள் ஆய்வுப்பகுதி, பாதுகாப்புப் பகுதி, விமானங்களுக்கு செல்லும் வழி ஆகியவற்றுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு வேண்டி டிஜியாத்ரா என்ற வலைதளத்தில் பதிவுசெய்து, அடையாள எண்ணைப் பெற வேண்டும்
எனக் கூறப்படுகிறது.

கண் கருவிழி மற்றும் ரேகைப் பதிவுகள்

கண் கருவிழி மற்றும் ரேகைப் பதிவுகள்

பின்பு விமான நிலையத்திற்கு முதல்முறை செல்லும்போது, அடையாள எண்ணை வழங்க வேண்டும், மேலும் பயணியின் புகைப்படம் மற்றும் கண் கருவிழி மற்றும் ரேகைப் பதிவுகள் செய்யப்படும். அதன்பிறகு பயணம் மேற்கொள்ளும் பயணிகள்
எந்தவொரு தாமதமும் இல்லாமல் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.

பெங்களூரு

பெங்களூரு

முதலில் பெங்களூரு விமான நிலையத்தில் அடுத்த ஆண்டின் துவகத்தில் இந்த புதிய தொழிலநுட்பம் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது. இதேபோல் புனே, வாரணாசி, கொல்கத்தா, விஜயவாடா விமான நிலையங்களிலும் மின்னணு
நுழைவுவாயில்கள் பொருத்தப்படும்.

சென்னை

சென்னை

அதன்படி 2-வது கட்டமாக சென்னை விமானத்தில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மின்னணு நுழைவு வாயில்கள் பொருத்தப்படும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Paperless boarding at Chennai airport from 2020 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X