ஆதார் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு புது செயல்முறை.. ஆப்லைன் e-KYC வெரிபிகேஷன்.. எப்படி செய்து முடிப்பது?
ஆதார் கார்டு (Aadhaar Card) வைத்து இருக்கும் ஒட்டுமொத்த பேரும் ஆதார் பேப்பர்லெஸ் ஆஃப்லைன் இ-கேஒய்சி (Aadhaar Paperless Offline e-KYC) செயல்முறையை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆதார் போர்டல் மற்றும் மைஆதார் ஆப் வழியாக இதை செய்து முடிக்கலாம். இதுகுறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது, இந்த ஆதார் பேப்பர்லெஸ் ஆப்லைன் இ-கேஒய்சி என்று அழைக்கப்படும் காகிதமற்ற ஆதார் சேவையை கொடுக்கிறது. இது டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்ட ஆவணமாக இருக்கிறது.
ஆதார் எண் அல்லது பயோமெட்ரிக் உள்ளிட்ட முக்கிய விவரங்களை பகிராமல் அடையாள சரிபார்ப்புக்கு இது பயன்படுத்தப்படுகிறது. இந்த பேப்பர்லெஸ் ஆதார் கார்டை சேவை வழங்குநர்கள் (Service Providers) / ஆப்லைன் வெரிபிகேஷன் சீக்கிங் என்டிடி (Offline Verification Seeking Entity) ஆகியவை ஆப்லைன் சரிபார்ப்புக்கு பயன்படுத்தி கொள்ளும்.

பேப்பர்லெஸ் ஆதார் டவுன்லோட் செய்வது எப்படி?
1. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் myaadhaar போர்டலுக்கு செல்ல வேண்டும். ஆதார் நம்பர் அல்லது விஐடி (VID) நம்பர் மற்றும் செக்யூரிட்டி கோட் (Security Code) கொடுத்து லாகின் செய்து கொள்ள வேண்டும். இப்போது, சேவைகள் (Services) பக்கம் தோன்றும். இதில் ஆதார் அப்டேட், டவுன்லோட் ஆதார் போன்ற பல்வேறு விருப்பங்கள் இருக்கும்.
2. கீழே ஸ்க்ரோல் செய்தால், ஆப்லைன் இகேஒய்சி (Offine eKYC) விருப்பம் தோன்றும். இதை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது ஷேர் கோடை உருவாக்கவும் (Create a Share Code) பக்கம் தோன்றும். இதில் கொடுக்கும் 4 இலக்க எண் ஆனது நீங்கள் டவுன்லோட் செய்ய இருக்கும் ஜிப் ஃபைலுக்கு (ZIP File) பாஸ்வேர்ட்டாக மாற்றப்படும்.
3. இதை கொடுத்துவிட்டால் போதும், எக்ஸ்எம்எல் பைல் (XML File) டவுன்லோட் செய்யப்பட்டுவிடும். இதில் இருந்து ஆதார் கார்டு விவரங்களை எடுத்து ஆஃப்லைன் வெரிபிகேஷனுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக உங்களிடம் ஜிப் ஃபைல்களை அணுகக் கூடிய ஆப்கள் இருக்க வேண்டும்.
4. இதேபோல பேப்பர்லெஸ் ஆதார் அட்டையை மைஆதார் மொபைல் ஆப் (mAadhaar Mobile App) வழியாகவும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இப்படி டவுன்லோட் செய்யப்படும், பேப்பர்லெஸ் ஆதார் அட்டையின் எக்ஸ்எம்எல் பைல்லை சேவை வழங்குநர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.
5. இப்படி பகிரும்போது, ஷேர் கோட் (Share Code) கேட்கப்படும். இது முன்பு நீங்கள் உருவாக்கிய கோட்டாக இருப்பதால், அதையே கொடுக்கலாம். இப்படி, பகிரும்போது, ஆப்லைனில் நேரடியாக கேஒய்சி செய்து கொள்ளலாம். உங்களது ஆதார் நம்பர் மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும்.
6. பேங்கிங் சேவைகள், சிம் கார்டு வழங்குதல் மற்றும் நிதி சார்ந்த முக்கிய வெரிபிகேஷன்களுக்கு இதை பயன்படுத்தி கொள்ளலாம். ஆதார் நம்பர், பெயர், டவுன்லோட் ரெஃப்ரென்ஸ் நம்பர் (Download Reference Number), முகவரி, போட்டோ, பாலினம், பிறந்த தேதி, ஹேஸ்டு செய்யப்பட்ட) மொபைல் நம்பர் மற்றும் இமெயில் இடம்பெற்று இருக்கும்.
7. இது பாதுகாப்பு மிக்க செயல்முறையாக இருந்தாலும், ஸ்மார்ட்போன் வைத்து இருக்க வேண்டும். அதே நேரத்தில் எக்ஸ்எம்எல் பைல், ஜிப் ஃபைல் போன்றவற்றை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை மறுக்க முடியாது. ஆகவே, மாஸ்க்டு ஆதார் கார்டை அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








