மூச்சு காற்றை குரலாக மாற்றிய 16 வயது சிறுவனின் கண்டுபிடிப்பு

Posted By:

சுவாசத்தை கொண்டு பேச்சாற்றலை கொடுக்கும் கருவியை கண்டுபிடித்ததற்காக பானிப்பட்டை சேர்ந்த 16 வயதான அர்ஷ் ஷா தில்பாகி கூகுள் உலகளாவிய அறிவியல் கண்காட்சியின் இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டால்க் என பெயரிடப்பட்டுள்ள இந்த கருவி மனிதனின் சுவாசத்தை மூர்ஸ் கோடாக மாற்றி அதை சென்சார் மூலம் பேச்சாக மாற்ற முடியும். டிஏவி சர்வதேச பள்ளியை சேர்ந்த தில்பாகியின் இந்த கருவியானது முற்றிலும் பேச்சாற்றல் இல்லாதவர்களையும் பேச வைக்கும்.

மூச்சு காற்றை குரலாக மாற்றிய சிறுவனின் கணடுபிடிப்பு

உலகின் வேகமான மற்றும் விலைகுறைவான ஆக்மென்டிவ் மற்றும் ஆல்டெர்நேட்டிவ் தொடர்பு சாதனம் (ஏஏசி), இன்று அனைவராலும் வாங்க முடியாத விலையான 4.26 லட்சம் ரூபாயாக உள்ளது. தற்சமயம் இதை ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்தி வருகிறார்.

தற்சமயம் சந்தைகளில் கிடைக்கும் ஏஏசி சாதனங்கள் விலை அதிகமாகவும் குறைவான வேகத்தில் செயல்படுகின்றது, ஆனால் இந்த ஏஏசி சாதனம் வேகமான செயல்திறனுடன் ரூ.5000 விலையில் கிடைக்கும் என்று இதை வடுவமைத்த தில்பாகி தெரிவித்தார். மேலும் டால்க் கருவி மனிதனின் சுவாசத்தை மைக்ரோபோன் மூலம் சிக்னல்களாக மாற்றுகிறது, மூர்ஸ் இன்ஜின் எனப்படும் இந்த சிக்னல்கள் புள்ளி மற்றும் கோடுகளாக மாற்றப்பட்டு அதன்பின் பேச்சாக மாற்றப்படுகின்றது. இந்த குரல் ஆங்கிலத்தில் 9 விதமாக பாலினம் மற்றும் வயதிற்கேற்றவாரு ஒலிக்கும்.

எதிர்காலத்தில் டால்க் கருவி தானாக கணிக்கும் தொழில்நுட்பத்தை இணைத்து கூடுதல் வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்கிறார் தில்பாகி.

Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot