ஏடிஎம் மாதிரி., பணம் கொடுங்க பானி பூரி வாங்குங்க: புதிய இயந்திரம் அறிமுகம்!

|

இந்தியாவின் பிரதான சாலையோர உணவாக இருப்பது பானிபூரி தயாரிப்பு விற்பனைக்கு இயந்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரதான சாலையோர உணவான பானிபூரி

பிரதான சாலையோர உணவான பானிபூரி

இந்தியாவின் பிரதான சாலையோர உணவாக இருப்பது பானிபூரி தான். சாலையோர பானிபூரி கடையும் கையில் இருபது முப்பது சில்லரையாக இருந்தால் போது உடனே நம் கவனம் பான பூரி கடையை நோக்கி செல்லும்.

பாதிக்கப்பட்ட தொழில்களில் பானி பூரியும் ஒன்று

பாதிக்கப்பட்ட தொழில்களில் பானி பூரியும் ஒன்று

கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட பல்வேறு தொழில்களில் பானி பூரியும் ஒன்று. ஊரடங்கு நேரத்தில் சிறு குறு தொழில்களில் ஒன்றான பானி பூரி கடையும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போதெல்லாம் சாலையோரங்கள் வெறிச்சோடியே இருக்கிறது.

ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!

பானி பூரி கடைகளும் ஊழியர்கள் பாதிப்பு

பானி பூரி கடைகளும் ஊழியர்கள் பாதிப்பு

இந்தியாவில் இரண்டு மூன்று சாலைகளில் சென்றால் அங்கு ஒரு பானி பூரியை கடையையாவது பார்த்துவிடலாம் என்றளவு பானி பூரி கடை உள்ளது. பானி பூரி கடைகள் நடத்திய ஊழியர்கள் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பானி பூரி கடைகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்

பானி பூரி கடைகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்

இனி பானி பூரி கடைகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல் இருக்கும். ஏனென்றால் பானி பூரி கடைகள் பூரியில் ரசம் எடுக்க கையை தான் பயன்படுத்துகின்றனர். இதனால் வைரஸ் பரவல் குறைக்கப்பட்டாலும் மக்கள் பானி பூரி சாப்பிடுவதற்கு பயப்படுவார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை.

ஏடிஎம் இயந்திரம் போல் பானி பூரி இயந்திரம்

இந்த நிலையில் ஏடிஎம் இயந்திரம் போல் பானி பூரி இயந்திரம் கண்டுபிடித்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பானி பூரி மிஷன் விளக்கம் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செயல்முறை குறித்து விளக்க வீடியோ

செயல்முறை குறித்து விளக்க வீடியோ

இந்த இயந்திரத்தின் மூலம் சமூக இடைவெளியை பின்பற்றி பானி பூரி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுகிறது. இது செயல்முறை குறித்து விளக்க வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதன் பெயர் கோல் கப்பே, புச்கா, படாசா போன்ற பெயர்களில் அழைக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இயந்திரம் தயாரிக்க 6 மாதங்கள்

இயந்திரம் தயாரிக்க 6 மாதங்கள்

இந்த இயந்திரத்தில் பணம் செலுத்தினால் பணத்திற்கு ஏற்ப பானி பூரி வழங்கப்படும் எந தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் தயாரிக்க 6 மாதங்கள் எடுக்கப்படுகிறது என இதன் தயாரிப்பாளர் தெரிவித்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பாராட்டுகளை பெருவதோடு வைரலாகி வருகிறது.

Best Mobiles in India

English summary
Pani puri vending machine video viral on social media

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X