இந்தியாவில் வெளியான புதிய ஸ்மார்ட்போன்..!??
பானாசோனிக் நிறுவனம் எலுகா வகையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன்படி புதிய பானாசோனிக் எலுகா ஸ்விட்ச் ரூ.19,990க்கு அமேசான் தளத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க் ஏன் இதை மறைத்தார்..??

பானாசோனிக் எலுகா ஸ்விட்ச் 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குதளம் மற்றும் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 8 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் பிரச்சனைகளை எளிமையாக சரி செய்வது எப்படி..??
32 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதியும் 3ஜி, யுஎஸ்பி ஓடிஜி, வை-பை 802.11 b/g/n ஹாட்ஸ்பாட், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.1, ஆண்ட்ராய்டு பீம், என்எப்சி மற்றும் 4ஜி எல்டிஈ போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் ஆம்பியன்ட் லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஈ-காமர்ஸ், கைரோஸ்கோப் மற்றும் ஆக்செல்லோமீட்டர் போன்றவைகளும் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications