Home
News

PAN கார்டு வைத்து இருப்பவர்களுக்கு புது ரூல்ஸ்.. வருமான வரி விதிகள் 2026 கீழ் அமல்.. வந்தது 4 அதிரடி மாற்றம்!

புதிய வருமான வரி விதிகள் 2026 (New Income tax Rules 2026) இன் கீழ் பான் கார்டு இல்லாமல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 4 படிவங்கள் புதுப்பிப்பு செய்யப்பட்டு உள்ளன. இது எந்தெந்த படிவங்கள், எந்த பரிவர்த்தனைகளை செய்யும்போது இதை சமர்பிக்க வேண்டும்.

இது ஒட்டுமொத்தமாக பான் கார்டு வைத்திருப்போருக்கு பொருந்தாது. போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு பொருந்தும். போஸ்ட் ஆபீஸ் வழியாக மேற்கொள்ளப்படும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு (PAN Card) என்று சுருக்கமாக அழைக்கப்படும் நிரந்தரக் கணக்கு எண்ணை (Permanent Account Number) சமர்பிக்க வேண்டும்.

PAN கார்டு வைத்து இருப்பவர்களுக்கு புது ரூல்ஸ்.. வருமான வரி விதிகள்!

பான் கார்டு இல்லாதவர்கள் அல்லது பான் கார்டை சமர்பிக்க விரும்பாதவர்கள் புதிய வருமான வரி விதிகள் 2026 இன் கீழ் படிவம் எண் 97 (Form No. 97) பெற்று கொள்ள வேண்டும். இந்த படிவத்தில் போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவரின் பெயர், முகவரி, பரிவர்த்தனை தொகை மற்றும் அதற்கான தேவைப்படும் துணை ஆவணங்களின் விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.

படிவம் 121 வழியாக டிடிஎஸ் விலக்கு (TDS Exemption) சுலபமாக்கப்பட்டுள்ளது. வட்டி வருமானம் (அஞ்சலக முதலீடுகள் உட்பட) மீதான டிடிஎஸ் பிடித்தத்தை தவிர்க்க, தனிநபர்களால் சமர்ப்பிக்கப்பட்டு வந்த படிவங்கள் 15ஜி மற்றும் 15எச்-க்கு மாற்றாக இனி ஒரேயொரு படிவமாக 121 மட்டுமே பயன்படுத்தப்படும்.

மேலும், தனிநபரிடம் பான் எண் இல்லாதபோது பயன்படுத்தப்பட்டு வந்த படிவம் 60-க்கு மாற்றாக, தற்போது படிவங்கள் 97 மற்றும் 98 அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. வருமான வரி விதிகள் 159, 160, 161, 211 மற்றும் 237 கீழ், வைப்புத்தொகைகள், பணம் எடுத்தல், கணக்கு தொடங்குதல் மற்றும் கால வைப்புத்தொகைகள் உள்ளிட்டவைக்கு பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பான் எண் இல்லையென்றால், பெயர், முகவரி, பரிவர்த்தனை வகை மற்றும் தொகையை குறிப்பிட்டு படிவம் 97 சமர்ப்பிக்க வேண்டும். அதோடு துணை ஆவணங்களையும் இணைக்க வேண்டும். ஆகவே, பான் எண் இல்லையென்றாலும் பரிவர்த்தனைகளை செய்ய முடியும். இது நீடிக்குமா என்பது தெரியாது.

அஞ்சல் அலுவலக எஸ்பி ஆணை எண் 02/2026 இன் படி, வருமான வரி விதிகள், 2026 இன் கீழ் இவை குறிப்பிடப்பட்டுள்ள. அனைத்து பரிவர்த்தனைகளிலும், வைப்புத்தொகை செலுத்துபவர் பான் எண்ணை கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும். படிவங்கள் 15ஜி மற்றும் 15எச்-க்கு மாற்றாக, இனிமேல் படிவம் 121-ஐச் சமர்ப்பித்து கொள்ளலாம்.

இந்த புதிய விதிகளின்படி, போஸ்ட் ஆபீஸ் ஆனது இந்த படிவத்தின் பகுதி ஏ-ஐப் பெற்று சரிபார்ப்பதுடன், பகுதி பி-ஐப் பூர்த்தி செய்து கொள்ளும். மேலும், இந்த விவரங்களை பதிவு செய்து கொண்டு ஏழு ஆண்டுகளுக்கு பராமரித்து கொள்ளும். சிஸ்டம் அடிப்படையிலான மேம்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் வரை, படிவங்கள் 15ஜி மற்றும் 15எச் அமலில் இருக்கும்.

மேலும், படிவம் எண் 121-ஐ தாக்கல் செய்வது கட்டாயம் கிடையாது. ஒரு நிதியாண்டுக்கான மொத்த வருமானத்தின் மீதான வரி தொகை'பூஜ்யமாக இருக்கும்பட்சத்தில் குறிப்பிட்ட சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வரி செலுத்துவோர் மட்டுமே வரி பிடித்தம் செய்யப்படுவதை தவிர்க்க இந்த படிவத்தைப் பயன்படுத்துவார்கள்.

Best Mobiles in India

English summary
PAN Card Mandatory For Post Office Transactions 4 Forms Updated Under New Income tax Rules 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X