Just In
- 3 min ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- 43 min ago
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- 1 hr ago
ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் புதிய மோட்டோ போன்: ஆனாலும் பிரயோஜனம் இல்லை.! ஏன்?
- 1 hr ago
பதான் திரைப்படத்தில் புதிய ஸ்மார்ட்போனுடன் வரும் ஹர்திக் பாண்டியா! ட்விட்டரில் வெளியான புகைப்படம்!
Don't Miss
- News
"கேங்மேன்" பணிகள்.. திருநங்கைகளுக்காக முதன் முறையாக விதிகளை தளர்த்திய இந்திய ரயில்வே.. சூப்பர்
- Movies
நடை பயணத்தில் திடீரென மயங்கி விழுந்த நடிகர்... மாரடைப்பா என்ற அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
உங்களிடம் PAN Card இருக்கிறதா? அப்போ இந்த மேட்டரை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.! ஏனெனில்?
பான் கார்டு ஒரு முக்கியமான அரசு ஆவணமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக அரசாங்க சலுகைகளைப் பெற அல்லது வங்கிகளில் நிதி பரிமாற்றம் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளுக்கு பான் கார்டு கண்டிப்பாகத் தேவைப்படுகிறது என்பது தான் உண்மை.

பான் அட்டை
குறிப்பாக ஆதார் அட்டையில் உள்ள ஆதார் எண் எப்படி உங்களின் அடையாள விபரங்களை வெளிப்படுத்துகிறதோ, அதேபோல் பான் அட்டை உங்களின் நிதி வரலாற்றைக் காண்பிக்கிறது.

வருமான வரித்துறை..
இப்போது உங்களிடம் இரண்டு பான் கார்டுகள் இருந்தால், அதில் ஒன்றை வருமான வரித்துறையிடம் உடனே ஒப்படைக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் விருப்பத்துடன் இதைச் செய்தால், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள மாட்டீர்கள். தற்போது இதற்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விருப்பங்கள் உள்ளன.

அபராதம் விதிக்கப்படும்
ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் முன்னதாக வருமான வரித் துறை வெளியிட்ட தகவலின்படி, பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம். குறிப்பாக வருமான வரிச் சட்டம் 1961-கீழ், விலக்கு அளிக்கப்பட்ட பிரிவினரைத் தவிர பிற அனைத்து பான் அட்டைதாரர்களும் 2023 மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆகும். இணைக்கப்படாத பான் அட்டைகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயலற்றதாகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நீங்கள் இதுவரை பான் கார்டை அப்ளை செய்யவில்லை என்றால், எவ்வாறு பான் கார்டு அப்ளை செய்வது என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1
முதலில் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.incometax.gov.in/iec/foportal என்ற வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும். அடுத்து அந்த பக்கத்தில் உள்ள instant e-PAN என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை-2
அடுத்து உங்களுடைய ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். பின்பு அந்த பக்கத்தில் உள்ள terms and conditions நன்றாகப் படித்து Accept என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களது மொபைல் எண்ணிற்கு OTP ஒன்று வரும். அந்த ஓடிபி உள்ளீடு செய்த பிறகு மற்ற விவரங்களை முழுவதும் படித்து Confirm என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-3
அதன்பிறகு உங்களது பான் கார்டு விவரங்கள் PDF வடிவில் நீங்கள் உள்ளீடு செய்த இமெயிலுக்கு அனுப்பப்பட்டு இருக்கும். பின்பு உங்களது இமெயில் வழியாக பான் கார்டை டவுன்லோட் செய்ய முடியும். குறிப்பாக இன்ஸ்டன்ட் பான் கார்டு பெறுவதற்கு நீங்கள் எந்தவித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470