Home
News

PAN.. டிச.31-க்கு கெடு முடிந்தது.. பேங்க் பணம் டெபாசிட் போச்சு.. ஆதார் எடுங்க, உடனடியா இதை செய்து பண்ணிடுங்க!

பான் (PAN) என்று சுருக்கமாக அழைக்கப்படும் நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number) ஆனது ஆதார் எண்ணுடன் (Aadhaar Number) இணைக்கப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு கட்ட அவகாசங்கள் கொடுக்கப்பட்டன. இப்போது, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இணைக்க வருமான வரித் துறை காலக்கெடு கொடுத்துள்ளது. இந்த கெடுவுக்குள் இணைக்காவிட்டால் என்ன நடக்கும், அதற்குள் எப்படி இணைப்பது, ஆன்லைனில் எப்படி செய்ய வேண்டும், உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சிபிடிடி(CBDT) விதிகளின்படி ஆதார் நம்பருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செயலவிழப்பு செய்யப்படவேண்டும். ஆகவே, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டை இணைக்காவிட்டால், ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து பான் கார்டு செயலவிழப்பு செய்யப்பட்டுவிடும். இதனால், வருமான வரி செலுத்தல், பேங்க் பணப் பரிமாற்றம் போன்ற முக்கிய நடவடிக்கைகளை செய்ய முடியாமல் போகலாம்.

PAN.. டிச.31-க்கு கெடு முடிந்தது.. பேங்க் பணம் டெபாசிட் போச்சு!

ஆகவே, புதிய பேங்க் அக்கவுண்ட், டிமேட் அக்கவுண்ட் போன்றவற்றை ஓப்பன் செய்ய முடியாது. அதிக பணத்தை பேங்கில் டெபாசிட் செய்ய முடியாது. ஆகவே, பங்கு சந்தையில் முதலீடு மற்றும் எஸ்ஐபி (SIP) செய்ய முடியாது. பிக்சடு டெபாசிட் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்ய முடியாது. அதிக பணம் கொடுத்து வீடு, கார் உள்ளிட்டவற்றை வாங்கவும் முடியாது, விற்கவும் முடியாது. எப்படி இணைப்பது?

வருமான வரித் துறையின் (Income Tax Department) அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு சென்று கொள்ளுங்கள். ஓப்பன் செய்த உடனேயே இடது புறத்தில் குயிக் லிங்க்ஸ் (Quick Links) பக்கம் இடம்பெற்றிருக்கும். இதில் பல்வேறு டேப்கள் இடம்பெற்றிருக்கும். இதை கீழே ஸ்ரோல் செய்து லிங்க் ஆதார் (Link Aadhaar) டேப்-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள். லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் கிடையாது.

இதை செய்த உடனேயே மூன்று செயல்முறைகள் இருக்கும். முதலில் உங்களது விவரங்களை (Details) கொடுக்க வேண்டும். அடுத்து வெரிபிகேஷன் (Verification) இருக்கும். மூன்றாவதாக ஸ்டேட்டஸ் (Status) இருக்கும். அதாவது, எடுத்த உடனேயே உங்களது பான் கார்டு நம்பர் (PAN Card Number) மற்றும் ஆதார் கார்டு நம்பர் (Aadhaar Card Number) ஆகியவற்றை கொடுக்க வேண்டும்.

சரிபார்த்தல் (Validate) என்கிற டேப்-ஐ கிளிக் செய்ய வேண்டும். இதை செய்த பிறகு யுஐடிஏஐ (UIDAI) மூலமாக வெரிபிகேஷன் செய்யப்படும். அதாவது, உங்களது ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். இந்த ஓடிபி நம்பரை கேட்கப்படும் இடத்தில் கொடுக்க வேண்டும். இந்த நேரத்தில் மொபைல் நம்பர் மற்றும் பெயர் கேட்கப்படலாம்.

இதை செய்தால் போதும், உங்களது பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைப்புக்கான செயல்முறைகள் முடிந்துவிட்டது. இதற்கு அடுத்து பான் கார்டில் இருக்கும் விவரங்கள் மற்றும் ஆதார் கார்டில் இருக்கும் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அதன்பிறகு இணைக்கப்படும். ஒருவேளை உங்களது விவரங்கள் இரண்டு கார்டிகளிலும் சரியாக ஒத்துப்போகவில்லை என்றால், லிங்க் செய்யப்படாது.

ஆகவே, இதை செய்வதற்கு முன்பாகவே ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு விவரங்களை சரிபார்த்து கொள்ளுங்கள். இல்லையென்றால், அதை முதலில் சரி செய்துவிட்டு, அதன் பிறகு இந்த இணைப்பை செய்யுங்கள். இந்த செயல்முறைகளை செய்த பிறகு லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் (Link Aadhaar Status) மூலம் அதன் நிலையை தெரிந்து கொள்ளலாம். இது லிங்க் ஆதாருக்கு கீழே இடம்பெற்றிருக்கும்.

இதிலும் உங்களது பான் நம்பர் மற்றும் ஆதார் நம்பர் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். அதன்பிறகு வியூ லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் டேப்-ஐ கிளிக் செய்ய வேண்டும். இதை செய்தால் போதும் நிலையை தெரிந்து கொள்ளலாம். இது கிட்டத்தட்ட 3 முதல் 4 நாட்களில் முடிக்கப்படும். ஆகவே, இணைப்பை செய்வுடன் மூன்று நாட்களுக்கு பிறகு ஸ்டேட்டஸை தெரிந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
PAN Card Deactivation After December 31 2025 Deadline How to Link PAN with Aadhaar Card Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X