Home
News

புது PAN ரூல்ஸ்.. ரூ.1000 கட்டண விலக்கு.. ஜன.1 முதல் அமல்.. 3 அட்டைதாரர்களுக்கு இல்லை.. எந்தெந்த அட்டைகள்?

பான் கார்டு வைத்திருக்கும் ஒட்டுமொத்த அட்டைதாரர்களுக்கும் ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளன. டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இப்படி இணைக்காதவர்கள் ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து ரூ.1,000 தாமத கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இதில் சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139ஏஏ படி பான் (PAN) என்கிற பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பரை (Permanent Account Number) ஆதார் (Aadhaar) எண்ணுடன் இணைக்க வேண்டும். இதை ஆன்லைனில் எளிதாக செய்து முடிக்கலாம். இதற்கான காலஅவகாசம் டிசம்பர் 31ஆம் தேதியாக இருக்கிறது. இந்த தேதிக்கு பிறகு ரூ.1,000 தாமத கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

புது PAN ரூல்ஸ்.. ரூ.1000 கட்டண விலக்கு.. ஜன.1 முதல் அமல்.. யாருக்கு?

இருப்பினும், 3 அட்டைதாரர்களுக்கு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, இந்த அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 தாமத கட்டணமும் இல்லை. பான் ஆதார் இணைப்பும் அவசியம் இல்லை. அதேபோல டிசம்பர் 31 ஆம் தேதி காலஅவகாசம் இந்த அட்டைதாரர்களுக்கு பொருந்தாது.

பான் ஆதார் இணைப்பு விலக்கு

இந்த விலக்கு அசாம், ஜம்மு காஷ்மீர் மற்றும் மேகாலயா மாநிலங்களில் வசிக்கும் நபர்களுக்கு பொருந்தும். வருமான வரிச் சட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ் இந்தியர்களாக வகைப்படுத்தப்பட்ட நபர்களுக்கும் இந்த விலக்கு பொருந்தும். மேலும், 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களுக்கும் இந்த பான் ஆதார் இணைப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வயது முந்தைய நிதியாண்டில் 80 வயதை எட்டிய மூத்த குடிமக்களுக்கும் பொருந்தும். பான் கார்டு வைத்திருக்கும் சிறார்கள் 18 வயது ஆகும் வரை அதை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், 18 வயது வந்தவுடன், ஆதார் மற்றும் பான் அட்டையை இணைக்க வேண்டும். இந்த மூன்று அட்டைதாரர்கள் மட்டுமல்லாமல், மேலும் சிலருக்கு விலக்கு இருக்கிறது.

இந்திய குடிமக்கள் அல்லாத நபர்களும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆகவே, என்ஆர்ஐக்கள் (NRIs) என்கிற வெளிநாடுவாழ் இந்தியர்கள் (Non-Resident Indians) பான் ஆதார் இணைப்பை கட்டாயமாக செய்ய வேண்டிய அவசியமில்லை. மேலும், இறந்தவரின் குடும்பத்தினர் அவருடைய பான் எண்ணை ஆதாருடன் இணைக்க தேவையில்லை.

இருப்பினும், அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் பான் கார்டை ஒப்படைக்க வேண்டி உள்ளது. இந்த அட்டைதாரர்கள் மற்றும் நபர்களுக்கு பான் ஆதார் இணைப்பு (PAN Aadhaar Linking) அவசியமில்லை. ஆகவே, இந்த விலக்கு பெற்றவர்களை தவிர மற்ற ஒட்டுமொத்த அட்டைதாரர்களும் பான் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதை செய்யாமல் போனால், செயலிழப்பு செய்யப்பட்டலாம்.

பான் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது?

1. இ-பில்லிங் (e-Filing) போர்ட்டலுக்கு செல்லுங்கள். ஹோம் பேஜ்ஜை கிளிக் செய்து கொள்ளுங்கள். இடது புறத்தில் பல்வேறு விருப்பங்கள் தோன்றும். இதில் லிங்க் ஆதார் (Link Aadhaar) விருப்பத்தை கிளிக் செய்து ஓப்பன் செய்து கொள்ளுங்கள். இதில் 3 படிநிலைகள் இருக்கும். விவரங்களை கொடுத்தல், வெரிபிகேஷன், நிலை பார்த்தல் இருக்கும்.

2. முதல் படிநிலையில் பான் நம்பர் மற்றும் ஆதார் நம்பரை கொடுக்க வேண்டும். இரண்டாவது படிநிலையில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பி வெரிபிகேஷன் செய்யப்படும். மூன்றாவது படிநிலையில் பான் ஆதார் இணைப்பு முடிந்துவிடும். இதன் நிலையை (Status) இதே இ-பில்லிங் போர்டலில் தெரிந்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
PAN Aadhaar linking rules from January 1 These cardholders are exempted from mandatory linking
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X