Home
News

இதே கடைசி தேதி.. பான் கார்டு லாக் ஆகலாம்.. அபராதம் வேற இருக்கு.. இதை பண்ணிடுங்க!

நீங்கள் பான் (Pan) மற்றும் ஆதார் (Aadhaar) கார்டு வைத்திருக்கும் பட்சத்தில் அவற்றை இணைக்கவில்லை என்றால் உடனடியாக அதை செய்துவிடுங்கள். ஏனென்றால், பான்-ஆதார் இணைப்புக்கான கடைசி தேதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. இந்த தேதியை தவறினால் அபராதம் மட்டுமல்லாமல், பான் கார்டு செயலிழந்து போகும்.

இந்தியாவின் குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் சேவைகளை பெற வேண்டும் என்றால் ஆதார் முக்கியமாகிறது. அதேபோல வங்கி கணக்கு தொடங்குவது முதல் சிம் கார்டு வாங்குவது வரையில் ஆதார் தேவைப்படுகிறது. இப்படி அடையாளம் சார்ந்த எந்த வேலையை செய்ய வேண்டும் என்றாலும் உங்களிடம் ஆதார் கார்டு இருக்க வேண்டும்.

இதே கடைசி தேதி.. பான் கார்டு லாக் ஆகலாம்.. இதை பண்ணிடுங்க!

இதனால், ஆதார் கார்டில் ஏதாவது மாற்றங்கள் வரும்பட்சத்தில், அதை உடனடியாக மக்கள் செய்துவிடுவது நல்லது. மத்திய அரசானது, ஆதார் கார்டில் கொண்டுவரும் மாற்றங்களை ஒருவேளை பின்பற்றவில்லை என்றால், வரும் நாட்களில் பல்வேறு சேவைகளை மக்களால் பெற முடியாமல் போக வாய்ப்புள்ளது. இந்த வரிசையில் பான்-ஆதார் லிங்க் (Pan-Aadhaar Link) முதன்மையாக பார்க்கப்படுகிறது.

இதற்காக மத்திய அரசு, பல மாதங்கள் கால அவகாசம் வழங்கிய நிலையில், மக்களின் கோரிக்கைகளின்படி அவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்தது. இதனிடையே அபராதமும் வசூலிக்கப்பட்டது. ஆனால், வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் பான்-ஆதார் லிங்க் பணியை மக்கள் கட்டயாம் செய்துவிட வேண்டும், அப்படியில்லை என்றால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ரூ.1,000 அபராதம் தானே கட்டிக்கொள்ளலாம் என்று மட்டும் எளிதாகவிட்டு எண்ணி விடாதீர்கள்.

ஏனென்றால், ஜூன் 30ஆம் தேதிக்குள் பான்-ஆதார் லிங்க் செய்யப்படவில்லை என்றால், உங்களது பான் கார்டு செயலிழந்து போக வாய்ப்புள்ளது. பின்னர், மீண்டும் புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது தேவையற்ற கால விரயத்தை ஏற்படுத்தும். ஆகவே, பான்-ஆதார் லிங்க் பணியை முதலில் செய்துவிடுங்கள். இந்த நேரத்தில் பான்-ஆதார் லிங்க் எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

முதலில் incometaxindiaefiling.gov.in என்ற வெப்சைட்டுக்கு சென்று குயிக் லிங்க்ஸ் (Quick Links) என்னும் டேப்பை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் லிங்க் ஆதார் (Link Aadhaar) டேப் தோன்றும், அதை கிளிக் செய்தால், பான் மற்றும் ஆதார் விவரங்கள் கேட்கப்படும். உங்களது விவரங்களை உள்ளீடு செய்து கொள்ளுங்கள்.

இதையடுத்து பான் மற்றும் ஆதார் கார்டுடன் லிங்க் செய்திருக்கும் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும் அவற்றை உள்ளீடு செய்துகொள்ளுங்கள். இறுதியாக லிங்க் நவ் (Link Now) டேப் தோன்றும் அதை கிளிக் செய்தால், உங்களது விண்ணப்பம் பெறப்பட்டுவிடும். நீங்கள் ஆதாரில் கொடுத்திருக்கும் இமெயில் முகவரிக்கு கன்பர்மேஷன் (Conformation) மெயில் அனுப்பப்படும்.

அதன்பின் ஒரு வாரத்தில் உங்களது பான் மற்றும் ஆதார் கார்டுடன் லிங்க் செய்யப்பட்டுவிட்டதாக உங்களுக்கு மெசேஜ் அல்லது மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். இந்த வெப்சைட் மட்டுமல்லாமல், UTIITSL மற்றும் e-gov NSDL ஆகிய வெப்சைட்களிலும் பான் - ஆதார் லிங்க் செய்யலாம். இதுபோன்ற மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள கிஸ்பாட் தளத்தை பின்தொடருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Pan-Aadhaar Linking Deadline Date Penalty Apply And Check, Here is Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X