Home
News

PAN கார்டு நம்பரை காப்பாத்திக்கோங்க.. இந்திய அரசின் புதிய கெடு.. Aadhaar கார்டு கட்டாயம்!

பான் (PAN) நம்பரை ஆதார் (Aadhaar) அட்டை உடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மீண்டும் நீட்டிப்பதாக, நிதி அமைச்சகத்தின் (Ministry of Finance) கீழ் இயங்கும் மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes - CBDT) அறிவித்து உள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் உள்ள வரி செலுத்துவோருக்கு, பான்-ஆதார் இணைப்பு என்கிற கட்டாய செயல்முறையை இன்னும் செய்து முடிக்கத்தோர்களுக்கு அதை செய்து முடிக்க கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான புதிய காலக்கெடு 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

PAN கார்டு நம்பரை காப்பாத்திக்கோங்க.. இந்திய அரசின் புதிய கெடு!

தனிநபர்கள் தங்கள் பான் கார்ட்டை ஆக்டிவ் ஆக இருப்பதை உறுதி செய்யவும், நிதி பரிவர்த்தனைகளில் சாத்தியமான அபராதங்கள் அல்லது கட்டுப்பாடுகளை தவிர்க்கவும் பான்-ஆதார் இணைப்பை செய்வது மிகவும் அவசியமாகும். இந்த இரண்டு அடையாள ஆவணங்களையும் இணைப்பது வருமான வரித்துறை (Income Tax Department) அடையாளங்களை சரிபார்க்கவும், வரி ஏய்ப்பைத் தடுக்கவும், டிஜிட்டல் சேவைகளை நெறிப்படுத்தவும் கூட உதவுகிறது.

2025 டிசம்பர் 31 என்கிற நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவுடன், குடிமக்கள் இப்போது எந்தவொரு பிஸிக்கல் சென்டருக்கும் செல்லாமல் வருமான வரி மின்-தாக்கல் போர்டல் (Income Tax e-filing portal) அல்லது பிற ஆன்லைன் முறைகள் மூலம் பான்-ஆதார் இணைப்பு செயல்முறையை எளிதாக முடிக்க முடியும்.

தங்கள் பான் மற்றும் ஆதாரை இன்னும் இணைக்காத வரி செலுத்துவோர்கள், தங்கள் பான் செயல் இழந்து போவது (PAN invalidation) போன்ற எதிர்கால சிரமங்களை தவிர்க்க உடனடியாக பான்-ஆதார் இணைப்பை செய்யுமாறு இந்திய அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது; அதற்கான காலக்கெடு அறிவிக்கப்பட்டு அதுவும் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது.

ஆதார் அட்டை தொடர்பான மற்ற சமீபத்திய மாற்றங்கள்: ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை அப்டேட் செய்யும் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முன்பு, எந்தவொரு திருத்தம் அல்லது புதுப்பிப்புக்கும் நீங்கள் ஆதார் சேவா கேந்திராவிற்கு (Aadhaar Seva Kendra) செல்ல வேண்டி இருந்தது. இப்போது, ​​முழு செயல்முறையையும் ஆன்லைன் வழியாகவே செய்யலாம்.

பெயர் அல்லது முகவரி உட்பட, நீங்கள் சமர்ப்பிக்கும் விவரங்கள் ஆனது உங்கள் பான் கார்டு (PAN Card), பாஸ்போர்ட் (Passport), ஓட்டுநர் உரிமம் (Driving License) அல்லது ரேஷன் கார்டு (Ration Card) போன்ற அதிகாரப்பூர்வ அரசாங்க ஆவணங்களுடன் தானாகவே சரிபார்க்கப்படும். இது விரைவான மற்றும் பாதுகாப்பான புதுப்பிப்பு செயல்முறையை உறுதி செய்கிறது.

இந்த இடத்தில் ஆதார் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது / புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 5 முதல் 7 வயது மற்றும் 15 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச பயோமெட்ரிக் அப்டேட்களை செய்யலாம். பெயர், முகவரி அல்லது மொபைல் எண்ணை அப்டேட் செய்ய ரூ.75 கட்டணம் வசூலிக்கப்படும்

கைரேகைகள், கருவிழி ஸ்கேன் அல்லது புகைப்படத்தை அப்டேட் செய்ய ரூ.125 கட்டணம் வசூலிக்கப்படும். 2026 ஜூன் 14 வரை இலவசமாக ஆன்லைன் ஆவண அப்டேட்கள் செய்யப்படும். அதன் பிறகு பதிவு மையத்தில் ரூ.75 கட்டணம் வசூலிக்கப்படும். ஆதார் மறுபதிப்பு கோரிக்கைகளுக்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படும். கடைசியாக வீட்டு சேர்க்கை சேவைக்கு, முதல் நபருக்கு ரூ.700 கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் அதே முகவரியில் ஒவ்வொரு கூடுதல் நபருக்கும் ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படும்.

இதேபோல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான "உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்" (Know Your Customer - KYC) நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் கீழ் நீங்கள் இப்போது கீழ்வரும் 3 வழிகளில் கேஒய்சி செயல்முறையை முன்னெப்போதை விடவும் எளிமையாக முடிக்கலாம்: ஆதார் ஓடிபி சரிபார்ப்பு (Aadhaar OTP verification), வீடியோ கேஒய்சி (Video KYC) மற்றும் நேருக்கு நேர் சரிபார்ப்பு ( Face-to-face verification).

More from GizBot

Best Mobiles in India

English summary
PAN Aadhaar Link Deadline Extended Again Now Last Date is 2025 December 31
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X