Home
News

எல்லாமே மாறுது.. PAN 2.0 திட்டத்திற்கு ஒப்புதல்.. QR Code உடன் புதிய பான் கார்டு வாங்கணும்.. எவ்ளோ செலவாகும்?

பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவானது (Cabinet Committee on Economic Affairs - CCEA) வருமான வரித் துறையின் பான் 2.0 திட்டத்திற்கு (PAN 2.0 Project) ஒப்புதல் அளித்து உள்ளது.

பான் 2.0 ப்ராஜெக்ட்டின் கீழ் க்யூஆர் கோட் உடனான பான் கார்டு (PAN Card with QR Code) வழங்கப்படும் மற்றும் இந்த மேம்படுத்தல் செயல்முறை ஆனது முற்றிலும் இலவசமாக இருக்கும் என்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் (Union Information and Broadcasting Minister) ஆன அஸ்வினி வைஷ்னா (Ashwini Vaishnaw) அறிவித்துள்ளார்.

PAN 2.0 திட்டத்திற்கு ஒப்புதல்.. QR Code உடன் புதிய பான் கார்டு!

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, ரூ.1,435 கோடி செலவின் கீழ் உருவாகும் இந்த பான் 2.0 ப்ராஜெக்ட் என்றால் என்ன? இதன்கீழ் வரி செலுத்துவதில் மற்றும் வரி செலுத்துவோர்களுக்கு என்னென்ன மாற்றங்கள் வரும்?போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இதோ:

பான் 2.0 ப்ராஜெக்ட் என்றால் என்ன? பான் 2.0 ப்ராஜெக்ட் என்பது ஒரு இ-கவர்னென்ஸ் ப்ராஜெக்ட் (e-Governance project) ஆகும். இதன்கீழ் பான்/டான் சேவைகளில் (PAN/TAN services) தொழில்நுட்பம் சார்ந்த மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம், வரி செலுத்துவோர் பதிவு சேவைகளின் வணிக செயல்முறைகள் (Business processes of taxpayer registration services) ஆனது மறு-வடிவமைகைப்படும். இது வரி செலுத்துவோர்களுக்கு மேம்பட்ட டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும்.

இது தற்போதைய பான்/டான் 1.0 சுற்றுச்சூழல் அமைப்பிற்கான மேம்படுத்தலாக இருக்கும். கூடவே இது முக்கியமான மற்றும் முக்கிய அல்லாத பான்/டான் செயல்பாடுகள் மற்றும் பான் சரிபார்ப்பு சேவையை ஒருங்கிணைக்கும். மேலும் இந்த பான் 2.0 ப்ராஜெக்ட் ஆனது வரி செலுத்துவோர் பதிவு சேவைகளில் (Taxpayer registration services) தொழில்நுட்பம் சார்ந்த 4 முக்கியமான மாற்றங்களை கொண்டு வரும்:

1. அணுகல் தன்மையை எளிமையாக்கும் மற்றும் மேம்பட்ட தரத்துடன் விரைவான சேவையை வழங்கும் (Ease of access and speedy service delivery with improved quality)
2. ட்ரூத் மற்றும் டேட்டா நிலைத்தன்மையின் ஒற்றை ஆதாரமாக இருக்கும். (Single source of truth and data-consistency)

3. ஈகோ-பிரெண்டலி செயல்முறைகள் மற்றும் காஸ்ட் ஆப்டிமைசேஷன் (Eco-friendly processes and cost optimization)
4. இன்னும் துரிதமான செக்யூரிட்டி மற்றும் ஆப்டிமைசேஷனுக்கான உள்கட்டமைப்பை கொண்டிருக்கும் (Security and optimization of infrastructure for greater agility)

அரசு நிறுவனங்களின் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களில் ஒரு ஒருங்கிணைந்த அடையாளங்காட்டியாக பான் அட்டையை நிறுவுவதன் மூலம், இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா பார்வையானது அடுத்தகட்டத்திற்கு நகர்கிறது. இதுகுறித்து மத்திய அமைச்சர் வைஷ்ணவ் பேசுகையில், பான் ஒரு பொதுவான வணிக அடையாளங்காட்டியாக (Common business identifier) மாறும் என்று கூறினார்

மேலும் இதற்காக ஒரு ஒருங்கிணைந்த போர்டல் (Unified porta) உருவாக்கப்படும் என்றும். அது முற்றிலும் காகிதமற்ற (Paperless) செயல்முறைகளை.. அதாவது முழுக்க முழுக்க ஆன்லைன் செயல்முறையை (Online Process) கொண்டிருக்கும்; மேலும் குறை தீர்க்கும் முறைக்கு (Grievance redressal system) முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் வணிக உலகின் நீண்டகால கோரிக்கையான ஒரு பொதுவான வணிக அடையாளங்காட்டியை உருவாக்க அனைத்து பான், டான் சேவைகளும் ஒன்றிணைக்கப்படும் என்று அவர் கூறினார். பான் டேட்டாவை பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களுக்கும் பான் டேட்டா வால்ட் சிஸ்டம் (PAN data vault system) கட்டாயமாக்கப்படும் என்றும், இதனால் நுகர்வோர் வழங்கும் டேட்டா பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
PAN 2 0 Project Gets Approval New PAN Card with QR Code At Free of Cost is Coming
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X