PAN 2.0 புது ரூல்ஸ்.. டூப்ளிகேட் பான் கார்டு.. இடியை இறக்கும் Income Tax சட்டம்.. உடனே இதை செய்ங்க.. இல்லனா?
பான் (PAN) என்று சுருக்கமாக அழைக்கப்படும் நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number) அமைப்பை சீராக்கும் நோக்கத்தின்கீழ், பான் 2.0 (PAN 2.0) அறிமுகத்தை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த மாற்றத்தின் கீழ் பான் கார்டு சேவையில் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. அதில் மிகவும் முக்கியமான மாற்றம்: ஒன்றுக்கும் மேற்பட்ட - டூப்ளிகேட் பான் கார்டுகள் உடன் சம்பந்தப்பட்டுள்ளது.
நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருந்தால், சட்ட சிக்கல்களை தவிர்க்க உடனடியாக சில நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. பான் 2.0 ஆனது எப்படி டூப்ளிகேட் பான்களை அடையாளம் காணும்? ஒன்றுக்கும் மேற்பட்ட பான் எண்ணை வைத்திருப்பது ஏன் பிரச்சனை? உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் இருந்தால், நீங்கள் உடனே என்ன செய்ய வேண்டும்? இதை செய்யாவிட்டால் என்ன நடக்கும்?

பான் 2.0 எப்படி டூப்ளிகேட் பான்களை அடையாளம் காணும்? புதிய பான் 2.0 அமைப்பானது, சாத்தியமான டூப்ளிகேட் பான் பயன்பாடுகளை கண்டறிய அட்வான்ஸ்டு லாஜிக்கை (Advanced Logic) பயன்படுத்துகிறது. இதன் மையப்படுத்தப்பட்ட பொறிமுறையானது (Centralised mechanism) எந்தவொரு டூப்ளிகேட் பான் கார்டுகளையும் தானாகவே கண்டுபிடித்து, தனிநபர்கள் பல பான் கார்டுகளை வைத்திருக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துகிறது. இதன்விளைவாகவே க்யூஆர் என்கிரிப்ட் செய்யப்பட்ட பான் கார்டு அறிமுகமாகி உள்ளது!
ஒன்றுக்கும் மேற்பட்ட பான் எண்ணை வைத்திருப்பது ஏன் பிரச்சனை? வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, எந்த ஒரு நபரும் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருக்க அனுமதி இல்லை. பான் 2.0 அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், டூப்ளிகேட் பான்களை அடையாளம் காண அரசாங்கம் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பான் நம்பரை வைத்திருப்பது கண்டறியப்பட்டால், அபராதம் மற்றும் பிற விளைவுகளை சந்திக்க நேரிடும்.
உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் இருந்தால், நீங்கள் உடனே என்ன செய்ய வேண்டும்? முதலில் உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதிகாரப்பூர்வ வருமான வரித் துறை இணையதளத்தில் ஒவ்வொரு பான் எண்ணுடன் இணைக்கப்பட்ட விவரங்களை சரிபார்ப்பதன் மூலம் இதை நீங்கள் எளிதாக செய்யலாம். உங்கள் பெயருடன் பல பான்கள் இணைக்கப்பட்டிருப்பதை கண்டால், உடனே கீழ்வரும் நடவடிக்கைகளை செய்யுங்கள்:
டூப்ளிகேட் பான் நம்பரை கண்டறிந்ததும், அதை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். வருமான வரிச் சட்டத்தின்படி, அதிகார வரம்பிற்குட்பட்ட மதிப்பீட்டு அதிகாரிக்கு தெரிவித்து, கூடுதல் பான் எண்ணை நீக்க வேண்டும் அல்லது செயலிழக்க கோர வேண்டும். டூப்ளிகேட் பான் எண்ணை ரத்து செய்ய, பான் சேன்ஜ் ரெக்வஸ்ட் (PAN change request) விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டி இருக்கும்.
இதில் நீங்கள் பயன்படுத்த உத்தேசித்துள்ள பான் எண்ணை குறிப்பிட வேண்டும் மற்றும் ரத்து செய்ய விரும்பும் டூப்ளிகேட் பான் குர்தா விவரங்களையும் வழங்க வேண்டும். உங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கும் போது கூடுதல் பான் கார்டுகளின் நகல்களையும் படிவத்துடன் இணைக்க வேண்டும். தேவையான படிவங்களை பூர்த்தி செய்த பிறகு, அவற்றை அதிகார வரம்பிற்குட்பட்ட மதிப்பீட்டு அதிகாரியிடம் சமர்ப்பிக்கவும். அவர்கள் உங்கள் கோரிக்கையைச் செயல்படுத்தி, டூப்ளிகேட் பான்-ஐ செயலிழக்க செய்வார்கள்!
இதை செய்யாவிட்டால் என்ன நடக்கும்? டூப்ளிகேட் பான் நம்பரை நீங்கள் ஒப்படைக்க தவறினால், வருமான வரிச் சட்டத்தின் 272பி பிரிவின்படி வருமான வரித் துறை அது உங்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கலாம். இதில் இருந்து தப்பிக்க மேலே குறிப்பிட்டுள்ள நடவடிக்கை மற்றும் செயல்முறைகளை உடனடியாக செய்து, இந்திய அரசங்கத்திற்குகீழ் மற்றும் வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் நீங்கள் கட்டுப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தி கொள்ளவும்.


Click it and Unblock the Notifications








