Home
News

Pan 2.0: ரூ.50 செலுத்தி QR Code பான் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. வீடு தேடி வரும்..

நாட்டில் பான் கார்டும் (pan card) ஒரு முக்கிய அரசு ஆவணமாக உள்ளது. இந்நிலையில் பான் 2.0 (PAN 2.0) திட்டத்தின் மூலம் நமது பான் கார்டுகளில் QR CODE இடம்பெற உள்ளன. குறிப்பாக இந்த திட்டம் பான் கார்டு மூலம் நாம் பெற உள்ள சேவைகளை எளிதாக மாற்ற உள்ளது. பின்பு புதிய பான் கார்டு விண்ணப்பிக்கும் மக்களுக்கு QR CODE உடன் கூடிய பான் கார்டு கிடைக்கும்.

அதேசமயம் ஏற்கனவே நான் பான் கார்டு வைத்திருக்கிறேன் என்பவர்கள், புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டாம். பான் கார்டு ரீ-பிரின்ட்டிற்கு மட்டும் விண்ணப்பித்தால் போதும். குறிப்பாக பான் கார்டு ரீ-பிரின்ட்டிற்கு விண்ணப்பிக்க இணையதளத்திற்குச் செல்வதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது.

ரூ.50 செலுத்தி QR Code பான் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

அதாவது வருமான வரித்துறை ஆனது Protean, UTIITSL ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு பான் கார்டுகளை வழங்குவதற்கும் மற்றும் அப்டேட் செய்வதற்கான அதிகாரத்தைக் கொடுத்துள்ளது. குறிப்பாக இதில் நீங்கள் எந்த நிறுவனத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அது சுலபம் தான் அதாவது உங்களது பான் கார்டை திருப்பிப் பார்த்தாலே, நீங்கள் எந்த நிறுவனத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை எளிமையாகத் தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?
அதாவது Protean-ல் விண்ணப்பிக்க வேண்டியவர்கள் www.onlineservices.nsdl.com என்ற இணையதளத்திற்கும், UTIITSL-ல் விண்ணப்பிக்க வேண்டியவர்கள் www.pan.utiitsl.com என்ற இணையதளத்திற்கும் செல்ல வேண்டும். அடுத்து வரும் பக்கத்தில் கேட்கப்பட்டிருக்கும் பான், ஆதார், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களைக் கொடுத்து சப்மிட் கொடுக்க வேண்டும்.

அதன்பின்பு திறக்கும் பக்கத்தில் வரும் அனைத்து தகவல்களையும் சரிபார்த்த பிறகு இ-மெயில், மொபைல் போன் அல்லது இரண்டிற்கும் இப்படி எதில் OTP வர வேண்டும் என்பதைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். பின்னர் பான் கார்டு வர வேண்டிய முகவரியையும் டிக் செய்துகொள்ளுங்கள். அடுத்து Generate OTP கொடுத்தால் ஒடிபி வரும் அதைப் பதிவு செய்தபின்பு ரூ.50 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

அதன்பின்பு உங்களுக்கு ஒரு ஓப்புகைச் சீட்டு கிடைக்கும், அதை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள், அடுத்த 24 மணி நேரத்தில், அதே இணையதளத்தில் நீங்கள் உங்கள் இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பின்பு 15-20 நாட்களில் புதிய பான் அட்டை உங்கள் வீட்டிற்கு வந்துவிடும்.

ரூ.50 செலுத்தி QR Code பான் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

அதேபோல் உங்கள் பான்கார்டில் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தவறாகப் பதிவாயிருந்தால் முதலில் அதனை மாற்ற வேண்டும், இதற்கான வசதி அந்த இணையதளத்திலேயே உள்ளது. பின்பு முகவரி மாறியிருந்தாலும் கூட உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து முகவரியை அப்டேட் செய்து கொள்ளலாம்.

குறிப்பாக ஆதார் எண் கொடுத்து கைரேகை வைத்தால் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். மேலும் டிஜிட்டல் லாக் மூலம் ஆதாரை லாக் செய்ய முடியும். அதேவசதி பான்கார்டிலும் கொண்டுவரப்படுகிறது. அதற்கு அச்சாரமாக பான்கார்டிலும் 'கியூஆர் கோடு' வழங்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
PAN 2.0: How to easily apply online for reprint with QR code
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X