விமானம் தயாரித்து வானில் பறந்த பாப்கார்ன் வியாபாரி: ஆனாலும் கைது.!
போலீசாரின் அனுமதி இல்லமால் விமானத்தில் பறந்து சோதனை செய்ததால் முகமதுவை கைது செய்ய போலீசார் ரூ.300 அபராதமும் வித்திதனர்.
பாகிஸ்தானை சேர்ந்த பாப்கார்ன் வியாபரி அரிஃப்வாலா என்பவர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது பயாஸ். சிறு வயது முதல் இவர் சொந்தமாக விமானம் தயாரிக்க வேண்டும் என்பது தான். குறிப்பாக இவர் பகலில் பாப்கார்ன் வியாபாரி,
இரவு நேரத்தில் செக்யுரிட்டி என உழைத்து பணம் சேர்த்து அவரது கனவை நினைவாக்கியுள்ளார். பின்பு இவர் விமானம் எப்படி உருவாக்க வேண்டும் என்பதை ஆன்லைனில் படித்தும், விசாரித்தும் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய வயது தற்போது 32-ஆக உள்ளது, சிறிய வயதில் விமானப்படையில் வேலையில் சேர வேண்டுமென்பது ஆசை, ஆனால் சூழ்நிலை அவருக்கு கைகொடுக்கவில்லை. பின்பு முகமது பள்ளி படிக்கும் கால்த்தில் தந்தை இறந்துபோக பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார். கிடைக்கும் வேலைக்கு சென்று தனது அம்மாவுக்கும், 5 உடன் பிறந்தவர்களுக்கும் உதிவியாக இருந்துள்ளார்.

சொந்தமான நிலத்தை விற்றார்
ஒரு கட்டத்தில் விமானப்படையில் சேர வேண்டும் என்பதையும் தாண்டி சொந்தமாகவும் விமானம் தயாரிக்க திட்டமிட்டார் முகமது, தனக்கு சொந்தமான நிலத்தை விற்றார், பின்பு ரூ.50-ஆயிரம் வங்கிக்கடன் பெற்றார், தான் சேமித்து வைத்த பணத்தை சேர்த்து சொந்தமாக ரூ.1லட்சத்தில் விமானம் ஒன்றை தயாரித்துவிட்டார் முகமது.

ரோடு வெட்டும் இயந்திரத்தில் இருந்து எஞ்சின்
குறிப்பாக ரோடு வெட்டும் இயந்திரத்தில் இருந்து எஞ்சின், ஆட்டோவின் டயர்கள் என கிடைக்கும் பொருட்களை வைத்துக்கொண்டு இணையத்தில் தகவல்களை சேகரித்து இந்த விமானத்தை தயாரித்ததாக முகமது தெரிவித்தார்.

கைது
பின்பு விமானத்தில் நான் பறக்கும் போது வேறு எதுவுமே என் மனதில் ஓடாது, என்று அவர் கூறியுள்ளார். ஆனால் போலீசாரின் அனுமதி இல்லமால் விமானத்தில் பறந்து சோதனை செய்ததால் முகமதுவை கைது செய்ய போலீசார்
ரூ.3000 அபராதமும் வித்திதனர்.

னுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார்
தற்சமயம் விமானத்துறையிடம் உரிய அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார் முகமது, மேலும் தன்னுடைய அடுத்தக்கட்ட முயற்சிகளுக்கு அரசு தொழில்நுட்ப உதவிகள் வழங்க வேண்டுமென்றும் கோர்க்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications