அக்னி ஏவுகணை வெற்றி.! இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் திட்டம்.!

இதற்காக இந்திய ராணுவ நிலைகள் மீது துல்லியமாக தாக்குவதற்காக, ஜி.பி.எஸ். தொழில் நுட்பத்துடன் கூடிய சிறிய ரக பீரங்கிகளை வாங்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

|

அக்னி ஏவுகணை-4 வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அக்னி ஏவுகணை வெற்றி.! இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் திட்டம்.!

இதற்காக இந்திய ராணுவ நிலைகள் மீது துல்லியமாக தாக்குவதற்காக, ஜி.பி.எஸ். தொழில் நுட்பத்துடன் கூடிய சிறிய ரக பீரங்கிகளை வாங்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏவுகணை சோதனை:

ஏவுகணை சோதனை:

இந்திய ராணுவ பயன்பாட்டுக்காக பல்வேறு வகையான ஏவுகணைகளை தயாரித்து வரும் மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், அவ்வப்போது அந்த ஏவுகணைகளை சோதித்து பார்க்கிறது.

  அக்னி-4 ஏவுகணை:

அக்னி-4 ஏவுகணை:

அந்த வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-4 ரக ஏவுகணைகளை தயாரிப்பதில் ராணுவ விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

20 மீட்டர் உயரமும், 17 டன் எடையும் கொண்ட அக்னி-4 ஏவுகணை 4,000 கி.மீ.க்கு அப்பால் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.

அக்னி-4 வெற்றி:

அக்னி-4 வெற்றி:

அக்னி-4 ஏவுகணை ஏற்கனவே 6 முறை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு இருக்கிறது. கடைசியாக கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி நடத்தப்பட்ட அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி கண்டது.

 7வதுமுறையாக வெற்றி:

7வதுமுறையாக வெற்றி:

இந்த நிலையில் நேற்று 7-வது முறையாக அக்னி-4 ஏவுகணை சோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் உள்ள நடமாடும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு அக்னி-4 ஏவுகணை செலுத்தப்பட்டது.
அந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இதன் மூலம் அக்னி-4 ஏவுகணையின் 7-வது சோதனையும் வெற்றிகரமாக அமைந்தது.

இந்தியா மீது தாக்குதல்:

இந்தியா மீது தாக்குதல்:

ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிடமும், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இதுபோன்ற ஆயுதங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய சிறிய ரக பீரங்கிகளை கொண்டு எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்க முடியும்.

ஆர்வம் காட்டி வருகின்றது:

ஆர்வம் காட்டி வருகின்றது:

மேலும் நகர்ந்து கொண்டிருக்கும் இலக்கை கூட இந்த வகை பீரங்கிகள் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை. மேலும் பீரங்கியை இயக்கி குண்டு வெளியேறிய பிறகும் கூட இலக்கை மாற்ற முடியும் என்று கூறப்படுகிறது. இவற்றை வாங்குவதற்கு தற்போது பாகிஸ்தானும் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் அறிவுறுத்தல்:

பாகிஸ்தான் அறிவுறுத்தல்:

உலகம் முழுவதும் உள்ள தங்கள் நாட்டுத் தூதரகங்களை தொடர்பு கொண்டு, ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்துடன் கூடிய சிறிய ரக பீரங்கிகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் குறித்து ஆராயுமாறு பாகிஸ்தான் அறிவுறுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Pakistani Plans To Accurately Attack Indian Military Positions : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X