பாகிஸ்தான் இணையதளத்தை முடக்கி அதிரவிட்ட இந்திய இளைஞர்.!
இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் மறுத்து வருகின்றது. மேலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் பாகிஸ்தான் அரசு செயல்பட்டு வருகின்றது. இது உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதலால் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ- முகமது என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் மறுத்து வருகின்றது. மேலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் பாகிஸ்தான் அரசு செயல்பட்டு வருகின்றது. இது உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பலி தீர்க்கும் விதமாக பாகிஸ்தான் இணையதளத்தை ஹேக் செய்து அதிரவிட்டுள்ளார் இந்தியா இளைஞர்.

44 வீரர்கள் பலி:
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 4500 வீரர்கள் வாகனங்களில் ஜம்மு காஷ்மீருக்கு சென்று கொண்டிருந்தனர். புல்வாமா பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி காரில் வெடி குண்டு மருந்துகளை நிரப்பி கான்வாயில் மீது மோதி வெடிக்க செய்தான். இந்த குண்டுவெடிப்பில் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்தியா கடும் கண்டனம்:
இந்தியா இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தது. மேலும், பாகிஸ்தான் பயங்கரவாத்தை ஆதரித்து வருவதால், அந்த நாட்டிற்கு வழங்கியிருந்த வர்த்தக நட்பு நாடு என்ற அந்தஸ்தையும் திரும்ப பெற்றது. மேலும் பாகிஸ்தானுகான இந்திய தூரையும் திரும்ப பெற்றுள்ளது.

அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா கண்டனம்:
இந்நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்த தாக்குதலுக்கு ஆழ்ந்த இரங்களையும், பாகிஸ்தானுக்கு எதிரான கண்டங்களையும் பதிவு செய்தன.

அமெரிக்க முழு ஆதரவு:
இந்தியா தனது பாதுகாப்புகாக எல்லை மீறியும் பயங்கரவாதிகளை சென்று அழிக்கலாம் என்று முழு ஆதரவையும் வழங்கியுள்ளது. இந்திய தூரகத்திற்கும் இது குறித்த செய்தியை அனுப்பியுள்ளது.

சர்வதேச நிதி முடக்கம்:
பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியை உடடினயாக நிறுத்த வேண்டும் என்று இந்தியா முயற்சி செய்கின்றது. பாகிஸ்தான் அரசு அந்த நிதியை தவறாக பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தி வருகின்றது என்று இந்தியா தரப்பிலும் பல்வேறு முறை குற்ற சாட்டும் வைக்கப்பட்டுள்ளது.

பயங்கர வாதிகளை ஒழிக்க முழு சுதந்திரம்:
பயங்கர வாதிகளை முழுமையாக ஒழிக்க இந்திய ராணுவத்திற்கு பிரதமர் மோடி முழுசுதத்திரத்தையும் வழங்கியுள்ளார். மேலும், பாக்கிஸ்தானில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளின் கூடாரங்களை அடியோடு வேறு இடத்திற்கு மாற்றியுள்ளது பாகிஸ்தான்.

இணையதளம் முடக்கம்:
பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் விவரங்கள் நீக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தை அணுகுவதில் நேற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இம்ரான் கான் விவரம் நீக்கம்:
இணைய பக்கத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் விவரங்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும் புகார் கூறப்பட்டது. இதை அடுத்து தகவல் தொழில்நுட்பக் குழு வரவழைக்கப்பட்டு, இணையதளத்தை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சதி? :
தங்கள் நாட்டின் இணையதளத்தை முடக்கியது இந்தியா தான் என்று பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகமது பைசல் குற்றம்சாட்டியுள்ளார். இது இந்தியாவின் சதித்திட்டம் என்று கூறியுள்ளது.

நாடு முழுவதும் கொந்தளிப்பு:
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றது. பயங்கரவாத்திற்கு குரல் கொடுத்து வரும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் நாடு முழுவதும் கொந்தளிப்பு வெடித்தது. பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்திலும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

பாகிஸ்தான் ராணுவ தளம் முடக்கம்:
மேலும், பாகிஸ்தானின் ராணுவ இணையதளத்தையும் ஹேர்க்கள் அதிரடியாக முடிக்கியுள்ளனர். இதனால் பாகிஸ்தான் ராணுவமும் திக்குமுக்காடி வருகின்றது. இது இந்தியஹேக்கர்களாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

இளைஞரின் தேசப்பற்று:
இந்த தாக்குதல் சம்பவம் நடந்து வெறும் 3 நாளில் பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகிய இணைதளங்களை அன்ஷால் சக்ஷேனா என்ற இளைஞர் இணைதளத்தை முடக்கியுள்ளார். இதனால் பாகிஸ்தான் திக்குமுக்காடியுள்ளது. மேலும், இந்த இளைஞரின் சேதப்பற்றும் இதில் இருந்து தெரிகின்றது.
மோடியை பின்தொடரும் இளைஞர்:
இந்த இளைஞர் பிரமோர் மோடியை டுவிட்டரில் பின்தொடர்ந்து வருகின்றார் என்பது குறிப்பிட தக்கது. அவர் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தனது ஹேக்கிங் கைவரியை காட்டியுள்ளார் என்பது குறிப்பிட தக்கது. மேலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டர்களையும் டுவிட்டரில் பதிவேற்றம் செய்து, அவர்களுக்கு தக்க நடவடிக்கையும் வாங்கி தந்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக பதிவிட்டு சிக்கிய
கர்நாடாவை சேர்ந்த மாணவி ஒருவர் பாகிஸ்தான் ஜெய்ஹோ என்று பதிவிட்டு இருந்தார். இதையும் இவர் சுட்டி காட்டிதால் போலீசாரின் விசாரணையில் இருக்கின்றார்.
சிக்கிய வாலிபர்:
ரவி என்ற இளைஞர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வதைளங்களில் பதிவேற்றம் செய்தார். தற்போது, போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை துவங்கியுள்ளனர்
கல்லூரி மாணவர்கள் நீக்கம்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் என்ஐஎம்ஸ் பல்கலைக்கழகத்தைக சேர்ந்த 4 மாணவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக பதிவேற்றம் செய்தால், அவர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இது அனைத்தும் ஹேர்க்கர் அன்சால் செய்த காரியத்தால் நடந்துள்ளது என்பது குறிப்பிட தக்கது.


Click it and Unblock the Notifications