Home
News

இந்தியர்களையே கலங்க வைக்கும் பாகிஸ்தானின் பரிதாபநிலை.. வெளியான பகீர் அறிக்கை!

பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இப்போது வெளியாகி உள்ள "பாகிஸ்தான் இன்டர்நெட் லேண்ட்ஸ்கேப் 2022" என்னும் அறிக்கையானது, அந்த நாட்டு மக்கள் மீதான கவலையை, உலக நாடுகளுக்கு இடையே மேலும் அதிகரித்துவிட்டது. அப்படி, அந்த அறிக்கையில் என்ன இருந்தது என்பது குறித்து இங்கு காண்போம்.

இந்தியாவையும் இன்டர்நெட் (Internet) சேவையையும் பிரிக்க முடியாது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு நாம்மிடையே இன்டர்நெட் பயன்பாடு கடந்த 10 ஆண்டுகளில் வியக்கத்தக்க வகையில் அதிகரித்துவிட்டது. இப்போது, வீட்டு பில்களை கட்டுவது முதல் வங்கி சேவைகளை பெறுவது வரையில் நமக்கு இன்டர்நெட் பிரதானமாகவிட்டது.

இந்தியர்களையே கலங்க வைக்கும் பாகிஸ்தானின் பரிதாபநிலை.. பகீர் அறிக்கை

இதற்கேற்ப டெலிகாம் (Telecom) நிறுவனங்களும், நாடு முழுவதும் போட்டிப் போட்டுக்கொண்டு இன்டர்நெட் சேவைகளை வழங்கி வருகின்றன. இப்போது 5ஜி சேவையும் பெரும்பாலான நகரங்களில் கிடைக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் கிராமங்கள்தோறும் 5ஜி சேவை கிடைத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

சொல்லப்போனால், 5ஜி சேவைக்கு அடுத்து இருக்கும் 6ஜி சேவையை வழங்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை கூட இந்திய அரசு செய்யத் தொடங்கிவிட்டது. ஆனால், நம்மை எதிரி நாடாக கருதும் பாகிஸ்தானில் இன்டர்நெட் சேவை என்பது இன்றளவும் மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஏற்கனவே, கல்வி, தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் பாகிஸ்தான் மிகவும் பின்தங்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் சில ஆண்டுகளாக மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால், அந்த நாட்டின் பிரதமர் கூட சமீபத்தில் பதவியை இழந்திருந்தார். இதுபோன்ற காரணங்களால், அந்த நாட்டில் வாழும் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானில் இன்டர்நெட் சேவை வழங்கல் குறித்த அறிக்கை வெளியாகி உலக நாடுகளை சற்று கலங்க செய்திருக்கிறது. பாகிஸ்தான் இன்டர்நெட் லேண்ட்ஸ்கேப் 2022 (Pakistan's Internet Landscape 2022) என்னும் அறிக்கை சமீபத்தில் வெளியானது. அந்த அறிக்கையில், பாகிஸ்தான் நாடானது உலகளவில் மோசமான இன்டர்நெட் சேவை வழங்கும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், அந்த நாட்டில் வாழும் மக்களில் 15 சதவிகிதம் பேருக்கு இன்றளவும் இன்டர்நெட் சேவை வழங்கப்படவில்லை. அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை. மீதம் உள்ள 85 சதவிகித மக்களுக்கும் சீரான இன்டர்நெட் வசதி வழங்கப்படுவது கிடையாது. இதனால், கரோனா காலங்களில் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரையில் ஆன்லைன் கல்வியை பெறாமல் தவித்துள்ளனர்.

இப்படி அந்த நாட்டு மக்கள் இன்டர்நெட் தொடர்பான எந்தவொரு வசதியை பெற வேண்டுமென்றாலும் மிகுந்த இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. கோடிக்கணக்கான மக்கள் இன்னும் இன்டர்நெட் சேவையை பயன்படுத்த தெரியாத நிலையிலேயே இருக்கின்றனர். இதனால் நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சியும் முன்னேற முடியாத சூழலில் உள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்குள்ள டெலிகாம் நிறுவனங்களும், பாகிஸ்தான் அரசின் ஒத்துழைப்பில்லாத காரணத்தால், எங்களால் சேவையை வழங்க முடியவில்லை என்று தெரிவிக்கின்றன. கராச்சி, இஸ்லாமபாத், லாகூர் போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமே சீரான இன்டர்நெட் வசதி கிடைக்கிறது.

இதுவும் நம் நாட்டுடன் ஒப்பிடுகையில் பல மடங்கு அதிக விலை கொண்டதாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டுமென்றால், வளர்ந்துவரும் நாடுகளுடன் பாகிஸ்தானை ஒப்பிடுகையில் அது 10 ஆண்டுகள் பின்தங்கியிருக்கிறது என்பதே உண்மை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Pakistan's Internet Landscape 2022 claims Pakistan among world's worst performers in internet access
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X