"அரியவகை சிறுத்தையின் உறுமும் வீடியோ" பாக்., பிரதமர் பதிவுக்கு கடும் விமர்சனம்- "இப்போ இது ரொம்ப முக்கியம்"
கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 45 வினாடிகள் கொண்ட வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சிறுத்தை சத்தமாக உறுமுகிறது. சிறிது நேரத்தில் இந்த சிறுத்தை மறைந்து விடுகிறது. அந்த டுவிட்டர் பதிவில் "கப்லு, ஜிபியில் வெட்கப்படும் பனிச்சிறுத்தையின் அரிய காட்சிகள்" என இம்ரான்கான் எழுதியுள்ளார். அந்த பதிவில் பனிச்சிறுத்தை குறித்த காட்சிகளை காண முடிகிறது. இந்த பதிவையடுத்து பிரதமர் இம்ரான் கானை சமூகவலைதள நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
45 வினாடிகள் கொண்ட வீடியோ
பிரதமர் இம்ரான் கான் 45 வினாடிகள் கொண்ட வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சிறுத்தை சத்தமாக உறுமுகிறது. இம்ரான்கானின் இந்த பதிவிற்கு டுவிட்டர் வாசிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதில் திரு கான்., நாட்டில் பெட்ரோல், எரியாவு மற்றும் மின்சாரம் விலை உயர்ந்து வருவதை எடுத்துக்காட்டும் வீடியோவை பதிவிட்டால் நல்லது என கோரியுள்ளனர்.
பனிச்சிறுத்தை உறுமும் காட்சி
பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள கப்லு என்ற இடத்தில் இருந்து பனிச்சிறுத்தை உறுமும் காட்சியையும், அதே இடத்தில் சில பனிச்சிறுத்தைகள் நடமாடும் காட்சிகளையும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவிற்கு கருத்து தெரிவித்த பயனர் ஒருவர், ஒட்டுமொத்த சமூகமும் பணவீக்கம் மற்றும் வறுமையை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில் பாக் பிரதமர் மட்டும் சுற்றுலாவில் தனது முழு அக்கறையையும் காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பாதுகாப்பாக இல்லை
மற்றொரு பயனர் ஒருவர், "பாகிஸ்தானில் மக்கள் பாதுகாப்பாக இல்லை, ஆனால் சிறுத்தைகள் அதிகரித்து வருகின்றன" என குறிப்பிட்டுள்ளார்.
உசாமா குர்ஷித் குரேஷி என்ற பயனர் கைபர் பத்துன்க்வாவில் உள்ளாட்சித் தேர்தலில் அவரது கட்சி சமீபத்தில் தோல்வியடைந்தது குறித்து பிரதமர் இம்ரான் கானை விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தானின் வேலையின்மை
பாகிஸ்தானின் வேலையின்மை 2017-18 இல் 5.8 சதவீதத்தில் இருந்து 2018-19 இல் 6.9 சதவீதமாக உயர்ந்துள்ளது என பாகிஸ்தான் புள்ளியல் அலுவலகம் வெளியிட்ட தொழிலாளர் படை ஆய்வு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டில் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் வேலையின்மை அதிகரித்தது, ஆண் வேலை விகிதம் 5.1 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் பெண் வேலையின்மை 8.3 சதவீதத்தில் இருந்து உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்களில் டாலருக்கு எதிராக பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு சமீபத்தில் 30.5 சதீவதம் குறைந்துள்ளது.

இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு
இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு எல்லா டிஜிட்டல் கம்பெனிகளுக்கும் சமூக இணைய தளங்களுக்கும் புதிய தணிக்கை விதிகளை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பில் சமூகவலைதளங்களில் பிரதானமாக திகழும் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் போன்ற நிறுவனங்களிடம் பாகிஸ்தானில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு நிறுவனங்கள் ஏதாவது குறிப்பிட்ட தகவல்கள் கேட்டால் அதை சமூகவலைதள நிறுவனங்கள் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. அதேபோல் குடிமக்களின் பாதுகாப்பு என்ற பெயரில் சமூக வலைதள நிறுவனங்கள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும், அங்கேயே தகவல்களைச் சேமிக்க தரவு சேவையகங்களை அமைப்பதையும் பாகிஸ்தான் அரசு கட்டாயமாக்கியது.

பாகிஸ்தான் அரசு வெளியிட்ட புதிய தணிக்கை விதிகள்
பாகிஸ்தான் அரசு வெளியிட்ட புதிய தணிக்கை விதிகளை 3 மாத காலத்துக்குள் அமுல் செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறிவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு 3 மில்லியன் டாலர் அபராதமாக விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் அரசின் அறிவிப்புக்கு எதிராக டிஜிட்டல் நிறுவனங்கள் சார்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அலுவலகத்துக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்து. அந்த கடிதத்தில் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் இவற்றைத்தவிர அமேசான் ஆப்பிள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களும் கையெழுத்திட்டன.


Click it and Unblock the Notifications