இந்தியா மீது பாயும் பாக்கிஸ்தான் ஹேக்கர்கள்! இந்த முறை டார்கெட் யார் மீது தெரியுமா?
இந்தியா - பாக்கிஸ்தான் இடையே பல காலமாக பல பிரச்சனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இப்போது பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் இந்தியாவின் முக்கியமான தகவல்களை திருட முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட APT36 என்றும் அழைக்கப்படும் ஹேக்கர் குழு, இந்திய ராணுவ ரகசியங்கள், ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற கல்வி நிலையங்களின் தகவல்களை திருட முயல்வதாக இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்திய தகவலை ஹேக் செய்வதற்காக "Revision of Officers posting policy" என்ற வைரஸ் ஃபைலை பாக்கிஸ்தான் ஹேக்கர்கள் உருவாக்கி, அதை சைலெண்டாக இந்தியர்கள் கிளிக் செய்யும்படி அனுப்பி, தகவல்களை திருட பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது.

ரிவிஷன் ஆப் ஆபிஸர்ஸ் போஸ்டிங் பாலிசி (Revision of Officers posting policy) என்ற இணைப்பை கிளிக் செய்வதன் மூலம், ஹேக்கர்கள் மக்களின் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் போன்ற கேட்ஜெட்டுகளில் எளிதாக உள் நுழைந்து, அதனுள் இருக்கும் அனைத்து விதமான தகவல்களையும் திருட முயல்வதாக கூறப்பட்டுள்ளது.
பாக்கிஸ்தானை தலமாக கொண்ட, இந்த ஹேக்கர் குழு இந்தியாவின் மதிப்புமிக்க கல்வி நிலையங்கள் மீதும் வைரஸ் தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. மே 2022 முதல், இந்த ஹேக்கர் குழு இந்தியாவில் உள்ள பல ஐஐடி மையங்கள், தேசிய தொழில்நுட்ப கல்வி நிலையங்களான என்ஐடி மையங்களை தாக்க துவங்கியுள்ளன.
பாக்கிஸ்தான் ஹேக்கர்கள் ஏன் இந்தியாவின் தலைசிறந்த வணிகக் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை குறிவைகின்றனர் என்பதற்கான காரணங்கள் நமக்கு இன்னும் சரியாக தெரியவில்லை. ஆனால், இந்த தாக்குதல்கள் 2022 ஆம் ஆண்டில் சைலெண்டாக துவங்கி, இப்போது 2023 முதல் காலாண்டில் தீவிரமடைந்து வருவதாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, பாக்கிஸ்தான் ஹேக்கர்களின் தாக்குதல் இந்த ஆண்டின் பிப்ரவரியில் உச்சத்தை தொட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஹேக்கிங் தாக்குதல் மிகவும் அதிநவீனமானது என்றும், இதன் மூலம் ஹேக்கர்கள் இதுவரை பல மோசடிகளை சந்தேகத்திற்கு இடமில்லாமல் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் முக்கியமான தகவல்களை ஹேக்கர்கள் சில காலமாக எளிதில் திருடி வருகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் முக்கியமான தகவல்களை லீக் செய்யும் படி இந்த குழு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்கிஸ்தான் ஹேக்கர்களின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க வழியே இல்லையா? என்ற கேள்வி இந்தியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்போதைக்கு, உங்கள் கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற கேட்ஜெட்ஸ்களின் சாப்ட்வேர் அப்டேட்களை தவறாமல் அப்டேட் செய்து வைப்பது, மிகவும் முக்கியமானது. சரியான அப்டேட் உடன் இருப்பது மட்டுமின்றி, சந்தேகத்திற்குரிய லிங்க்-களை கிளிக் செய்யாமல் இருப்பது மிகவும் பாதுகாப்பானது.


Click it and Unblock the Notifications








