டிரோன் மூலம் வான்வெளியில் விநியோகமாகும் போதை பொருட்கள்.!

Drug Smuggling, Pakistan, Drone, Smartphone, smartphone ,Technology, News, India, பாகிஸ்தான், டிரோன், ஸ்மார்ட்போன், தொழில்நுட்பம், செய்திகள், இந்தியா

|

உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களே புத்தகங்கள் மற்றும் உணவு பொருட்களை டிரோன் மூலம் விநியோகம் செய்யும் வழிமுறையை இதுவரை சோதனை மட்டுமே செய்து வருகின்றன. ஆனால் டெக் நிறுவனங்களை முந்தி, கடத்தல்காரர்கள் டிரோன் மூலம் போதை பொருட்களை விநியோகம் செய்ய துவங்கிவிட்டனர்.

ஆளில்லா டிரோன்கள் மூலம் வான்வெளியில் போதை பொருட்கள் கடத்தல்.!

பாகிஸ்தானில் இருந்து போதை பொருட்கள் இந்தியாவின் பஞ்சாப் எல்லை பகுதிக்குள் டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களின் மூலம் விநியோகம் செய்யப்படுகின்றன. எல்லை பாதுகாப்பு படையினர் அளித்திருக்கும் சமீபத்திய தகவல்களில் குர்தாஸ்பூர் கிராம எல்லைப்பகுதியில் பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்ட போதை பொருட்கள் டிரோன் மூலம் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விநியோகம்

விநியோகம்

தரையில் இருந்து சுமார் 200 மீட்டர் உயரத்தில் பறக்கும் இந்த டிரோன்கள் அதன் வாடிக்கையாளர்களுக்கு வினோத முறையில் போதை பொருள் விநியோகம் செய்து வந்தது தெரியவந்துள்ளது. எனினும் டிரோன் டிராக் செய்யப்பட்டதும், அது உடனடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டது.

இந்திய எல்லைக்குள்

இந்திய எல்லைக்குள்

இந்திய எல்லைக்குள் கண்டறியப்பட்ட டிரோன், தான் சுமந்து வந்த பையை விநியோகம் செய்யாமல் மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் கொண்டு சென்றவிட்டது. எனினும் போதை பொருள் கடத்த பயன்படுத்தப்படும் புதிய வழிமுறையை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர். இதேபோன்ற டிரோன்கள் சஹாரன் மற்றும் சண்டிகர் எல்லை பகுதிகளிலும் காணப்பட்டது.

புதிய வழிமுறைகள்

புதிய வழிமுறைகள்

சமீப மாதங்களில் கள்ளக்கடத்தல்காரர்கள் பயன்படுத்திய இரண்டாவது வித்தியாச வழிமுறை இது என மூத்த எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக ஆழ்கடல் நீச்சல் வீரர்களை கொண்டு இதுபோன்ற கடத்தல் மேற்கொள்ளப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.

கள்ளக்கடத்தல்காரர்கள்

கள்ளக்கடத்தல்காரர்கள்

பாதுகாப்பு படையினர் எத்தனை தீவிரமாக கண்கானித்து கடத்தல்களுக்கு பின்பற்றப்படும் பல்வேறு விசித்திர நடைமுறைகளை கண்டறிந்து வந்தாலும், கள்ளக்கடத்தல்காரர்கள் தொடர்ந்து வித்தியாச வழிமுறைகளை பயன்படுத்துகின்றனர். இருதரப்பிலும் இது தொடர்கதையாக இருக்கும் நிலையில், இவற்றுக்கு அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Pakistan drug smugglers skirt border fence with drones : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X