இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தான் நடவடிக்கை: இந்த செயலிகளுக்கு தடை!

|

ஒழுக்கமற்ற உள்ளடக்கத்தை கொண்டிருப்பதாக ஐந்து செயலிகளுக்கு பாகிஸ்தான் தொலைத்தொடர்பு கண்காணிப்புக் குழு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தடைக்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம்.

ஒழுக்கமற்ற உள்ளடக்கம்

ஒழுக்கமற்ற உள்ளடக்கம்

பாகிஸ்தானில் ஒழுக்கமற்ற உள்ளடக்கத்தை கொண்டிருப்பதாக டிண்டர், டேக்டு, ஸ்கவுட், கிரைண்டர், சே-ஹாய் ஆகிய ஐந்து செயலிகளுக்கு தடை விதித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முறையற்ற உள்ளடக்க பயன்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கத்தவறியதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம்

பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம்

இந்த தடை குறித்து பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து பார்க்கையில், பாகிஸ்தான் சட்ட விதிகளின்படி டேட்டிங் சேவைகள் நேரடியாக இணைய சந்திப்பு ஏற்படுத்தும் பயன்பாடுகளை அகற்றும்படி தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்ததாக தெரிகிறது.

டிண்டர், டேக்டு, க்ரைண்டர், சே-ஹாய், ஸ்கவுட்

டிண்டர், டேக்டு, க்ரைண்டர், சே-ஹாய், ஸ்கவுட்

மேலும் டிண்டர், டேக்டு, க்ரைண்டர், சே-ஹாய், ஸ்கவுட் ஆகிய செயலிகளின் முறையற்ற பயன்பாடுகளின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதால் இந்த அனைத்து செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிர்வாகங்கள் பதிலளிக்கவில்லை

நிர்வாகங்கள் பதிலளிக்கவில்லை

அதோடு இதுதொடர்பான அரசின் அறிப்புகளுக்கு குறிப்பிட்ட செயலிகளின் நிர்வாகங்கள் பதிலளிக்கவில்லை எனவும் இதன்காரணமாகவே செயலிகளின் பயன்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google எச்சரிக்கை! இந்த 6 ஆப்ஸ்களை உடனே டெலீட் செய்யுங்கள்! மீண்டும் ஜோக்கர் மால்வேர் தாக்குதல்!Google எச்சரிக்கை! இந்த 6 ஆப்ஸ்களை உடனே டெலீட் செய்யுங்கள்! மீண்டும் ஜோக்கர் மால்வேர் தாக்குதல்!

20 இந்திய வீரர்கள் வீரமரணம்

20 இந்திய வீரர்கள் வீரமரணம்

இந்திய சீன எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துதன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிட்டனர். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற குரல்கள் மேலோங்கி வருகின்றன.

இந்தியர்களின் தகவல்கள் சீனாவின் வசம்

இந்தியர்களின் தகவல்கள் சீனாவின் வசம்

அதேபோல் உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு வெளியான அறிவிப்பில், சில செயலிகள் மூலம் இந்தியர்களின் தகவல்கள் சீனாவின் வசம் சென்று கொண்டிருப்பதாகவும், இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கையை சீன மேற்கொள்ள வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தியா சீனா பிரச்சனைகளுக்கு நடுவில் இந்த செயலிகள் மூலம் பின்வாசல் வழியாக சீனா இந்தியாவுக்குள்ளான தகவல் தொடர்பை துண்டிக்க முயலும் எனவும் கூறப்பட்டது.

பல்வேறு நாடுகளும் முறையற்ற செயலிகளுக்கு தடை

பல்வேறு நாடுகளும் முறையற்ற செயலிகளுக்கு தடை

இதையடுத்து இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மை உள்ளிட்டவைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இந்திய அரசு ஏராளமான செயலிகளுக்கு தடை விதித்து வருகிறது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் முறையற்ற செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Pakistan Banned Tender, Grindr and 3 apps For Immoral Content

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X