பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்துடன் சேர்த்து இன்னும் பல பாகிஸ்தான் வலைத்தளங்களை ஹேக் செய்துள்ளனர்.

|

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பலரும் பாகிஸ்தான் நாட்டை சந்தேகத்துடன் பத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்திய ஹேக்கர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்துடன் சேர்த்து இன்னும் பல பாகிஸ்தான் வலைத்தளங்களை ஹேக் செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் இராணுவ வலைத்தளம்

பாகிஸ்தானின் இராணுவ வலைத்தளம்

நேற்று அதிகாலை வரை பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சக வலைதளம் மற்றும் பாகிஸ்தானின் இராணுவ அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் நன்றாக செயல்பட்டு கொண்டிருந்துள்ளது என்று செய்தித் தொடர்பாளர் டாக்டர் முகமது ஃபைசல் தெரிவித்துள்ளார்.

ஹேக்கர்கள் ஹேக்கிங்

ஹேக்கர்கள் ஹேக்கிங்

நடு இரவிற்கு பிறகு பாகிஸ்தான் இராணுவம் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் வலைத்தளங்கள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது, இதனால் பாகிஸ்தானை தவிர்த்து வெளி நாடுகள் எதுவும் அவர்களின் வலைத்தளங்களை அணுக முடியாதபடி ஹேக்கர்கள் ஹேக்கிங் செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் பல வலைத்தளங்கள் பயன்பாட்டில் இல்லை

பாகிஸ்தானின் பல வலைத்தளங்கள் பயன்பாட்டில் இல்லை

கூடுதலாக பாகிஸ்தானின் பல வலைத்தளங்களையும் ஹேக்கிங் செய்துள்ளனர். இதனால் நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளால் பாகிஸ்தான் வலைத்தளங்களை அணுக முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 இல் நடத்தப்பட்ட ஹேக்கிங்

2017 இல் நடத்தப்பட்ட ஹேக்கிங்

பாகிஸ்தான் நடத்திய முதற்கட்ட சோதனையில் இந்தியர்கள் தான் ஹேக்கிங் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதே போன்று 2017 ஆம் ஆண்டில், இந்திய ஹேக்கர்கள் குழு ஒன்று பாகிஸ்தான் வலைத்தளங்களை ஹேக்கிங் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது

இந்திய ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது

புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து மூன்றே நாட்களில் பாகிஸ்தான் இராணுவ வலைத்தளம் மற்றும் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்தின் வலைத்தளங்கள் இந்திய ஹேக்கர்களால்முடக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாக்கித்தானின் அலட்சிய பதில்

பாக்கித்தானின் அலட்சிய பதில்

புல்வாமா தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சமபவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடந்ததற்கு இந்தியாவின் கவனக்குறைவு தான் காரணம் என்று பாகிஸ்தான் தெரிந்துள்ளது. புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத குழு ஜெய்ஷ்-இ-முகமது தான் கரணம் என்பது தெரியவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Pakistan Army Foreign Ministry Websites Hacked Neighbour Blames India for Cyber Attack : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X