இந்தியா மீது அணு ஆயுத போர் : கூட்டு சேரும் பாக் - அமெரிக்கா..?!

|

சூப்பர் பவர் நாடுகளே, அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியை நவீன ஆயுதம், அணு ஆயுதம் என அழிவு சக்திகளை உருவாக்க பயன்படுத்திக் கொள்ளும்போது, வளரும் நாடான மற்றும் தீவிரவாத உற்பத்தி கிடங்கு என்று நம்பப்படும் பாகிஸ்தான், அதிநவீன தொழில் நுட்ப வளர்ச்சியையும், அறிவியலையும் அழிவு சக்திகாக பயன்படுத்துவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

உலகப்போர் உறுதி : அமெரிக்கா, ரஷ்யா, சீனா தயார்..!

அப்படியாக சமீப காலங்ககளாக அணு ஆயுத உற்பத்தியில் பாகிஸ்தான் காட்டும் அதீத ஆர்வமானது பிற உலக நாடுகளை சற்று சந்தேகிக்க வைத்துள்ளது, உஷார் நிலையை உருவாக்கி உள்ளது என்று கூட சொல்லாலம், முக்கியமாக இந்தியாவை..!

கருத்து :

கருத்து :

பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஐஸாஸ் சௌதிரி (Aizaz Chaudhry ) தங்கள் நாட்டின் அணு ஆயுதம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

விளைவு  :

விளைவு :

அதில் பாகிஸ்தான் குறைந்த அளவு விளைவை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என்று கூறியுள்ளார்.

'கோல்ட் -ஸ்டார்ட்' கொள்கை :

'கோல்ட் -ஸ்டார்ட்' கொள்கை :

மேலும், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ள இந்திய ராணுவத்தின் கொள்கையான 'கோல்ட் -ஸ்டார்ட்' (Cold-start doctrine) தான் நாங்கள் அணு ஆயுதங்களை உருவாக்க காரணம் என்றும் அறிவித்துள்ளார்.

முதல் முறை :

முதல் முறை :

பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் தந்திரமான அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதை பற்றி விளக்கம் அளித்துள்ளதும், மேலும் அது பாதுகாப்பிற்க்காக என்று கூறுவதும் இதுவே முதல் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அணு ஆயுத ஒப்பந்தம் :

அணு ஆயுத ஒப்பந்தம் :

மேலும் பாகிஸ்தான் பிரதமரின் அமெரிக்க பயணத்தின் போது எந்த விதமான அணு ஆயுத ஒப்பந்தமும் நடைபெறாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்திப்பு :

சந்திப்பு :

அக்டோபர் 22 ஆம் தேதி அதாவது நாளை அமெரிக்க அதிபர் ஒபாமாவை பாகிஸ்தான் பிரதமர் சந்திக்க உள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

தகவல் :

தகவல் :

ஆனால், அமெரிக்க அரசு அணு ஆயுத ஒப்பந்தம் ஒன்றுல் பாகிஸ்தானை கையெழுத்திட வைக்க அறிவுறுத்த போவதாக சில அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றது.

அணு வழங்கும் குழு :

அணு வழங்கும் குழு :

அமெரிக்காவின் திட்டப்படி பாகிஸ்தான் உடன் அணு ஆயுத ஒப்பந்தம் நடந்தால் பாகிஸ்தானின் இஸ்லமாபாத் நகரம் அணு வழங்கும் குழுவில் (Nuclear Suppliers Group) இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 போர் நோக்கம் :

போர் நோக்கம் :

மேலும், பாகிஸ்தானின் அணு ஆயுத உற்பத்தி யானது முழுக்க முழுக்க குற்றங்களை தடுத்து நிறுத்தும் பாதுகாப்பு விடயங்கள் சார்ந்த ஒன்றே தவிர, போர் நோக்கத்தினால் அல்ல என்பதை திட்டவட்டமாக ஐஸாஸ் சௌதிரி கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
அணு ஆயுத உற்பத்தியில் பாகிஸ்தான், இந்தியா மீது போர் தொடுக்க வாய்ப்பு. மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X