தற்கொலை மெஷின்: இதில் படுத்தால் ஒரே நிமிடம்தான்., வலியில்லா மரணம் உறுதி- சட்டப்பூர்வ அனுமதி அளித்த நாடு!

|

ஒரு நிமிடத்தில் வலியற்ற மரணம் வழங்கும் தற்கொலைக்கு உதவும் இயந்திரத்துக்கு சுவிட்சர்லாந்தில் சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எனனவென்றால் இயந்திரத்தை பயன்படுத்துபவர் லாக்-இன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் கண் இமைப்பதன் மூலம் கூட இந்த இயந்திரத்தின் உள் இருந்து இயக்க முடியும்.

வலியற்ற மற்றும் அமைதியான மரணம்

வலியற்ற மற்றும் அமைதியான மரணம்

ஒரு நிமிடத்திற்குள் வலியற்ற மற்றும் அமைதியான மரணத்தை உறுதியளிக்கும் சவப்பெட்டி வடிவ கேப்ஸ்யூல்-க்கு, சுவிட்சர்லாந்தில் சட்டப்பூர்வ மதிப்பாய்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் கூறினார். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் டாக்டர் பிலிப் நிட்ச்கே. இவர் பிரபலமான கருணைக்கொலை ஆர்வலர் ஆவார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை இயந்திரத்தை கண்டுபிடித்தார். ஆக்ஸிஜனை ஒரு முக்கியமான நிலைக்கு குறைப்பதன் மூலம் இதில் படுப்பவர்களை ஹைபோக்ஸியா மற்றும் ஹைபோகாப்னியா மூலம் மரணம் ஏற்பட செய்கிறது.

சார்கோ கேப்சூல் என அழைக்கப்படும் இயந்திரம்

சார்கோ கேப்சூல் என அழைக்கப்படும் இயந்திரம்

இந்த 3டி பிரிண்ட் இயந்திரம் ஆனது சார்கோ கேப்சூல் என அழைக்கப்படுகிறது. இந்த இயந்திரத்தை எக்சிட் இன்டெர்நேஷனல் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம் என்பதாகும். இந்த இயந்திரத்தை பயன்படுத்தும் நபர் லாக்-இன் சிண்ட்ரோம் நோயாளியாக உடலில் உள்ள அனைத்து தசைகளும் முற்றிலும் செயலிழந்த நிலையில் இருந்து பேச முடியாத சூழலில் இருக்கும் போதிலும் கண் சிமிட்டுவதன் மூலம் கூட இந்த இயந்திரத்தை இயக்க முடியும் என இன்டிபென்டன்ட் யுகே குறிப்பிட்டுள்ளது.

டாக்டர் டெத் என்று அழைக்கப்படும் இயந்திரம்

டாக்டர் டெத் என்று அழைக்கப்படும் இயந்திரம்

இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம், இந்த கேப்ஸ்யூல் மக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் படுத்திருப்பவர்கள் உயிரிழந்ததும் இந்த கேப்ஸ்யூலை அப்படியே சவப்பெட்டியாக பயன்படுத்தலாம். . டாக்டர் டெத் என்று அழைக்கப்படும் இந்த இயந்திரத்தை எக்ஸிட் இன்டர்நேஷனல் என்ற லாப நோக்கற்ற அமைப்பின் இயக்குனரான டாக்டர் பிலிப் நிட்ச்கே பின்னணியில் இருந்து தயாரித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு 1300 பேர் "உதவி தற்கொலை" மூலம் இறந்திருக்கின்றனர் என இயந்திரத்தை உருவாக்கிய எக்சிட் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

பட்டனை அழுத்தினால் என்ன நடக்கும்

பட்டனை அழுத்தினால் என்ன நடக்கும்

இந்த இயந்திரத்தின் செயல்பாடு குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் உள்ளே சென்று படுத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் இந்த இயந்திரம் அவர்களிடம் கேள்விகள் கேட்குமாம். கேள்விகள் விவரங்கள் தெரியவில்லை. இந்த கேள்வி டாஸ்க் முடிந்ததும். அதில் இருக்கும் பட்டனை அழுத்த வேண்டும். இந்த பட்டனை அழுத்திய சில விநாடிகளில் நாம் நமது இல்லை. இந்த பட்டனை அழுத்தினால் என்ன நடக்கும் என்ற கேள்வி வரலாம். இந்த பட்டனை அழுத்தியதும் உட்புறத்தில் முழுவதும் நைட்ரஜன் நிரப்பப்படுகிறது. இதன்மூலம் ஆக்ஸிஜன் அளவு 21 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அடுத்த சில விநாடிகளில் சுயநினைவை இழந்து கோமாவுக்கு அழைத்து செல்லப்படுகிறது. அடுத்த சில நிமிடத்தில் உயிர் பிரிந்துவிடும்.

சட்டப்பூர்வ அனுமதி

சட்டப்பூர்வ அனுமதி

இந்த இயந்திரத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்படுகிறது. ஹைபோக்ஸியா மற்றும் ஹைபோகாப்னியா, ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைட் குறைவை ஏற்படுத்தி இறப்பை சந்திக்க செய்கிறது. கருணைக் கொலை என்ற வார்த்தை கேள்விப்பட்டிருப்போம் அதற்கு சுவிட்சர்லாந்து அரசு இந்த இயந்திரத்தை பயன்படுத்த அனுமதி வழங்கி இருக்கிறது.

எதிர்பாராத சிரமங்களை தவிர்க்க நடவடிக்கை

எதிர்பாராத சிரமங்களை தவிர்க்க நடவடிக்கை

எதிர்பாராத சிரமங்களை தவிர்க்க அடுத்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் சர்கோவை பயன்படுத்துவதற்கு தயாராக இருக்கிறோம் என நம்புவதாகவும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாக நினைக்கிறோம் என டாக்டர் பிலிப் நிட்ச்கே தெரிவித்தார். இந்த இயந்திரம் தயாரித்ததற்கு நிட்ச்கே எதிர்மறையான எதிர்விளைவுகளை பெற்றுள்ளார். இது ஒரு புகழ்பெற்ற எரிவாயு அறை எனவும் சிலர் குறிப்பிட்டதாகவும் இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது வரை இரண்டு சார்கோ முன்மாதிரிகள் மட்டுமே இருப்பதாகவும் மூன்றாவது இயந்திரத்தின் 3டி முறையை எக்ஸிட் இன்டர்நேஷனல் தயாரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை தண்டனைக்குரிய குற்றம்

தற்கொலை தண்டனைக்குரிய குற்றம்

இந்தியா உட்பட பல நாடுகளிலும் தற்கொலை செய்து கொள்வது என்பது தண்டனைக்கு உரிய குற்றமாகும். ஆனால் சில நாடுகளில் தற்கொலை சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கப்படுகிறது. இதை கருணைக் கொலை என்றும் கூறலாம். மோசமான நோயால் பாதிப்படைந்தவர்கள், கடும் வலி, தீராத நோய் என்ற நிலையில் இருப்பவர்கள் தற்கொலை செய்து கொள்ள சில நாடுகள் அனுமதி வழங்குகிறது. இதில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக இருக்கும் சுவிட்சர்லாந்த் தற்கொலை செய்து கொள்ள சட்டப்பூர்வமாக அனுமதி வழங்குகிறது.

சவப்பெட்டி வடிவ கேப்ஸ்யூல்

சவப்பெட்டி வடிவ கேப்ஸ்யூல்

சவப்பெட்டி வடிவ கேப்ஸ்யூல் பயன்படுத்தி வலியற்ற மரணம் என்பதற்கு நிறுவனம் தயாராகி உள்ளது. இயலாதவர்களுக்கு வலியற்ற மற்றும் அமைதியான மரணத்தை வழங்க இந்த இயந்திரம் வலிவகுக்கிறது. வினாடிகள் கணக்கில் உள்ளே இருப்பவர்களை செயலிழக்கச் செய்து நிமிடக் கணக்கில் அவர்களின் உயிரை எந்த வலியும் இன்றி அமைதியாக பிரித்தெடுக்கிறது. அடுத்த ஆண்டு இந்த காப்ஸ்யூல் பயன்பாட்டுக்கு வரும். மேலும் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த கேப்ஸ்யூல் மக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் படுத்திருப்பவர்கள் உயிரிழந்ததும் இந்த கேப்ஸ்யூலை அப்படியே சவப்பெட்டியாக பயன்படுத்தலாம்.

தற்கொலைக்கு சட்டப்பூர்வ அனுமதி

தற்கொலைக்கு சட்டப்பூர்வ அனுமதி

சுவிட்டர்லாந்தில் தற்கொலைக்கு சட்டப்பூர்வ அனுமதி என்பதால் கடந்த ஆண்டில் சுமார் 1300 பேர் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு வலியில்லா மற்றும் அமைதியான மரணத்தை வழங்க இந்த கேப்ஸ்யூல் பயன்படுத்தப்படும் எனவும் இதுவரை இரண்டு கேப்ஸ்யூல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரசித்து வாழ வேண்டிய வாழ்க்கை

ஒரே பிறப்பு ஒரே உயிர்., பிறரின் உயிரை எடுப்பதற்கும் உரிமை இல்லை, தனது உயிரை மாய்த்துக் கொள்ளவும் உரிமை இல்லை. தற்கொலை எந்த செயலுக்கு தீர்வாகாது. அடுத்த பிறவி இதுதானா என்பதும் நிச்சயமில்லை. இந்த நிச்சயமில்லாத வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியையும் ரசித்தும் சிந்தித்தும் பிறருக்கு தீங்கு விளைவிக்காமல் வாழ்ந்தால், வாழ்க்கையின் முடிவுரையை இயற்கை எழுதும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Painless and Peaceful Death: SwitzerLand Legalised Sarco Suicide Machine

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X