பேஸ்புக்கில் இணைந்த கேரளா மெகா ஸ்டார் மம்முட்டி

By Karthikeyan
|
பேஸ்புக்கில் இணைந்த கேரளா மெகா ஸ்டார் மம்முட்டி

இந்தியாவில் பேஸ்புக் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதாவது பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் முதல் இந்தியாவின் சாமானிய மக்கள் வரை இந்த பேஸ்புக் சமூக வளைத் தளத்தில் பேஸ்புக்கில் இணைந்து வருகின்றனர். இதற்கு திரை நட்சத்திரங்களும் விதிவிலக்கல்ல. ஏற்கனவே பாலிவுட்டைக் கலக்கிவரும் மிகப் பெரிய நட்சத்திரங்களான சல்மான்கான், அமிதாப்பச்சன் மற்றும் சாரூக்கான் போன்றவர்கள் பேஸ்புக்கின் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் கேரள திரையுலகின் மெகா நட்சத்திரமான மம்முட்டியும் தற்போது இந்த பேஸ்புக்கில் உறுப்பினராக இணைந்திருக்கிறார். இதன் மூலம் தனது ஏராளமான ரசிகர்களுடன் நெருங்க இருக்கிறார். அதோடு தனது ரசிகர்களுக்கு தனது வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகள், தான் நடிக்கும் புதிய படங்கள் மற்றும் அவற்றின் போட்டோக்கள் ஆகியவற்றை பகிர இருக்கிறார்.

பேஸ்புக் மூலம் உலகம் முழுதும் பரந்து இருக்கும் தனது ரசிகர்களுடன் தொடர்பு கொள்வது தனக்கு அளவில்லாத ஆனந்தத்தைத் தருவதாக தனது பேஸ்புக் பக்கத்தில் மம்முட்டி தெரிவித்திருக்கிறார். மேலும் பேஸ்புக் மூலம் தனது ரசிகர்களுக்கு தரமான பொழுதுபோக்கு அம்சங்களை வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அதே நேரத்தில் தனக்குள்ள சமூக கடமைகளையும் இந்த பேஸ்புக் மூலம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். பேஸ்புக்கில் உறுப்பினராக இருப்பவர்கள் மம்முட்டியோடு தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் https://www.facebook.com/Mammootty இணைய முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X