சும்மா கிழி: மலிவு விலையில் அட்டகாச ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் அறிமுகம்

|

பப்லோ எஸ்கோபர் என்பவரை நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிய வாய்ப்பில்லை. இவர் வேறுயாறும் இல்லை அமெரிக்காவை கலக்கிய பிரபல கடத்தல் வியாபாரி, நிழல் உலக தாதா என பல பேர் உண்டு. ஆனால் அதேபோல், அவர் பிறந்த கிராம மக்கள் இவரை தங்களின் நாயகன் என்றும் இவர் மீது அளவற்ற மரியாதையும் வைத்துள்ளனர்.

ஊரை காப்பாற்றியவர் என்று கூறப்படுகிறது

ஊரை காப்பாற்றியவர் என்று கூறப்படுகிறது

காரணம் என்னவென்றால் இவரது குடும்பம் மட்டும் ஏழை அல்ல., இவரது சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் வறுமையில் தத்தளித்துள்ளனர். இதனால் பணக்காரர்கள் மீது வெறுப்புணர்வு கொண்ட எஸ்கோபர், முதலில் பணக்காரர்களின் கல்லறைகளை தோண்டி, அதில் பொறுத்தப்பட்டிருந்த விலைமிகுந்த கிராணைட் கற்களை விற்க தொடங்கியுள்ளார். பின் காலப்போக்கில் அமெரிக்காவை கலக்கிய கொகைன் வியாபாரியாகவும் திகழ்ந்துள்ளார். அந்த வருமானப் பணத்தில் தான் பிறந்த சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பணத்தை அள்ளி அள்ளி கொடுத்துள்ளார். இவர் டிசம்பர் 2 1993 அன்று மரணமடைந்தார்.

சகோதரர் ராபர்ட் எஸ்கோபர் அறிமுகம்

சகோதரர் ராபர்ட் எஸ்கோபர் அறிமுகம்

இந்த நிலையில் இவரது சகோதரரான ராபர்ட் எஸ்கோபர், எஸ்கோபர் இன்க் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இவரது குறிக்கோள் ஆப்பிள் நிறுவனத்தை வெற்றி பெற வேண்டும் என்பதே. தற்போது அதை சாத்தியப்படுத்தும் விதமாக ஸ்மார்ட் போன் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உங்களை பிரமிக்கவைக்கும் நம்பமுடியாத 2019ம் ஆண்டின் விண்வெளி புகைப்படங்கள்!உங்களை பிரமிக்கவைக்கும் நம்பமுடியாத 2019ம் ஆண்டின் விண்வெளி புகைப்படங்கள்!

அட்டகாச டிஸ்பிளே வசதி

அட்டகாச டிஸ்பிளே வசதி

எஸ்கோபர் நிறுவனம் இரண்டாக மடிக்கக் கூடிய ஃபோல்டபிள் மாடல் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் டிஸ்பிளே வடிவமைப்பு அனைவரும் கவரும் விதமாக மிகவும் நேர்த்தியாக உள்ளது. இது நார்மல் மோடில் கைக்கு அடக்கமான ஸ்மார்ட் போனை போன்றும் இரண்டாக பிரித்து பயன்படுத்தினால் ஃபோல்டபிள் போனாகவும் பயன்பெறுகிறது.

 ஆப்பிள் நிறுவனத்துக்க போட்டி

ஆப்பிள் நிறுவனத்துக்க போட்டி

ஃபோல்டபிள் போனை பல்வேறு நிறுவனங்களும் தொடர்ச்சியாக அறிவித்து வருகிறது. ராபர்ட் எஸ்கோபர், இந்த சிறப்பம்சங்களும், குறைவான விலையும் கொண்ட ஃபோல்டபிள் போனை சாம்சங் நிறுவனத்துக்கு எதிராக வெளியிடாமல் ஆப்பிள் நிறுவனத்தை குறிவைத்து வெளியிடுகிறார்.

1,00,000 யூனிட்டுகள் விற்பனை

1,00,000 யூனிட்டுகள் விற்பனை

எஸ்கோபர் நிறுவன வெளியீட்டின்படி இந்த போன் முதலில் 1,00,000 யூனிட்டுகள் விற்பனைக்க வருகிறது. அதேபோல் இது ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போனாகவும், ஆக்டோ கோர் 2.8 ஜிஹெட்ஜ் சிபியூ-வும் பொறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இதில் குவால்காம் ஸ்னாப்டிராப்டிராகன் 8 சீரிஸ்-ல் இயங்குகிறது.

வீடு தேடி வருவோம்: ஆபாசம் படம் பார்த்தவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை- அதிரடி நடவடிக்கைவீடு தேடி வருவோம்: ஆபாசம் படம் பார்த்தவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை- அதிரடி நடவடிக்கை

கேமரா வடிவமைப்பு

கேமரா வடிவமைப்பு

கேமரா வடிவமைப்பு என்று பார்த்தால், 16 எம்பி முன்புறம், 18*20 எம்பி முன்புறம் என இரண்டு பக்கத்திலும் செல்பி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. அதாவது இரண்டாக மடித்தால் முன்புறம் பக்கம் திருப்பினால் சென்சார் மூலமாக அதுவே தாம் வைத்திருக்கும் பக்கம் ஆன் ஆகி விடும். அதன்படி இரண்டு புற கேமராக்கள் உள்ளது. மற்றும் இரண்டுபுறமும் டூயல் எல்இடி பிளாஸ் வசதி உள்ளது.

ரேம், ரோம் வசதி

ரேம், ரோம் வசதி

இந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட் போனானது, 6 ஜிபி ரேம், 128 சேமிப்பு வசதியிலும், 8 ஜிபி ரேம் 512 ஜிபி சேமிப்பு வசதி என இரண்டு வசதிகளில் கிடைக்கிறது. அதேபோல் இதில் 256 ஜிபி வரை எக்ஸடர்னல் மெமரி வசதியும் உள்ளது.

 டிஸ்பிளே வடிவமைப்பு

டிஸ்பிளே வடிவமைப்பு

ஸ்க்ரீன் அளவு 7.8-அங்குலம், AMOLED, FHD + (1920 x 1444 பிக்சல்கள்), 4: 3 அம்ச விகிதம் (விரிவாக்கப்பட்ட பயன்முறை). அதேபோல் உட்புறத்தில் 4,000 எம்ஏஹெச் பேட்டரி வசதி உள்ளது. 5 வோல்ட் சார்ஜர் பயன்பாடு. சிம்- இரட்டை சிம் (நானோ சிம் + நானோ சிம்). சென்சார்கள்- கைரேகை சென்சார், மற்றும் கருப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் இயக்க முறை ஆன்ட்ராய்டு9.0 ஆகும்.

 கவர்ச்சிகர விலையில் அறிமுகம்

கவர்ச்சிகர விலையில் அறிமுகம்

சாம்சங் போன்ற நிறுவனத்தின் ஃபோல்டபிள் ஸ்மார்ட் போன்கள் 2000 டாலர் அதாவது 1 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த ஸ்மார்ட் போனின் விலை 499 டாலருக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்படுகிறது. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பு படி சுமார் 35 ஆயிரம் ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

'ஆல்பபெட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக 'சுந்தர்பிச்சை' நியமனம்!<br />'ஆல்பபெட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக 'சுந்தர்பிச்சை' நியமனம்!

ஆப்பிள் நிறுவனத்தை வெல்வேன்

ஆப்பிள் நிறுவனத்தை வெல்வேன்

ஆப்பிள் நிறுவனத்தை வெல்வது தான் ராபர்ட் எஸ்கோபரின் நோக்கம் எனவும் சில்லரை வியாபாரிகளை தவிர்க்கும் நோக்கில் இந்த போனை எஸ்கோபர் நிறுவன அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வாங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த நிறுவனத்தின் போன் அறிமுகம் விளம்பரமானது

News Source - www.gadgetmatch.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
pablo escobars brother made a folding phone: Escobars to rival Samsung, Apple?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X