பூமியை பாதுகாக்கும் படலத்தில் இப்படியொரு மாற்றமா? காரணம் இதுதான்.!

|

வெளிநாடுகளில் மட்டுமே கொத்து கொத்தாக ஒரே நாளில் கொரோனா நோயாளிகள் உயர்ந்து வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் அதே நிலை நீடித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லை தளர்வுகளை அளிப்பதா என்பது குறித்து மாநில முதல்வர்களுடன் இன்று மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார்.

தடுத்து நிறுத்தி

மேலும் இந்த பூமியை பாதுகாக்கும் படலமாக ஓசோன் திகழ்கிறது, அதாவது சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்களை தடுத்து நிறுத்தி மனிதர்கள் மீது படாமல் பார்த்துக் கொள்கிறது. இது தோல் புற்றுநோய் ஏற்படுத்தும் அளவிற்கு ஆபத்தானது. இந்நிலையில் பூமியில் உருவாகும் அதிகப்படியாக மாசுபாட்டால் ஓசோன் படலம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.

மனிதர்கள் பாதிக்கப்படும்

இதன்விளைவாக ஆங்காங்கே ஓட்டைகள் விழுவதால் புற ஊதாக்கதிர்களால் மனிதர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது, இதையொட்டி சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்து செயல்படுத்திவருகின்றன.

இனிமையாக நேரத்தை செலவிட., மலிவு விலை ஹெட்செட்கள்: எது சிறந்தது தெரியுமா?இனிமையாக நேரத்தை செலவிட., மலிவு விலை ஹெட்செட்கள்: எது சிறந்தது தெரியுமா?

 ஒரு சிறிய வகையில் நன்மையை அளித்துள்ளது

மேலும் தொழில்நுட்ப வளர்ச்சியால் மாசுபாடுகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன, இந்த நிலையில் மனித உயிர்களை கொத்துகக் கொத்தாக கொண்று குவித்து வரும் கொரோனா மறுபுறம் ஒரு சிறிய வகையில் நன்மையை அளித்துள்ளது.

பணியாற்ற அறிவுறுத்தி உள்ளனர்.

அதுஎன்னவென்றால், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது, எனவே பல்வேறு மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர், பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் பல நாடுகளில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன, சாலைகளில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் குறைந்துள்ளது, எனவே இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு பெரிதும் குறைந்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம் வட துருவத்தில் ஒசோன் படத்தில் ஓட்டை விழுந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

மாறக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது

பின்பு இது வரலாறு காணாத அளவுக்கு மிகப்பெரிய ஓட்டை என்றும், இந்த ஓட்டை பெரிதாகி தெற்கு நோக்கி நகரும்பட்சத்தில் மனிதர்களுக்கு பேராபத்தாக மாறக்கூடும் என்று கூறப்பட்டது.

Reliance JioMart சேவை அறிமுகம்! Whatsapp மூலம் மளிகை சாமான் வாங்கலாம் - எப்படி ஆர்டர் செய்வது?Reliance JioMart சேவை அறிமுகம்! Whatsapp மூலம் மளிகை சாமான் வாங்கலாம் - எப்படி ஆர்டர் செய்வது?

ஐரோப்பிய செயற்கைகோளான கோபர்நிகஸ்

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி ஆர்க்டிக் பகுதியில் உள்ள பிரம்மாண்ட ஓசோன் படலத்தின் ஓட்டைமூடப்பட்டிருப்பதாக ஐரோப்பிய செயற்கைகோளான கோபர்நிகஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

 முதல்முறையாக வடதுவரத்தில் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்திருப்பது

மேலும் கடந்த 2011-ம ஆண்டு முதல்முறையாக வடதுவரத்தில் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்திருப்பது கண்டறியப்பட்டது.ஆனால் இது மகிவும் சிறிய அளவில் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

News Source:theweek.in

Best Mobiles in India

English summary
Ozone layer hole over Arctic closes, confirm scientists: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X