கதவு திறந்திருக்கும்: களமிறங்கிய OYO- தனிமைப்படுத்துவதில் இனி சிரமம் வேண்டாம்., நாங்க இருக்கோம்!
கோவிட்-19 தொற்று பரவல் காலத்தை கருத்தில் கொண்டு OYO ஒரு புதிய அம்சத்தை பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. கோவிட் நோயாளிகள் தனிமைப்படுத்தல் மற்றும் தனிநபர்களுக்கான தனிமைப்படுத்தும் வசதிகளை சுகாதார அமைப்புடன் நாட்டில் அறிமுகம் செய்துள்ளது.

OYO Care அம்சம்
OYO நிறுவனம் தனது மொபைல் பயன்பாட்டில் OYO Care அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தனிமைப்படுத்தல் மற்றும் கோவிட்-19 நோயாளிகள், தனிநபர்கள் தனிமைப்படுத்தல் வசதியை சுகாதார அமைப்போடு ஆதரிக்க உள்ளது.

சுயமாக தனிமைப்படுத்தும் வசதி
இதுகுறித்து OYO நிறுவனர் மற்றும் சிஇஓ ரித்திஷ் அகர்வால் தெரிவிக்கையில், OYO பராமரிப்பு முயற்சியை நாங்கள் தொடங்கியுள்ளோம். இதன்மூலம் எங்கள் விருந்தினர்கள் OYO-வை தேர்ந்தெடுத்து சுயமாக தனிமைப்படுத்த முடியும். பாதிப்படையாத சுகாதார பணியாளர்கள், நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் தனிமைப்படுத்த தேவைப்படும் நபர்களுக்கு பாதுகாப்பான இடத்தை வழங்குவதன் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். நம்பிக்கையுடன் இருங்கள், தங்கியிருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்துதலில் சிக்கல் வேண்டாம்
தனிப்படுத்தல் தேவைப்பட்டாலும் அதற்கான சரியான இடம் இல்லாமல் நீடிக்கும் நிலை தொடர்ந்தது. காரணம் பல வீடுகளில் ஒரே அறை, ஒரே கழிவறை என இருக்கும் சூழலில் தனிமைப்படுத்தலில் சிக்கல் ஏற்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் சிறியளவு பணம் செலவிட்டாலும் உற்றார்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

சுய தனிமைப்படுத்தல் தேர்வு
OYO கேர் 30-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், தனியார் துறை நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுடன் இணைந்து சுய தனிமைப்படுத்தல், சுகாதார பாதுகாப்பு வல்லுநர்கள், முன்னணி தொழிலாளர்கள் ஆகியோருக்கான தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள், கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட உற்றார்களுக்கும் பாதுகாப்பான தங்கும் இடத்தை OYO வழங்குகிறது.

தங்களது கதவுகள் திறந்திருக்கும்
OYO பராமரிப்பு மையம், பயனர்கள் தங்களை பாதுகாப்பாக தனிமைப்படுத்துவதற்கான இடங்களை மருத்துவமனைக்கு அருகிலேயே குறிப்பிட்ட இடங்களில் வழங்குகிறது. மருத்துவமனைக்கு அருகிலேயே முன்னணி தொழிலாளர்களுக்கும் தங்களது கதவுகள் திறந்திருக்கும் என OYO நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தடுப்பூசி விவரங்கள்
இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசி விவரங்கள் குறித்து பார்க்கையில் இதுவரை இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே கிடைக்கிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிகள் ஆகும். இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ரஷ்யாவின் ஸ்பூட்னிக், மே மாத தொடக்கம் முதல் கிடைக்கும் என எதிபார்க்கப்படுகிறது.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 28 ஆம் முதல் முன்பதிவு செய்யப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டார். மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. முதல்கட்டமாக மருத்துவ பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கும், இரண்டாவது கட்டமாக 60 வயது மேற்பட்டவர்களுக்கும் அடுத்தாக 45 வயது மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா இரண்டாம் அலையில் ஆக்ஸிஜன் சப்ளை தட்டுப்பாட்டால் இந்தியா திக்குமுக்காடி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், மத்திய மாநில அரசுகள், காவல்துறையினர், ஊடகத்தினர் உள்ளிட்டோர் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

கொரோனா தொற்று இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. காய்ச்சல், சளி, இருமல், உடல்வலி, கடும் சோர்வு, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை கொரோனா தொற்று அறிகுறி எனவும் இந்த தொற்றுகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுபடியும் மருத்துவர்களை அணுகும்படியும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications