OnePlus யூசர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட்! பின்னியெடுக்கும் OxygenOS அப்டேட்! புதிதாக என்ன?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் யூசர்களுக்கு அதிரடி அப்டேட்டை கொடுத்துள்ளது. அதிலும், ஒன்பிளஸ் 11 (OnePlus 11) மற்றும் ஒன்பிளஸ் 10 டி (OnePlus 10T) ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் யூசர்களுக்கு டபுள் ட்ரீட் என்றே சொல்ல வேண்டும். இதுகுறித்த விவரம் இதோ.
இந்தியாவில் ஒன்பிளஸ் போன்களுக்கு இருக்கும் வரவேற்பை பற்றி சொல்லித் தெரிய வேண்டியது கிடையாது. ஆப்பிள் (Apple), சாம்சங் (Samsung) போன்களுக்கு அடுத்தப்படியாக ஒன்பிளஸ் போன்கள் பெரிதும் பேசப்படுகின்றன. ஏனென்றால், இந்த போன்களின் டிசைனும், அதில் கொடுக்கப்படும் கேமரா அந்த லெவலில் இருக்கும். அதேபோல மற்ற அம்சங்களையும் குறைக்கூறிவிட முடியாது.

இவற்றுக்கெல்லாம், ஒருபடி மேலே இருப்பது என்னவென்றால், அது ஒன்பிளஸ் போன்களின் ஆக்ஸிஜன்ஓஎஸ் (OxygenOS) மட்டுமே. இந்த ஓஎஸ் பிரத்யேகமாக பல அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஒஎஸ் பயன்படுத்தியே, அதிகப்படியான யூசர்களை ஒன்பிளஸ் நிறுவனம் பிடித்தது. இதனாலேயே, ஆக்ஸிஜன்ஓஎஸின் அடுத்தடுத்த அப்டேட்களுக்கு அதன் வாடிக்கையாளர்கள் வெகுவாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இப்போது, ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 (OxygenOS 13.1) அப்டேட் முக்கியமான அம்சங்கள் உடன் இந்தியாவில் வெளியாகியிருக்கிறது. ஒன்பிளஸ மாடல்களில் அடுத்தடுத்து கொடுக்கப்பட்டு வருகிறது. இப்போது, ஒன்பிளஸ் 11 மற்றும் ஒன்பிளஸ் 10 டி போன்களுக்கு பல்வேறு புதிய அம்சங்களுடன் ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 வந்திருக்கிறது. பேட்டரி லைப், கேமரா ஸ்டேபிலிட்டி, செக்யூரிட்டி உள்ளிட்ட பல்வேறு அப்டேட்கள் வந்துள்ளன. இதில் என்னென்ன உள்ளன. அடுத்தடுத்து இந்த அப்டேட்டை பெறும் ஒன்பிளஸ் யூசர்கள் அதில் என்ன எதிர்பார்க்கலாம் உள்ளிட்ட முழு தகவல்கள் பின்வருமாறு.
ஒன்பிளஸ் 11 ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 அப்டேட் : ஒன்பிளஸ் 11 போன்களில், ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி சிஸ்டம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதேபோல பேட்டரி லைப்பை குறைக்கும், செயல்பாடுகளை தவிர்க்க அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளது. மொபைல் நெட்வொர்க்கிங் கனெக்டிவிட்டியில் துண்டிப்பில்லாத வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதேபோல ப்ளூடூத் டிவைஸ்களை கனெக்ட் செய்யும்போது, ஏற்படும் தாமதத்தை குறைக்கவும், நிலைத்தன்மையை மேம்படுத்தவும் அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 10 டி ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 அப்டேட்: இந்த அப்டேட் ஒன்பிளஸ் 10 டி போன்களின் கேமரா, பேட்டரி மற்றும் சிஸ்டம் செயல்திறனில் மேம்பாட்டை கொண்டுவந்துள்ளது. அந்த வகையில், நீடிக்கும் பேட்டரி திறனுக்கு ஏற்றவாறு, ஆப்ஸ் பயன்பாடுகளை நிர்வாகிக்கும். இந்த போன்களில் பயன்படுத்தாத ஆப்கள் டேட்டா எடுப்பதை தவிர்க்கும்.
கேமராவில், ஆட்டோ போகஸ், கலரிங் என்ஹான்ஸ்மெண்ட் உள்ளிட்டவற்றில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த அப்டேட் அடுத்தடுத்த போன்களின் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications