இதுலயும் போலியா: சூழ்நிலையை பயன்படுத்தி போலி ஆக்ஸிஜன் விற்பனை- உஷார்!

|

பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுவதை தொடர்ந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவை அதிகரித்து வருகிறது. இதை சாதகமாகக் கொண்டு போலி ஆக்ஸிஜன் செறிவூட்டல்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. போலி ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் விற்கப்படும் அத்தகைய நிறுவனங்கள் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆக்ஸிஜன் தட்டுபாடு

மேலும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுபாடு இருப்பதை சாதகமாக பயன்படுத்தி சில போலி நிறுவனங்கள் ஆக்ஸிஜன் கருவிகளை விற்பதாகக் கூறி பணம் சம்பாதித்து வருகின்றன. நிபூலிஜெர்ஸ், ஹ்யூமிடிஃபையர்ஸ் (nebulizers, humidifiers) போன்றவற்றை ஆக்ஸிஜனர் எனவும் போலியான ஆக்ஸிஜன் கருவிகளை போலி நிறுவனங்கள் சமூகவலைதளம், வாட்ஸ்அப் மூலமாக விற்பனை செய்து வருகின்றன. அதிகாரப்பூர்வ ஆக்ஸிஜன் சாதனங்களை கண்டறிந்து வாங்கும்படியும் இந்த போலி ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உயிரை காக்காது எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவல்

கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. நாட்டின் மருத்துவ கட்டமைப்பு சரிந்து வருகிறது. மருத்துவ பற்றாக்குறைகள் ஏற்பட்டு வருகிறது. இதை சரிசெய்ய பல்வேறு துறைகளில் இருந்து இந்தியாவுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இதற்கிடையில் அடுத்த சில நாட்களில் ஆஸ்திரேலியா, சீனா, ஜெர்மனி, ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேஸ்ட், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 15 நாடுகளில் இருந்து சப்ளைகள் இந்தியாவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேஸ்புக், வாட்ஸ்அப் குழுக்கள்

சமூகவலைதளங்களில் சில நபர்களால் போலித் தகவலும் வதந்திகளும் பரப்பப்பட்டு வந்தாலும் உதவி தேடும் பயனர்களுக்கு சமூகவலைதளம் பிரதான உதவித்தளமாக இருந்து வருகிறது. பேஸ்புக், வாட்ஸ்அப் குழுக்களும் ஆக்ஸிஜன், மருத்துவ படுக்கைகள் உள்ளிட்ட உதவிகளுக்கு ஒருவருக்கொருவரை இணைக்க உதவி வருகிறது.

இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசி விவரங்கள்

இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசி விவரங்கள் குறித்து பார்க்கையில் இதுவரை இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே கிடைக்கிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிகள் ஆகும். இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ரஷ்யாவின் ஸ்பூட்னிக், மே மாத தொடக்கம் முதல் கிடைக்கும் என எதிபார்க்கப்படுகிறது.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 28 ஆம் முதல் முன்பதிவு செய்யப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டார். மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. முதல்கட்டமாக மருத்துவ பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கும், இரண்டாவது கட்டமாக 60 வயது மேற்பட்டவர்களுக்கும் அடுத்தாக 45 வயது மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

File Images

Best Mobiles in India

English summary
Oxygen Shortage in Hospitals: Fake Oxygen Sale in Market

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X