இந்தியாவில் 43,000 கிராமங்களில் செல்போன் நெட்வொர்க் இல்லை! தமிழ்நாடு?

குறிப்பாக இந்தியா முழுவதும் 6லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன, தமிழ்நாட்டில் 15 ஆயிரம் கிராமங்கள் உள்ளன.

|

இந்தியா முழுவதும் தொலைதொடர்பு வசதியில் மிகவும் முன்னேறிவிட்டது என்று நினைக்கிறோம், ஆனால் இந்தியாவில் இருக்கும் பல்வேறு கிரமாங்களில் கம்பியில்லா செல்போன் நெட்வொர்க் வசதி இன்றுவரை சென்று சேரவில்லை.

இந்தியாவில் 43,000 கிராமங்களில் செல்போன் நெட்வொர்க் இல்லை! தமிழ்நாடு?

குறிப்பாக கிரமாங்களை மேம்படுத்த மத்திய அரசு எவ்வளவு பணம் செலவிடுகிறது என்றும் பரவலாக கேள்விகள் எழுப்பப்பட்டன, மேலும் இந்தியா முழுவதும் ஸ்மார்ட்போன், பீச்சர் போன் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது, அதே சமயம் அனைத்து மக்களும் இந்த போன் மாடல்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

43ஆயிரம் கிராமங்கள்:

43ஆயிரம் கிராமங்கள்:

பின்னர் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற சேவைகளை இந்தியாவில் உள்ள மக்கள் அதிகளவில் பயன்படுத்தி விருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இது போன்ற சேவைகளை பயன்படுத்த சரியான நெட்வொர்க் வசதி வேண்டும் ஆனால், இந்தியாவில் 43ஆயிரம் கிராமங்களில் சரியான இணைய சேவை இல்லை என்கிற தகவல் வெளிவந்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா

டிஜிட்டல் இந்தியா

பிரதமர் மோடி அவர்கள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார், மேலும் அந்த சமயம் அவர் தெரிவித்தது என்னவென்றால் இந்த டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் 120 கோடி இந்தியர்களும் தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்டு புதுமை படைப்பார்கள் என்பதை கணவு காண்கிறேன் என்றார்.

நெட்வொர்க் வசதி

நெட்வொர்க் வசதி

சில நாட்களுக்கு முன்பு மக்களவையில் நடந்த விவாதத்தில் இந்தியா முழுவதும் எத்தனை கிரமாங்களுக்கு கம்பியில்லா செல்போன் நெட்வொர்க் வசதி சென்றுசேரவில்லை என்றும் பின்பு கிரமாங்களை மேம்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் எவ்வளவு பணம் செலவிடுகிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அமைச்சர் மனோஜ் சின்ஹா

அமைச்சர் மனோஜ் சின்ஹா

இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, இந்தியா முழுவதும் ஏறத்தாழ 43,000 கிராமங்களில் செல்போன் நெட்வொர்க் இல்லை, இந்த கிராமங்கள் பெரும்பாலும் நக்சலைட்கள் இருக்கும் மாநிலங்களில் அமைந்திருக்கின்றன. இந்த மாநிலங்களின் நலனுக்காக 7,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.

தமிழ்நாடு:

தமிழ்நாடு:

குறிப்பாக இந்தியா முழுவதும் 6லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன, தமிழ்நாட்டில் 15 ஆயிரம் கிராமங்கள் உள்ளன, இதில் 83 கிராமங்களில் இதுவரை செல்போன் சேவை வழங்கப்படாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிக்கை

அறிக்கை

மேலும் நக்சலைட்களின் போராட்டங்கள் அதிகமுள்ள மாநிலங்களாக கருதப்படுபவை, ஜார்கண்ட், மஹாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், ஒடிஷா, தெலங்கானா,பீஹார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் செல்போன் சேவை மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் குiவாக தான் இருக்கிறது என்று அமைச்சர் மனோஜ் சின்ஹாவின் அறிக்கை தெரிவிக்கிறது.

 ஒடிஷா

ஒடிஷா

இதில் ஒடிஷா-வில் இருக்கும் 47 கிராமங்களில் ஏறத்தாழ 10ஆயிரம் கிராமங்களில் செல்போன் சேவை முற்றிலும் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் சண்டிகர், டமான் டியு, புதுச்சேரி, டெல்லி போன்ற மாநிலங்களை சேர்ந்த அனைத்து கிராமங்களிலும் செல்போன் சேவை மிகச் சிறப்பாக உள்ளது. குறிப்பாக கேரளாவில் மட்டும் அனைத்து கிராமங்களும் செல்போன் சேவையால் இணைக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Over 43000 villages in India without mobile services Telecom Minister Manoj Sinha: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X