Home
News

200 மில்லியன் ட்விட்டர் பயனர்களின் முக்கிய தகவல் லீக்.! பாதிப்பு பட்டியலில் உங்கள் பெயரும் இருக்கா?

200 மில்லின் Twitter பயனர்களின் மெயில் ஐடி ஆன்லைனில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நீங்களும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறீர்களா என்பதை செக் செய்வது எப்படி என்பது குறித்தும் பார்க்கலாம்.

இஸ்ரேலிய சைபர் செக்யூரிட்டி

இஸ்ரேலிய சைபர் செக்யூரிட்டி

இஸ்ரேலிய சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ஹட்சன் ராக் என்ற கண்காணிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் அலோன் கால் லிங்க்டினில் இந்த கசிவு குறித்த தகவலை தெரிவித்துள்ளார். இந்த ட்விட்டர் ஹேக் என்பது தான் பார்த்த குறிப்பிடத்தக்க கசிவுகளில் ஒன்றாகும் என பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

200 மில்லியன் பயனர்கள் மெயில் ஐடி கசிவு

200 மில்லியன் பயனர்கள் மெயில் ஐடி கசிவு

200 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பிற முக்கிய டேட்டாக்களை ஹேக்கர்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்த பாதுகாப்பு ஆய்வாளர்களின் கருத்துக்களை சற்று விரிவாக பார்க்கலாம். ஹேக்கர்கள் 200 மில்லியன் ட்விட்டர் பயனர்களின் மின்னஞ்சல் ஐடிகளை ஆன்லைன் ஹேக்கிங் மன்றத்தில் விற்றுள்ளனர். இந்த நிகழ்வு நிறைய ஹேக்கிங், டார்கெட் ஃபிஷிங் மற்றும் டாக்ஸிங் ஆகியவற்றை உருவாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த தகவலுக்கு ட்விட்டர் தரப்பில் இருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை.

ஆபத்தான ஹேக் இது

ஆபத்தான ஹேக் இது

இஸ்ரேலிய சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ஹட்சன் ராக் என்ற கண்காணிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் அலோன் கால் லிங்க்ட்இனில் இந்த கசிவு குறித்த தகவலை பதிவிட்டுள்ளார்.

அதில், டேட்டா பேஸில் ட்விட்டர் பயனர்களின் 235,000,000 தனிப்பட்ட பதிவுகள் மற்றும் அவர்களின் மின்னஞ்சல் முகவரிகள் உள்ளன, இவை துரதிர்ஷ்டசமாக நிறைய ஹேக்கிங், ஃபிஷிங் மற்றும் டாக்ஸிங் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். இது நான் பார்த்த முக்கியமான கசிவுகளில் ஒன்று என கேல் குறிப்பிட்டுள்ளார்.

பாதிப்பு பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா?

பாதிப்பு பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா?

உங்கள் மின்னஞ்சல் ஐடி திருடப்பட்டதா என்பதை எப்படி அறிந்துக் கொள்வது என்ற தகவலை இந்தியா டுடே தளம் பகிர்ந்துள்ளது.

https://haveibeenpwned.com/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

இதில் நீங்கள் Twitter இல் உள்நுழைய பயன்படுத்திய உங்கள் மெயில் ஐடி அல்லது தொலைபேசி எண்ணைத் பதிவிடவும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரி திருடப்பட்டதா இல்லையா என்பதை இணையதளம் உங்களுக்குக் காண்பிக்கும்.

ட்விட்டர் தலைமை நிர்வாக பதவி

ட்விட்டர் தலைமை நிர்வாக பதவி

ட்விட்டர் தலைமை நிர்வாக பதவியில் இருந்த மஸ்க், அதில் பல மாற்றங்களை செய்து வருகிறார். ஆயிரக்கணக்கான ட்விட்டர் ஊழியர்கள் பணி நீக்கம், ட்விட்டர் ப்ளூ ப்ரீமியம் சந்தா சேவை கட்டணம் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கணக்கு மீட்டெடுத்தல் என பல அதிரடி மாற்றங்களை செய்தார்.

சிக்கலை சந்திக்கும் ட்விட்டர் நிறுவனம்..

சிக்கலை சந்திக்கும் ட்விட்டர் நிறுவனம்..

ட்விட்டரை வாங்கிய நாளில் இருந்து எலான் மஸ்க் தொடர்ந்து சிக்கல்களையும் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். சரி, ட்விட்டரில் லாபம் காணுவார் என எதிர்பார்த்தால் அதிலும் சரிவை சந்தித்து வருகிறார். அதேபோல் கலிபோர்னியாவில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் அலுவலகம் 1.36 லட்சம் டாலர் வாடகை செலுத்தாமல் இருப்பதாக அதன்மீது வழக்கு தொடரப்பட்டது. மறுபுறம் இரண்டு தனி விமானங்களுக்கு வாடகை செலுத்தவில்லை என ட்விட்டர் மீது தனியாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

மஸ்க் நடத்திய வாக்கெடுப்பு

மஸ்க் நடத்திய வாக்கெடுப்பு

அதேபோல் எலான் மஸ்க் ட்விட்டரில் ஒரு கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தினார். Twitter தலைமை நிர்வாக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்ற விரும்பவில்லை என Elon Musk முன்னதாகவே குறிப்பிட்டிருந்தார். அதன்படி தான் ட்விட்டர் சிஇஓ பதவியில் இருந்து விலகவா என வாக்கெடுப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பில் 57 சதவீதம் பேர் ஆம் விலக வேண்டும் என்றே வாக்களித்தனர். இந்த நிலையில் தற்போது ட்விட்டர் ஹேக் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இது எலான் மஸ்க்கிற்கு இன்னும் தலை வலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல மாற்றங்களை செய்த மஸ்க்

பல மாற்றங்களை செய்த மஸ்க்

எலான் மஸ்க், இனி டெஸ்லா இன்க், ஸ்பேஸ்எக்ஸ், தி போரிங் நிறுவனம், நியூரோலிங்க் மற்றும் மஸ்க் அறக்கட்டளை போன்றவற்றில் பெரிய அளவில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் தலைமை நிர்வாக பதவியில் இருந்து மஸ்க் விலகினாலும், அதில் செய்ய வேண்டிய அனைத்து மாற்றங்களையும் துரிதமாக செயல்பட்டு செய்துவிட்டார் என்பதே நிதர்சனமான உண்மை. அதாவது, பல தோல்வியுற்ற முயற்சிகளுக்கு பிறகு எலான் மஸ்க் இறுதியாக Twitter ப்ளூ சந்தா சேவையை பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தி உள்ளார். ப்ளூ டிக் உள்ளிட்ட பல அம்சங்களை பயன்படுத்த பயனர்கள் இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

More from GizBot

Best Mobiles in India

English summary
Over 200 million Twitter Users Mail Address Leaked Online: Is your name on the vulnerability list?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X