Home
News

இனி ரேஷன் கடையில் எதுவும் கிடைக்காது.. 2 கோடி கார்டுகள் ரத்து.. காரணம் இதுதான்.. மத்திய அரசு தகவல்..

கடந்த ஐந்து ஆண்டுகளில் அதாவது 2020 முதல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் 2.49 கோடி ரேஷன் கார்டுகள் (ration card) ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் நிமுபன் ஜெயந்திபாய் பம்பானியா எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார். அதில் இந்தியாவில் தற்போது 20 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருக்கிறது. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ரேஷன் கடைகள் மூலம் சுமார் 80 கோடி மக்களுக்கு மத்திய அரசு இலவச உணவு தானியங்களை வழங்கி வருகிறது. மேலும், 0.79 கோடி பேரை கூடுதலாக இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவர வாய்ப்புள்ளது.

இனி ரேஷன் கடையில் எதுவும் கிடைக்காது.. 2 கோடி கார்டுகள் ரத்து..

இந்நிலையில் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சியின் விளைவாக, 2020 மற்றும் 2025 க்கு இடையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தோராயமாக 2.49 கோடி ரேஷன் கார்டுகளை அகற்ற முடிந்துள்ளது. அதுவும் போலி கார்டுகள், தகுதியற்ற பயனாளிகள், e-KYC முரண்பாடுகள்,பயனாளிகளின் இறப்பு மற்றும் நிரந்தர இடம்பெயர்வு போன்ற காரணங்களின் அடிப்படையில் அவை நீக்கப்பட்டுள்ளன.

ஆனால் ரேஷன் கார்டுகளை தவறாக ரத்து செய்ததாகப் பயனாளிகளிடம் இருந்து அரசாங்கத்திற்கு எந்த ஒரு குறிப்பிட்ட புகார்களும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போலி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டதன் மூலம் சரியான பயனாளிகளுக்கு உணவுப் பொருட்கள் கிடைத்துள்ளது. அதேபோல் ஆதார் அட்டை வைத்துள்ள அனைத்து பயனர்களுக்கும் ஒரு புதிய வசதி கிடைக்க உள்ளது. இது குறித்த தகவல்களையும் இப்போது பார்க்கலாம்.

அதாவது சமீபத்தில் வெளியான தகவலின்படி, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை வீட்டில் இருந்தபடியே ஆதார் மொபைல் செயலி மூலம் மாற்றிக்கொள்ளும் வசதி விரைவில் கொண்டு வர உள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆதார் அப்டேட்

முகவரி, மொபைல் எண் என ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் பெரும்பாலும் ஆதார் மையங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள் போன்ற இடங்களுக்குத் தான் உரிய ஆவணங்களுடன் மக்கள் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் இந்த இடங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே தான் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சிக்கல்களைத் தீர்க்க ஆதார் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை, ஆதார் செயலி வாயிலாக மாற்றிக் கொள்ளும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய உளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

இனி ரேஷன் கடையில் எதுவும் கிடைக்காது.. 2 கோடி கார்டுகள் ரத்து..

ஆதார் செயலி மூலம் ஆதாரில் உள்ள மொபைல் எண்ணை வீட்டில் இருந்தபடியே இருந்தபடியே OTP மற்றும் முக அங்கீகாரம் மூலம் மாற்றிக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. எனவே இனி ஆதார் மையங்களில் மக்கள் வரிசையில் காத்திருக்க அவசியம் இருக்காது.

மேலும் ஆதார் சேவையை விரிவுபடுத்தவும், பொது மக்களுக்கு எளிதாக கிடைக்கவும் ஆதார் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஆதார் கார்டின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் ஆதார் ஆணையம் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த சில ஆண்டுகளிலும் மட்டும் இறந்தவர்களின் 2 கோடி நபர்களின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Over 2 crore ration cards cancelled in India, they will no longer get ration benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X