உஷார் மக்களே! 100 மில்லியனுக்கும் அதிகமான டெபிட் & கிரெடிட் கார்டு பயனர்களின் தகவல் டார்க் வெப்பில் லீக்..
100 மில்லியனுக்கும் அதிகமான கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களின் முக்கிய தகவல்கள், இருண்ட வலைத்தளம் என்று அழைக்கப்படும் ஹேக்கர்களின் இருண்ட பக்கமான டார்க் வெப் பக்கத்தில் கசிந்துள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர் அதிகாரி மக்களைக் எச்சரித்துள்ளார். பிஷ்ஷிங் போன்ற தாக்குதல்கள் இந்த பயனர்களின் மேல் நடக்கக்கூடும் என்பதனால் மக்கள் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களே உஷார்
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களின் முழு பெயர்கள், தொலைப்பேசி எண்கள் மற்றும் அட்டைதாரர்களின் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் அவர்களின் அட்டைகளின் முதல் மற்றும் கடைசி நான்கு இலக்கங்களுடன் கூடிய மாஸ்கிங் செய்யப்பட்ட கார்டு விபரங்கள் ஆகியவை இப்போது டார்க் வெப்பில் லீக் ஆகியுள்ளது. இதை மோசடி செய்ய துடிக்கும் ஹேக்கர்கள் விலை கொடுத்து வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.

அமேசான், மேக்மைட்ரிப், மற்றும் ஸ்விக்கி பயன்படுத்தியவர்கள் தகவல் லீக்
அமேசான், மேக்மைட்ரிப், மற்றும் ஸ்விக்கி உள்ளிட்ட இந்திய மற்றும் உலகளாவிய வணிகர்களுக்கான பரிவர்த்தனைகளைச் செயலாக்கும் பணம் செலுத்தும் தளமான ஜஸ்பேவுடன் (Juspay) இது தொடர்புடையதாகத் தெரிகிறது. பெங்களூரை தளமாகக் கொண்ட இந்த தொடக்க நிறுவனம், ஆகஸ்ட் மாதத்தில் அதன் சில பயனர்களின் முக்கிய தரவுகள் எதிர்பார்க்கா சூழ்நிலையில் சமரசம் செய்யப்பட்டுள்ளது என்பதை ஒப்புக் கொண்டது.

மாஸ்கிங் செய்யப்பட்ட அட்டை எண்கள் லீக்
டார்க் வெப்பில் வெளியாகியுள்ள தரவுகள் பெரும்பாலும் மார்ச் 2017 முதல் ஆகஸ்ட் 2020 வரை நடந்த ஆன்லைன் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடையது என்று தெரியவந்துள்ளது. பல இந்திய அட்டைதாரர்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் அவர்களின் அட்டை காலாவதி தேதிகள், வாடிக்கையாளர் அடையாளங்கள் மற்றும் மாஸ்கிங் செய்யப்பட்ட அட்டைகளின் முதல் மற்றும் கடைசி நான்கு இலக்கங்களுடன் கூடிய அட்டை எண்கள் ஆகியவை வலைத்தளத்தில் கசிந்துள்ளது.

ஃபிஷிங் தாக்குதலுக்கு வாய்ப்பு
இருப்பினும், குறிப்பிட்ட பரிவர்த்தனை அல்லது ஆர்டர் விவரங்கள் எதுவும் இந்த கசிவின் போது வெளியாகவில்லை இல்லை. பாதிக்கப்பட்ட அட்டைதாரர்கள் மீது ஃபிஷிங் தாக்குதல்களை நடத்துவதற்கு வாய்ப்புள்ளது என்றும், டம்பில் கிடைக்கும் தொடர்பு தகவலுடன் இந்த தகவல்களை ஸ்கேமர்கள் பயன்படுத்தினால் விவரங்களை இணைத்து பிஷ்ஷிங் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று பாதுகாப்பு அதிகாரி எச்சரித்துள்ளார்.

லீக் ஆனா 10 கோடி பதிவுகள் இவை தான் - ஜஸ்ட்பே தலைவர்
இருப்பினும் ஜஸ்ட்பே நிறுவனத் தலைவர் கூறுகையில், ''முழுமையான அட்டை எண்கள், நிதி நற்சான்றிதழ்கள் அல்லது பரிவர்த்தனை தரவு எதுவும் லீக் ஆகவில்லை, பெயர் குறிப்பிடப்படாத மின்னஞ்சல், மொபைல் எண்கள் மற்றும் காட்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மாஸ்கிங் அட்டைகளின் தகவல்கள் மட்டுமே லீக் ஆகியுள்ளது. அதிலும், மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண் தகவல்கள் 10 கோடி பதிவுகளில் ஒரு சிறிய பகுதி மட்டுமே கசிந்துள்ளது.

பாதுகாப்புடன் பத்திரமாக உள்ளது
டார்க் வேப்பிலை வெளியாகியுள்ள 10 கோடி பதிவுகள் முழுமையான கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு அட்டை விவரங்கள் அல்ல என்பதை மக்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும் வேண்டும் என்றும், சுமார் இரண்டு கோடி பதிவுகள் தான் மாஸ்கிங் அட்டை விபரங்களைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். பயனர்களின் முழுமையான அட்டை விபரங்கள் வேறு சர்வரில் முழுமையான பாதுகாப்புடன் பத்திரமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications